இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடகரான SPB அவர்கள் 1969 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, அதாவது ஆயிரம் நிலவே வா என்ற பாடலில் ஆரம்பித்து அண்ணாத்த அண்ணாத்த என்ற ரஜினியின் பாடல் வரை பாடிய பாடல்களிருந்து 1270 தமிழ்ப் பாடல்களைக் தேர்வு செய்து நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த Vn. Chef. G. Kumaresan அவர்கள் SPB அவர்களின் உருவத்தை மைக்ரோ நேம் ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.
Zoom and Zoom 🙂
இச்சாதனையை புரிவதற்கு நம் குமரேசன் அண்ணாவிற்கு பத்து மணி நேரம் தேவைப்பட்டது.
அவர் மீது கொண்ட தீராத மரியாதை, அன்பு, பற்று, இவற்றின் காரணமாக அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் என்னுடைய சிறிய அர்ப்பணிப்பு இந்த ஓவியம். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் பாடல்கள் இந்த உலகத்தை விட்டு மறையாது என்று நம் Chef குமரேசன் அவர்கள் கூறினார்.
இப்படைப்பையும், குமரேசன் அவர்களின் பேட்டியையும் பல ஊடகங்கலும், தொலைக்காட்சிகளும் இன்று வெளியிட்டன.
நம் சமூகத்தில் பல செய்திகள் தினமும் உலா வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில முக்கிய செய்திகளை பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொண்டு அப்டேடடாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில், அன்றாட முக்கிய செய்திகளை தினமும் சரியாக இரவு ஒன்பது மணிக்கு Google Podcasts வாயிலாக தொகுத்து வழங்குகிறார் முனு குல கோத்திரத்தை சேர்ந்த திருமதி. சங்கீதா ஶ்ரீனிவாசன் அவர்கள்.
எந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக் காப்பாற்றிய பெண் தான் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் என்று வணங்கப்படுகிறார்.
ஆந்திர மாநிலம் கோதாவரி நதி கரையில் வைஸ்ய மக்களின் குலதெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ வாசவி அன்னையின் அவதார தினம் இன்று.
அன்னை சக்தி தேவி சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வேண்டிய நிலை உருவானது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரையருகே இருக்கும் பெனுகொண்டா நகரத்தில் குசுமஸ்ரேஷ்டி – குசுமாம்பிகை தம்பதிகளுக்கு தெய்வத்திருமகளாக அவதரித்தார் ஸ்ரீவாசவி.
குசுமாம்பிகா என்பது அன்னையின் இயற்பெயர். அழகிய மங்கையாக வளர்ந்த அன்னையைக் கண்டு ஆசைப்பட்டான் விஷ்ணுவர்த்தனர் என்ற அண்டை நாட்டு அரசன். தனக்குத் திருமணம் செய்து தராவிட்டால் அந்த ஊரையே அழித்து விடுவதாகவும் மிரட்டினான். ஊரே கூடி அன்னை வாசவி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற நிலையில் ஊரையும், தனது இனத்தையும் காக்க ஸ்ரீ வாசவி தீயில் பாய்ந்தார்.
அக்னி பிரவேசத்திற்கு பின் ஶ்ரீ வாசவி, அன்னை ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக விஸ்வரூப தரிசனம் வழங்கிய காட்சி
ஶ்ரீ வாசவி தேவியுடன் 102 கோத்திரத்திற்கும் தலா ஒரு தம்பதி வீதம் 204 நபர்கள் அக்னி பிரவேசம் செய்தனர். அக்னி பிரவேசத்திற்கு பின் ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக காட்சியளித்து விஸ்வரூப தரிசனத்தை வழங்கினார். தியாகத்தின் அடையாளமான, வைஸ்யர்களின் குல தெய்வமான ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை இந்த நாளில் வணங்கி அருள்பெறுவோம்.
“Live To Serve” என்கிற கோட்பாட்டுடன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பல உன்னத சேவைகளை செய்து கொண்டிருக்கும் Vasavi Clubs International தற்பொழுது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நம் ஆர்ய வைஸ்ய சமூக மக்களுக்கு உதவும் நோக்கில் COVID Helpline சேவையை தொடங்கியுள்ளனர்.
“Vasavi Pranadhata” எனும் COVID Help Line திட்டம் தற்பொழுது District V 501 A கீழ் இயங்கும் நகரங்களான கோவை, மதுரை, கரூர், சேலம், பொள்ளாச்சி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தேனியில் தொடங்கப்பட்டுள்ளது.
“Vasavi Pranadhata” – COVID Help Line திட்டத்தை பற்றி Dist V 501 A ஆளுநர் திருமதி. Vn லக்ஷ்மி பாலாஜி அவர்கள் கூறுவதை கேளுங்கள்:
ஆந்திராவை சேர்ந்த பிரபல மருத்துவர் Dr. CV. சுப்ரமணியம் அவர்கள் கொரோனாவின் தற்போதைய நிலையை பற்றியும், நோயாளிகள் சந்திக்கும் இன்னல்களை பற்றியும் கூறியவை Deccan Chronicle என்னும் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
மேலும், இக்கொரோனா தொற்று வணிக தொழிலை மையமாக கொண்ட வைஸ்ய சமூக மக்களின் மத்தியில் மிக கடுமையாக தாக்குகின்றது என்றும் அதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் கொரோனா ஏன் மிக அதிக அளவில் பரவுகிறது என்பதை கண்டிப்பாக ஆராய்ந்து அதனின் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றினால் நம் ஆர்ய வைஸ்ய மக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து, தடுப்பூசியை செலுத்தி கொரோனாவை வீழ்த்துவோம்! நம் சமூகத்தை பாதுகாப்போம்!! ஜெய் வாசவி 🙏
வைஸ்ய சமுதாயத்தை சேர்ந்த இளம் சாதனையாளர் ஸ்ரிஷ்டி, தனது 20-வது வயதிலேயே உலக அரங்கில் பல சாதனைகளை புரிந்து ஆர்ய வைஸ்ய சமூக மக்களின் யூத் ஐகானாகவும், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். அவரின் சாதனைகள் சில உங்கள் பார்வைக்கு.
BRICS CCI என்பது சர்வதேச அமைப்பாகும். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ப்ரிகா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியதாகும். 2021 பிரிக் மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது.
2017 , 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியா மற்றும் கனடா நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பூப்பந்து போட்டிகளில் ஸ்ரிஷ்டி அவர்கள் வெற்றி பெற்று, 135 கோடி மக்களின் பிரதிநிதியாக இந்திய கொடியை உயர்த்தி பிடித்துள்ளார்.
ராஜா ஜூபுடி மற்றும் மாதுரி ஜூபுடி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மாதுரி அவர்களும் பூப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். பல சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். இப்பொழுது அவருடைய வழியை பின்பற்றி அவரது மகள் முத்திரை பதித்து வருகிறார். எட்டு வயதில் பூப்பந்து மைதானத்தில் காலடி வைத்த அவர், சர்வதேச வீரர் புல்லேலா கோபிசந்த் அவர்களால் மெருகேற்றப்பட்டார். 2011 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் தன் முதல் வெற்றியை பெற்றார். இதன் பின் தினமும் 8 முதல் 12 மணி நேரம் தொடர் பயிற்சி மூலம் தொடர் வெற்றிகளை கண்டார்.
புதிய இலக்கு…
விளையாட்டில் சோபித்த ஸ்ரிஷ்டி, படிப்பிலும் கெட்டிக்காரர். கீதம் பல்கலைகழகத்தில் இராண்டாம் ஆண்டு பொறியியல் இள நிலை படிக்கும் இவர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை வென்று தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.
படிப்பு, விளையாட்டு தவிர சமூக பணியிலும் முன்னிலை வகிக்கிறார். இப்பணிகளில் கவனம் செலுத்தி பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்னும் நோக்கில் தன்னுடைய விளையாட்டினை துறந்தார்.
பின்னர், ஹாபிடட் ஹுமானிட்டி என்ற சர்வதேச அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பில் பிரபல நட்சத்திரங்கள் ஜான் அப்ரகாம், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் ஆகியோர் தூதராக உள்ளனர்.
BRICS தூதராக….
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றில் முன்னேற்ற பாதை அமைத்துக் கொள்ள ஒருங்கிணைப்பே பிரிக்ஸ் எனப்படும். இந்த அமைப்பிற்கு ஸ்ரிஷ்டி தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல லட்ச இளைஞர்களுக்கு வழிகாட்டியாக தன்னை தயார்படுத்திக் கொள்கிறார். இதன் மூலம் குறைந்தது பத்து லட்ச இளைஞர்களை ஊக்குவிக்க இலக்கு அமைத்துள்ளார்.
தன் விளையாட்டிலிருந்து விலகும் போது, கலப்பு இரட்டையர் பிரிவில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்தார். சர்வதேச அளவில் 74-வது இடத்தில் தொடர்கிறார்.
என் அனுபவமே என் பாடம் (அவரின் வார்த்தைகளில்):
“ உலகிலேயே இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம். ஆனால் இவர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். சர்வதேச அரங்கில் ஈடுகொடுக்க முடியாமல் கடும் மன உளைச்சலில் உள்ளனர். என்னுடைய பத்து வருட விளையாட்டு வாழ்க்கையில் பல சமயங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதன் பின்விளைவுகளை நாம் நன்கு அறிவோம். என் அனுபவங்களை இளைஞர்களுக்கு பகிர தீர்மானித்துள்ளேன், முக்கியமாக பெண்களுக்கு! தலைமை பண்பு தவிர தன்னிறைவு பெற்றவராக அவர்களை உருவாக்குவதே எனது இலக்கு என்று கூறுகிறார்.
BRICS சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சர்வதேச தூதுவராக (2021-2022) இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் அறிவிப்பின் படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த பொறுப்பை வகிக்கிறார்.
இன்று அதிகாலை 2.33 மணி அளவில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்தார் சூரிய பகவான். தமிழ் புத்தாண்டும், மாதங்களும் சூரிய பகவானை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அவ்வாறு, மேஷ ராசியில் சூரியன் பெயர்வதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் ஒரு மாத காலமே சித்திரை மாதமாகும்.
சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாகும். இந்த புதிய வருடம், தமிழ் ஆண்டுகளில் 35-வது தமிழ் ஆண்டாக இருக்கும் பிலவ வருடமாக மலர்கிறது.
சித்திரை முதல் நாளில் வீட்டின் பெரியவர்கள் புதிய வருடத்தின் பஞ்சாங்கத்தை படிப்பதும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த வைபவத்துக்கு ‘பஞ்சாங்க படனம்’ என்பர்.
ஶ்ரீ பிலவ வருஷத்தின் முக்கிய விரதங்கள் மற்றும் பண்டிகைகளின் குறிப்பினை கரூர் ஆர்ய வைஸ்ய புரோகிதர் திரு. ஶ்ரீதர் அய்யர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
வைஸ்ய மக்கள் அனைவருக்கும் இந்தப் பிலவப் புத்தாண்டு மிகவும் மங்கலகரமான ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்! ஜெய் வாசவி!!
பெருந்தொற்றான கொரோனா இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பற்றி நமது ஆர்ய வைசிய சமூகத்தைச் சேர்ந்த சேந்தமங்கலம் டாக்டர் வெங்கடேஷ் குமார் அவர்களின் விழிப்புணர்வு உரையை கேளுங்கள்:
#GetVaccinated | #LetsDefeatCorona
நன்றி – பண்ருட்டி சொ. முத்துக்குமார்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகா சிவராத்திரி. இந்நாளில் விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம்.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் பார்வதி தேவி, சிவனை நினைத்து பூஜை செய்தார். பூஜையின் முடிவில் தேவி ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை சிவராத்திரியாக பூஜை புரியும் மனிதர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, மோட்சத்தை அருள வேண்டும் என்று உமாதேவி வேண்டிக்கொண்டார். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.
இப்பேர்ப்பட்ட சிவராத்திரியன்று ஒரு சாதாரண வேடனுக்கு சிவபெருமான் முக்தி அளித்த கதையை நம் விஸ்டத்தின் ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் கூறுவதை கேட்டு ஞானம் பெறுங்கள்.
வேடனின் மூலம் நாம் கற்கும் பாடம்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள சாரம் எனும் ஊரில் ஆந்திராவைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவரின் ஜீவசமாதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் தோண்டத்தோண்ட விபூதியும் சில பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளது. சித்தர் சில காலம் இங்கே தங்கி பூஜை செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது. தற்பொழுது இவ்விடத்தில் பகவான் ஸ்ரீ சாய்பாபாவிற்கு ஆலயம் கட்ட உத்தரவாகியுள்ளது.
ஆர்ய வைஸ்ய சித்தர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, கீழேயுள்ள காணொளியை காணுங்கள்: