வைஸ்ய சங்கமம் வாட்ஸ் அப் குரூப்பின் அசத்தலான மூன்றாம் ஆண்டு விழா

3634

விஸ்டம் நேயர்களுக்கு என் வணக்கங்கள்🙏

அன்பு, சேவை இவ்விரண்டையும் இரு கண்களாக கொண்ட வைஸ்ய சங்கம குடும்பத்தின் மூன்றாவது ஆண்டு விழா பற்றிய ஒரு சின்ன பதிவு இது.

அதற்கு முன் இந்த வாட்ஸ் அப் குழுவின் முப்பரிமாணம் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்த ஆலமரத்துக்கு முதல் விதை ஊன்றியவர் மதுக்கூர் நந்தகுமார் அண்ணன் அவர்கள். அதன்பின் பெரும் ஆணிவேர்களாக இதை தாங்குபவர்கள் கஸ்தூரி ரங்கன் ஐயா, எஸ் எஸ் பிரகாசம் ஐயா, வல்லம் பெருமாள் ஐயா, சின்னசேலம் அரவிந்தன் அண்ணன், கோம்பை ராமசுப்ரமணி அண்ணன் மற்றும் பலர்.

அன்புள்ளம் கொண்ட பல ஊர் பறவைகளை கொண்ட வேடந்தாங்கல் இது. ஏன் சிங்கப்பூரிலும் சிறகடிப்பவை வி. எஸ்.ஜி பறவைகள். தொடங்கப்பட்ட நாள் முதல் சேவை என்ற ஒரு விஷயத்தில் மிக ஆழங்கால்பட்டது இந்த குழு. இயலாதவர்களுக்கு அறுபதாம் திருமணம், அவரவர் பிறந்த நாள் திருமண நாள் நடக்கும்போது பல முதியோர் இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றிற்கு உணவு வழங்கி மகிழ்வது இந்த குழுவின் பழக்கம். இதை நடைமுறைப்படுத்திய முன்னத்தி ஏர் நந்தகுமார் அண்ணன் அவர்கள் தான்.

அது இப்போது குழுவினரின் இயல்பான பழக்கமாக மாறி விட்டது. தெய்வம் மனுஸ்ய ரூபேண என்பார்கள். அதற்கு சிறந்த முன் உதாரணமாக தாரா என்பவர் இந்த குழுவின் தாயுள்ளம் கொண்ட சேவையாளர். வீடின்றி குடும்பமின்றி தன்னையே யார் என்று தெரியாது தெருவில் திரியும் பலரை தகுந்த காப்பகங்களில் சேர்ப்பவர் இவர். பலரின் இறுதி காரியங்களை குழு உறுப்பினர்களின் பொருள் உதவியோடு எடுத்து செய்தவர்.

வைஸ்ய சங்கம பவுண்டேஷன் தொடங்கிய பின் கொரோனா ஆட்டிப்படைத்த காலகட்டத்தில் அவரவர் வீடுகளுக்கு ஹோமியோபதி மருந்துகளை கொண்டு சேர்த்த குழு இது.

ஹயக்ரீவர் பூஜை செய்து அரசு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆன்மீக பலம் சேர்க்கும் பிரசாதங்களை கொண்டு சேர்த்தது இன்னும் ஒரு மயில்கல்.

இப்போது தான் அறிமுக படலம் என்னும் ட்ரெய்லர் முடிந்து இருக்கிறது. இனிதான் குடும்ப விழா என்னும் மெயின் பிக்ச்சர் தொடங்குகிறது.

குழுவின் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் பொருட்டு குடும்ப விழா என்னும் திருவிழா தொடங்கப்பட்டது. முதல் குடும்ப விழா திண்டுக்கல்லிலும் இரண்டாவது குடும்ப விழா மன்னார்குடியிலும் நடந்தது. மூன்றாவது குடும்ப விழா 26. 2. 2023 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இந்த குடும்ப விழாவின் ப்ராஜெக்ட் சேர்மன் ஏ.சி .மணிகண்டன் அண்ணன் அவர்களின் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. திருவண்ணாமலை வாழ் வைஸ்ய சங்கமம் உறுப்பினர்கள் இதை கனவா அல்லது நினைவா என்று நினைக்கும்படி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காலை விநாயகர் பூஜையில் தொடங்கி குழுவின் பெருமைமிகு உறுப்பினர்களை மேடையில் கௌரவித்து பல போட்டிகள் நடத்தி மிக்ஸர் கிரைண்டர், குக்கர், கேஸ் ஸ்டவ், பிரிண்டர் என பல பரிசுகளும் தந்தார்கள் (அதில் தங்க வெள்ளி காசுகளும் அடக்கம்). சேவை ப்ராஜெக்ட்களாக தெருவோர வியாபாரிகளுக்கு நிழல் குடைகள், ஒரு வைஸ்ய பெண்மணிக்கு தையல் இயந்திரம் கொடுத்தது உள்பட பல நல்ல நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த மூன்றாவது குடும்ப விழா இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்த உறுப்பினர்கள் அனைவரையும் அவரவர் விரும்பும் படி ஃபோட்டோ எடுத்து உடனடியாக போட்டோக்களை ஃபிரேம் செய்து தந்த சென்னை கிருஷ்ணகுமார் அண்ணனின் செயல்வேகம் பிரமிக்க வைத்தது.

நிகழ்ச்சிகளின் இடையில் நெகிழி உபயோகத்தை தடை செய்யும் பொருட்டு 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்யும் சைதன்யா தாசில்தாராக இருக்கும் வைஸ்ய பெண் அதிகாரி சரளா அவர்களை கௌரவித்தது நிகழ்வின் கூடுதல் சிறப்பு.

பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிகழ்வுகளையே தூக்கி சாப்பிடும் படி இருந்தது. உதாரணத்துக்கு மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் ஆண் உறுப்பினர்கள் பலரை மேடையில் முன்னாலும் பின்னாலும் குதிக்க வைத்த நிகழ்ச்சி அவ்வளவு ரசிக்கும்படி இருந்தது.

மாற்றுத்திறனாளிகள் பலரின் கூட்டு முயற்சியான மல்லர் கம்பம் நிகழ்ச்சி எங்கள் நெஞ்சில் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

சேலம் அர்ச்சனா கேட்டரிங் ரவிச்சந்திரன் அண்ணா அவர்கள் நிகழ்வின் முழு உணவு பொறுப்பை ஏற்று மிக மிக சிறப்பாக தாயுள்ளத்தோடு செயல்பட்ட விதம் ஒவ்வொரு உறுப்பினர் நெஞ்சிலும் அன்பான கல்வெட்டு பதிவாக அமைந்துவிட்டது.

நிகழ்வின் இறுதியில் ஒவ்வொரு உறுப்பினரும் தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும்படி ஒரு கட்டைப்பை நிறைய ஸ்பான்ஸர்கள் அள்ளித்தந்த பெருமைமிகு பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

அந்த பொருட்களில் ஹைலைட்களாக (விமல் ஜோதி ஏஜென்சிஸ் குமார் அண்ணன் மற்றும் ரவி ஒயர் ஹவுஸ் ரவிக்குமார் அண்ணன்) தந்த ஸ்மார்ட் (டெம்பரேச்சர் காட்டும்) பிளாஸ்க்கும், சுவையான தேங்காய் பூவும், திருப்பதி பெரிய லட்டும். பண்ருட்டி முத்துக்குமாரின் திருக்குறடு நூலும் விலை மதிப்பில்லாதது.

பின்குறிப்பு: நம் வைசிய குல தெய்வமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி குடி கொண்டிருக்கும் பெனுகொண்டா நகரில் மகா சபா மூலமாக வைஸ்யர்களுக்காக ஒரு தங்கும் விடுதி உருவாகப் போவதை சிதம்பரம் டி.கே.பாலமுருகன் அண்ணா அறிவித்ததும் நம் வைஸ்ய சங்கம பெருந்தகைகள் அரவிந்தன் அண்ணாவும் கோவை பால பட்டாபிராமன் சகோவும் ஒரு ரூமுக்கான மெயின் டோனர் தொகையான 5 லட்சத்தை தருவதாக உடனே ஒப்புக்கொண்டதும் மற்றும் அங்கத்தினர்கள் பலரும் சில லட்சங்களை நன்கொடையாக தர முன் வந்ததும் சற்றேறக்குறைய சில நிமிடங்களில் நடந்து முடிந்த அதிசயம்.

இதுதான் வைஸ்ய சங்கம குழுவின் தனிச்சிறப்புகள்.

என்றும் அன்புடன்
வைஸ்ய சங்கம பெருமை மிகு உறுப்பினர்
VSG. உமா மோகன் தாஸ்
திண்டுக்கல்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group