[LIVE TELECAST] பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு சிறப்பு பூஜைகள்

700 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

26 ஆம் தேதியான இன்றைய சிறப்பு நவ சண்டி ஹோமத்தை நேரடியாக காணலாம்:

ஜெய் வாசவி!!

பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பொற்கோவில் – சிறப்பு பதிவு!

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

தங்க நகை வியாபாரத்தில் புரட்சி செய்த தங்க மனிதர்

இந்தியாவிலேயே முதன்முறையாக தங்க நகை வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தியை புகுத்தி புரட்சி செய்தவர் ஒரு வைஸ்யர் என அறியும் போது உங்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா!

ஆம், இந்தியாவிலேயே முதன்முறையாக தங்கம் கடையில் வாங்கும் ஆபரணத்தில் தங்கம் கடையின் பெயரை பொறித்து (Seal) விற்று, மீண்டும் எங்கள் கடையிலேயே நீங்கள் வாங்கிய ஆபரணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் விற்கலாம், நாங்களே வாங்கிக்கொள்கிறோம் (buy back guarantee system) என்கிற புதிய முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக கோயமுத்தூரில் அறிமுகப்படுத்தி நகை வியாபாரத்தில் பெரும் புரட்சி செய்தவர் திரு. P.A.ராஜு செட்டியார் அவர்கள்.

அப்பப்பா… அவரின் வாழ்க்கை வரலாறு ஒரு சாதனைப் பெட்டகம் ஆகும். நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இவர்தான் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய தக்க்ஷணகண்ட மகா சபாவின் முதல் தலைவராக திகழ்ந்து சிறப்பாக பணிபுரிந்தவர்.

இவர்தான் ஸ்ரீ வாசவி புராணத்தை ஆனத்தூர் பாலகவி வேங்கிடராமன் அவர்களை கொண்டு முதன் முறையாக தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவர்.

வைஸ்ய பூஷணம், வைஸ்ய சிரோன்மணி மற்றும் கோவை வள்ளல் என்றும் பாராட்டு பெற்றவருமான P.A.ராஜு செட்டியார் அவர்களைப்பற்றி ஒவ்வொரு வைஸ்யரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவர் 1895ஆம் ஆண்டு பழனியில் அழகிரிசாமி செட்டியாருக்கும், சுப்புலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தன் பாலபருவத்திலேயே தந்தையை இழந்த இவர் தன் தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். தன்னுடைய 17 வயதில் தன் குடும்பத்தாருடன் கோயமுத்தூர் வந்து சேர்ந்த இவர், நகை வியாபாரத்தில் ஈடுபட்டார். கடினமாக உழைத்தார். முதலில் வியாபாரத்தில் சில ஏமாற்றங்களைச் சந்தித்தார்.

ஆனால் இவரின் தாய் இவருக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள் இவருக்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கியது. விடா முயற்சியைத் தொடர்ந்தார். தாயின் அறிவுறுத்தலின் படி தினமும் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தார். நம்பினோர் கெடுவதில்லை என்கிற வாசகத்தை மனதில் நிறுத்தினார். தன் சகோதரர் ராமசாமி அவர்களுடன் இணைந்து 1917ஆம் ஆண்டு P.A.Raju chettiyar & Brothers என்கிற பெயரில் தங்க நகை மொத்த உற்பத்தி மற்றும் சில்லரை வியாபாரத்தை ஆரம்பித்தார்.

அப்பொழுதுதான் இந்தியாவில் யாரும் செய்யாத வகையில் முதல் முறையாக தங்கள் கடையின் PAR (P.A.Raju) முத்திரையைப் பதித்து buy back guarantee scheme திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது. மிகத்தரமான தங்கத்தால் நகை செய்து விற்றதால் வியாபாரம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது.

தங்க நகை மட்டுமல்லாமல் வெள்ளியால் இதுவரை யாரும் செய்யாத பல பொருட்களை செய்து விற்றார்‌. எனவே அந்த வியாபாரத்திலும் பெரும் வெற்றி பெற்றார்.

கடையை பார்த்தாலே உள்ளே சென்று பொருட்களை வாங்கத்தூண்டும் வகையில் அழகுற அமைத்தார். அக்காலத்திலேயே தானாக சூழலும் show case அமைத்தார். இது மக்களை வெகுவாக கவர்ந்தது. திரைப்படங்கள் வந்த பிறகு திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு தன் கடைக்கு விளம்பரம் செய்து மேலும் வியாபாரத்தை பன்மடங்காக்கினார். இந்த யுக்தியைதான் பின்னர் பல பிரபல நகைக்கடைக்காரர்களும் பின்பற்றினர்.

இவரின் கடையைப் பற்றிய விளம்பரங்கள் அன்றைய தினசரிகளில் வராத நாளே இல்லை எனக் கூறலாம்.

விற்கும் நகைகளை மிகவும் அழகான வகையில் pack செய்து தந்து வாடிக்கையாளர்களை கவர்ந்தார்.

நகை வியாபாரம் மட்டுமல்லாமல் மேலும் பல தொழில்களிலும் தன் கவனத்தைச் செலுத்தினார்.

திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்திலும் ஈடுபட்ட இவர் கோயமுத்தூர் ராஜா திரையரங்கத்தின் உரிமையாளரும் கூட.

மேலும் கோயமுத்தூர் பாக்கிய லக்ஷ்மி வங்கியை நிறுவினார். இது பின்னாளில் கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்ததாம்.

பல நகை வியாபாரிகளின் சங்கத்திற்கு தலைவராக திகழ்ந்தார். மேலும் கோயமுத்தூர் மற்றும் தமிழகத்திலுள்ள பல கன்னியகா பரமேஸ்வரி ஆலயத்தின் மேம்பாட்டிற்கு தாராளமாக நன்கொடைகள் தந்தார். எனவே வைஸ்ய வள்ளல் என்கிற பட்டம் இவரைத் தானாக தேடி வந்தது.

இவரின் சாதனைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும் தங்க நகை வியாபாரத்தில் புரட்சி செய்த இந்த தங்க மகனின் வெற்றிக்கு முதன்மையான காரணம் செய்யும் தொழிலில் நேர்மை, புதுமை, கடவுள் நம்பிக்கை இதற்கும் மேலாக தன் தாயைத் தெய்வமாக பாவித்து அவரின் அறிவுரைப்படி அதீத தெய்வ நம்பிக்கையோடு வாரி வாரி வழங்கி மற்றவர்களின் மகிழ்ச்சியில் இறைவனைக்கண்டதே ஆகும் எனக்கூறுகிறார் இவரின் மூன்றாம் தலைமுறை பேரனும் பல ஆங்கில கட்டுரைகளை பத்திரிக்கையில் எழுதிவரும் Historian திரு. ராஜேஷ் கோவிந்தராஜூலு.

தமிழக ஆர்ய வைஸ்யர்களின் காவியத்தலைவனாக விளங்கிய இவரின் புகழ் சூரியன் சந்திரன் இருக்கும் வரை என்றும் நிலைத்திருக்கும்.

இனிமேல் ஒவ்வொரு வருடமும் வரும் ஜனவரி 28ஆம் தேதியை நகை வியாபாரிகள் தினமாக (Jeweller’s day) கொண்டாடுவதே நாம் அந்த மகானுக்குச் செய்யும் அஞ்சலியாகும்!

அந்த இனிய நாள் இதோ வந்துவிட்டது.

பண்ருட்டி சொ.முத்துக்குமார்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Myths about Hair growth you shouldn’t believe | Dr. Haripraba, Dermatologist

இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு.

முடி உதிர்வைத் தடுப்பதற்காக பொதுவாக பலர் கூறும் வழிமுறைகளின் நம்பகத்தன்மை என்ன? அவைகளை பின்பற்றினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதனை நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த Dermatologist and Cosmetologist Dr. Haripraba MBBS., MD DVL அவர்கள் கூறுவதை கேளுங்கள்! தெளிவு பெறுங்கள்!!

வரும் ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகள் அன்று டாக்டரிடம் WhatsApp வாயிலாக இலவச ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் முப்பெரும் விழா

வைஸ்ய குலத்தை சேர்ந்த பல நல்லுள்ளங்கள், அறிஞர்கள், தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள், கொடையாளர்கள் என அனைவரும் சங்கமிக்கும் இடமாக திகழும் வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் முப்பெரும் விழா வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று திருக்கோவிலூர் ஜெய விஜய மஹாலில் நடைபெற உள்ளது.

சத்தமில்லாமல் பல நற்பணிகளை செய்து வரும் வைஸ்ய சங்கமம் குடும்பத்தின் சேவைகளின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு:

வைஸ்ய வரலாற்றின் சிறப்புமிக்க இம்முப்பெரும் விழாவில் வைஸ்யர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிப்போம்.

A Big Salute to the Leaders and the Members of Vysya Sangamam Fraternity.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

Heroes of Vysyas – கல்வெட்டு அறிஞர் கலைமாமணி வில்லியனூர் ந. வேங்கடேசன்

ஆர்ய வைஸ்யர்கள் பல துறைகளில் வல்லுனர்களாக விளங்குவது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் புதுவையைச் சேர்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவர் கல்வெட்டுக்களை ஆராயும் வல்லுனராகவும், தமிழ் அறிஞராகவும் செய்த வியத்தகு சாதனைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

புதுவை மாநிலம் வில்லியனூரில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சீ. நடராசன் செட்டியார் மற்றும் சுப்புலட்சுமி அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்.

தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் செய்த சாதனைகளின் ஒரு தொகுப்பு:

  • “வரலாற்றில் மதகடிப்பட்டு” என்ற நூலினிற்காக புதுவை அரசு தொல்காப்பியர் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.
  • புதுவை அரசு அதனின் உயரிய விருதான “கலைமாமணி” விருதினை 2008 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது.
  • வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் எழுதிய “கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதி” என்னும் நூலுக்கு காரைக்காலில் உள்ள திரு. கணபதி சுப்பிரமணியம் என்ற தணிக்கையாளர் தலைமையில் இயங்கும் பாரதியார் கழகம் “கல்வெட்டுக் கலைமணி” என்று பட்டமளித்து கௌரவப்படுத்தியுள்ளனர்.
  • தொல்புதையல், திருச்சிற்றம்பலம் ஆகிய ஏடுகளில் துணையாசிரியராக பணியாற்றுகிறார்.
  • புதுவை வரலாற்றுச் சங்கத்தில் தொடக்க காலம் முதல் இணைந்து பணியாற்றி வருகிறார்.
  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
  • தென்னார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்து ஆய்வுசெய்துயிருக்கிறார்.
  • பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சமணம், புத்தர் குறித்த ஒளிவட்டுகளில் பணிபுரிந்துள்ளார்.
  • இவர் பல இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதுடன் புதுவை வானொலியில் வரலாற்றுச் செய்திகள் குறித்த பல உரைகளையும் ஆற்றியுள்ளார்.
  • இவர் தமிழகக் கோயில் வரலாறுகள் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் 50 தொடர்கள் தொடர்ந்து உரையாற்றியுள்ளார்.
  • சன் தொலைக்காட்சியில் அரிக்கமேடு குறித்து உரையாடலில் பங்காற்றியுள்ளார்.
  • புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகப் பணியேற்றுப் புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள் என்கிற நூலையும் வெளியிட்டுள்ளார்கள்.

View an interesting and inspiring video about our Villianur Puzhavar

வரலாற்றில் அரிக்கமேடு புத்தகத்தின் அட்டை படம்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

உலக சாதனை படைக்க இருக்கும் வாசவி சரிதம் | World Aryavysya Mahasabha

நம் வைஸ்யர்களின் குல தெய்வமாகிய ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில் WAM Tamilnadu State Mahila Vibagh குழுவினர் அனைவரும் இணைந்து ஸ்ரீ வாசவி சரிதம் கூறும் போட்டியினை நடத்த உள்ளனர்.

Join Bhakthi Movement – WhatsApp Group

போட்டியில் பங்கு பெறுவோர் வாசவி தேவியின் சரித்திரத்தை கட்டுரையாகவோ, ஆடியோவாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்து போட்டியின் ஒருங்கிணைப்பாளரின் WhatsApp எண்ணிற்கு டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

Noble World Records சார்பில், வாசவி சரித்திரத்தை கூறும் அனைவருக்கும் Participation Certificate வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க டிசம்பர் 10 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்யவேண்டும். முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள – திருமதி. ஜீவிதா பிரவின்குமார் 95438 56665

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

பரணி தீபத்தின் மகிமைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி

தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்தய நாளான பரணி நட்சத்திரமன்று வீட்டில் விளக்கேற்றி வழிப்படுவதே பரணி தீபமாகும்.

Join Bhakthi Movement – A WhatsApp Group

பரணி தீபத்தின் வரலாறு மற்றும் மகிமைகளை பற்றியும், பரணி தீப ஒளி எதுவரை செல்லும் என்ற கேள்விக்கான விடையினை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

நெய்வேலியில் ஸ்ரீ வாசவி சரிதம் நூல் வெளியீட்டு விழா

நெய்வேலி ஸ்ரீ வாசவி சமாஜத்தில் நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று எழுத்தாளரும், நுவலி விழியாடி ஊடக நிர்வாகியும் ஆன திருமதி. சாயீசுதா அவர்கள் எழுதிய ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

திரு. வி.இராமகிருஷ்ணன் DGM, Neyveli Lignite Corporation அவர்கள் ஸ்ரீ வாசவி சரிதம் நூலினை வெளியிட்டார்.

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கி, நமது சமூகம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

பண்ருட்டி சொ. முத்துக்குமார் அவர்கள், நெய்வேலி சமாஜத்தின் தலைவர் பா. சேகர் அவர்கள் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஒரு தாய் தன் பெண் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போல் இந்த நூல் அமைந்துள்ளது.

ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) நூலினை வாங்க விரும்புவோர், தொடர்புகொள்ள: 9443879848

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜையை ஏன் செய்யவேண்டும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி.

நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.

Click here to Hear Sri Krishna Ashtakam

தீபாவளிக்கும் குபேரனுக்கும் என்ன சம்மந்தம்? தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜை ஏன் செய்யவேண்டும் என்பதை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.

Wishing all the VYSDOM members a Happy and Safe Diwali!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

ஸ்ரீ வாசவி சரிதம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் – Author Mrs. S. Sayeesudha

ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்துக்கொண்டிருப்பது பாரத வல்லமை. அதே போல வைஸ்ய குலத்திற்காக அவதரித்த ஸ்ரீ வாசவி தேவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிய வேண்டும் என்கிற நோக்கில் நெய்வேலியை சேர்ந்த திருமதி. சாயீசுதா அவர்கள் ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) என்கிற நூலினை எழுதியுள்ளார்.

ஸ்ரீ வாசவி சரிதம் நூலின் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நெய்வேலி ஸ்ரீ வாசவி சமாஜனத்தில் நடைபெற உள்ளது.

அழைப்பிதழ்:

Invitation for the book launch

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website