எட்டு ஆர்ய வைஸ்ய கோத்திரங்கள் வணங்க வேண்டிய ஷடாரண்ய ஷேத்திரங்கள் தரிசனம் ஒரே நாளில்

vysya tour

கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித வரலாற்று தகவல்களை ஆராய்ந்து சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த அவரது பணி, இன்று ஆரிய வைஸ்யர் வரலாறுகளையும் நமக்கு அறிய வைத்துள்ளது.

திரு. பாலா வெங்கட்ராமன் அவர்கள் நடத்தி வரும் வாசவி யாத்ரா சேவா மூலமாக வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி ஞாயிறு அன்று வேலூர் அருகே உள்ள அஷ்ட ரிஷிகள் வழிபட்ட ஷடாரண்ய சேத்திரங்கள் ஓரே நாளில் தரிசனம் செய்ய உள்ளனர். இந்த ஆலயங்களை நம் ஆர்ய வைஸ்ய கோத்திர ரிஷிகள் பிரதிஷ்டை செய்துள்ளனர், இந்த ஆலயங்களை தரிசனம் செய்தல் மிக ஸ்ரேஷ்டம் (மிக நல்லது).

தரிசனம் செய்ய உள்ள ஆலயங்களின் பெயர்கள்:

1) அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் ஆலயம், வேப்பூர். (வசிஷ்ட முனிவர் வழிபட்ட தலம்). (வஸ்திரகுல கோத்திரத்தார் வணங்க வேண்டிய ஆலயம்).
2) அருள்மிகு வால்மிகீஸ்வரர் ஆலயம், மேல்விஷாரம். (வால்மீகி முனிவர் வழிபட்ட தலம்). (சுசலகுல, சுசொள்ளகுல, சுக்கல குல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தலம்).
3) அருள்மிகு கௌதமேஸ்வரர் ஆலயம், காரை. (கௌதம மகரிஷி வழிபட்ட தலம்). (கிரந்தசில, கெந்தசில, கந்தசில கோத்திரத்தார் வணங்க வேண்டிய தலம்).
4) அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம், வன்னிவேடு. (அகத்திய முனிவர் வழிபட்ட தலம்). அனுகுல, அனபகுல, அனப்பால குல, அப்பால குல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தலம்).
5) அருள்மிகு திருவந்தீஸ்வரர் ஆலயம், குடிமல்லூர். (அத்ரி மகரிஷி வழிபட்டல் தலம்). (எலிசெட்ல & அரிசெட்ல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தலம்)
6) அருள்மிகு பரத்வாஜேஸ்வரர் ஆலயம், புதுப்பாடி. (பரத்வாஜ மகரிஷி வழிபட்ட தலம்). (பலிசெட்ல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தலம்)
7) அருள்மிகு காஷ்யபேஸ்வரர் ஆலயம், அவரக்கரை. (காஷ்யப மகரிஷி வழிபட்ட தலம்). கணபகுல, கனமுகிகுல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தலம்).
8) அருள்மிகு விஷ்வாமித்ரேஸ்வரர் ஆலயம், காரை (விஸ்வாமித்ர மகரிஷி வழிபட்ட தலம்).(விக்ரமசிஸ்டகுல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தலம்).

நேரமிருப்பின் கீழ்கண்ட ஆலயங்களில் ஒரு சிலவற்றை தரிசிக்கலாம்:

9) அருள்மிகு பூமீஸ்வரர் ஆலயம், குடிமல்லம். (வாஸ்து தோஷத்தை, கட்டிடங்களில் உள்ள குறைகளை நீக்குகின்ற தலம்).
10) அருள்மிகு தன்வந்திரி ஆலயம், ராணிப்பேட்டை.
11) அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமி ஆலயம், காவேரிப்பாக்கம்.
12) அருள்மிகு கரபுரீஸ்வரர் ஆலயம், திருப்பாற்கடல்.
13) அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல்.
14) அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், கடப்பேறி.

இந்த ஆன்மீக யாத்திரை சென்னையில் மாடம்பாக்கம், இராஜகீழ்பாக்கம், கேம்ப்ரோடு, தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர் மேட்ரோ, அசோக்நகர், வடபழனி, கோயம்பேடு, வழியாக ஆலய தரிசனம் சென்று, மீண்டும் கோயம்பேடு வந்தடையும்.

கட்டணம்: சென்னையில் இருந்து சென்று வர நபர் ஒருவருக்கு காலை, மதியம் உணவு உட்பட ₹ 2,000

முன்பதிவிற்கு: வாசவி யாத்ரா சேவா, வெ.பால வெங்கட்ராமன்: 9791090417

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர் நடத்தும் 19 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது தீபத் திருநாளும், திருவண்ணாமலையும் தான்.

வரும் கார்த்திகை, நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவினையும், மாபெரும் அன்னதானத்தையும் திருவண்ணாமலை ஶ்ரீ வாசவி மஹாலில் நடத்த இருக்கின்றனர்.

அழைப்பிதழ்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

பல ஆண்டுகளாக கார்த்திகை தீபத் திருவிழாவினையும், அன்னதான சேவையையும் திருவண்ணாமலை நகர் வைஸ்ய பெருமக்கள் சீரும், சிறப்புமாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை காக்கும், தானத்திலேயே சிறந்த தானமான அன்னதானத்தில் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து பலரின் பசியினை போக்குங்கள். ஜெய் வாசவி!

Bank Details:

Bank Name – Karur Vysya Bank

Account Name: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர்

Account Number: 1198155000060792

IFSC Code: KVBL0001198

Bank Name – IDBI Bank

Account Name: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர்

Account Number: 1431104000157063

IFSC Code: IBKL0001431

தகவல்: திரு. ஜெகதீஷ், கள்ளக்குறிச்சி – 99527 60894

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

ஸ்ரீ வாசவி விரதம் – விரத நியமனங்கள்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வணங்கி அம்மனின் அக்னி பிரவேச நாளுக்கு முன் ஒரு மண்டலம் முழுவதும் இருமுடி கட்டி விரதம் இருந்து பெனுகொண்டா ஷேத்திரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ வாசவி அம்மனை தரிசனம் செய்து, அம்மனின் பரிபூரண கடாக்ஷத்தை அடைவதே ஸ்ரீ வாசவி விரதம்.

விரத நியமனங்கள்

நன்றி – திரு பெனுகொண்டா பாலாஜி

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

விநாயகர் சதுர்த்தி கதை | கோவை திருமதி. விஜய நேதாஜி

பிள்ளையார் சதுர்த்தி கதை

கர்ம வினைகளை நீக்கி நல்லன தரும் நாயகனான விநாயக பெருமானின் சதுர்த்தி கதையினை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Gowri Making Tutorials:

கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன் 

கௌரியை செய்ய SMART Techniques [வீடியோ] | Step by Step Instructions – Video Tutorial

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

100 வருடங்கள் ஆகியும் பழமை மாறாத ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியாரின் வீடு

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஆர்ய வைஸ்யர் சேலம் ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியார் அவர்களின் பூர்வீக இல்லம் சேந்தமங்கலத்தில் உள்ளது.

Click here to know the Legacy of Justice Sundaram Chettiar

ஜஸ்டிஸ் அவர்களின் வீட்டிற்கு நூறாண்டுகள் ஆனதை முன்னிட்டு கடந்த மார்ச் மாதத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டது.

இந்த சரித்திர புகழ்வாய்ந்த வீட்டில் கடந்த முப்பத்தி மூன்று வருடங்களாக வசித்து வந்தாலும் கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு முன்னர் தான் இந்த வீட்டை வாங்கியுள்ள டாக்டர் திரு. வெங்கடேஷ் செட்டியார் அவர்கள் ஹோமம் வளர்த்து இந்த வீட்டின் நூற்றாண்டு விழாவை ஜோராக கொண்டாடியிருக்கிறார்.

இந்த வீட்டில் வசித்துவரும் நம் சமூகத்தை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் ஜஸ்டிஸ் சுந்தரம் அவர்களின் உறவினர் அல்ல என்றாலும் அவரின் பெருமை அறிந்த டாக்டர் அவர்கள் அந்த வீட்டின் பழமையை சற்றும் மாற்றாமல் காலத்துக்கேற்ப சிறு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வீட்டின் கம்பீரத்தை அப்படியே கட்டிக்காத்து வருவது பாராட்டத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் வீட்டின் நடு ஹாலில் தன் தாய் தந்தையின் புகைப்படத்தை போலவே ஜஸ்டிஸ் அவர்களின் புகைப்படத்தையும் மாட்டி மாலையிட்டு மரியாதை செய்து வருகிறார்.

சரித்திர புகழ் வாய்ந்த ஜஸ்டிஸ் சுந்தரம் அவர்களின் பெருமையை உணர்ந்து அவரின் புகழை காத்து வரும் சேந்தமங்கலம் டாக்டர் வெங்கடேஷ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பண்ருட்டி சொ.முத்துக்குமார்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

இயற்கை பிரசவ முறையில் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வைசிய குடும்பத்தின் கதை!

பிரசவ கால கதைகளை நம் அம்மாக்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். அந்த கதைகளை கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும். முன்பெல்லாம் பிறந்த குழந்தையை புகைப்படம் எடுக்க கூட விட மாட்டார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் பிரசவத்தையே வீடியோவாக எடுக்க அனுமதிக்கிறார்கள்.

பெரும்பாலான ஆண்களுக்கு பிரசவம் என்பது ஒரு அறைக்குள் நடக்கும் நிகழ்வாக மட்டும் தான் தெரியும். ஆனால் இன்றைய பிரசவத்தில் கருவுற்ற தாயுடன் அவர் கணவரையும் பிரசவ அறைக்குள் உடனிருக்க அனுமதிக்கிறார்கள்.


இது போல மகப்பேறு மருத்துவம் பல கால கட்டங்களை கடந்து, பல நவீன மாற்றத்தை சந்தித்துள்ளது. நாம் அறிந்தவரையில் சுக பிரசவம் மற்றும் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை முறை தான் பலருக்கும் பரிச்சியம். ஆனால் பலரும் அறிந்திடாத ஒரு அற்புத முறை தான் இயற்கை பிரசவ முறை. அதாவது மிட்வைப் மாடல் (Midwifery Model) என்பார்கள். மிட்வைப் என்றால் தமிழில் பேறுகால உதவியாளர் என்று சொல்லலாம்.

இந்த முறையில், இயற்கையான முறையில் ஒருவர் பிரசவ அனுபவத்தை பெற முடியும். மேலும் பிரசவத்தின் போது ஏற்படுகிற சிக்கல்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணாமல் இயற்கையான முறையில், மிட்வைப் எனப்படும் பேறுகால உதவியாளர்களின் வழிகாட்டுதல் படி தீர்வு காண்பார்கள். இவர்களுடன் எப்போதும் ஒரு மகப்பேறு மருத்துவர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த முறை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும். இந்த பிரசவ முறையில் மிட் வைப்பாக இருப்பவர்கள் சர்வதேச அளவில் பல ஆயிரம் பிரசவம் பார்த்த அனுபவசாலிகளாக இருப்பார்கள்.


நம் சமூகத்தை சார்ந்தவர்களும் இந்த முறையில் பிரசவ அனுபவத்தை பெற்றுள்ளனர். அதன் படி, பெங்களூரில் இருக்கும் ஶ்ரீமதி அவர்கள் இயற்கை பிரசவ முறையில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், அவர் தன் அனுபவத்தை கூறும் போது:
“என்னுடைய முதல் பிரசவம் வழக்கமான முறையில் தான் நடந்தது. ஆனால் அந்த பிரசவம் மூலம் “எபிஸ்யோடோமி” வலியை ஒரு மாதம் சமாளிக்க வேண்டியிருந்தது. அதனால் எங்கள் இரண்டாம் குழந்தையின் பிரசவத்திற்கு மாற்று முறையை பார்க்க தொடங்கினோம். அப்படி தேடிய போது நாங்கள் கண்டு அறிந்தது தான் கோச்சியில் இருக்கும் “பர்த் வில்லேஜ்” மையம்.

என் பிரசவத்தின் காரணமாக நாங்கள் கொச்சிக்கு குடி பெயர்ந்தோம். அப்போது ஒரு மாலில் ஷாப்பிங்க் செய்து கொண்டிருந்த போது எனக்கு பிரசவ வலி வந்தது. அது பிரசவ வலி தான் என்பது கூட எனக்கு தெரியவில்லை. அன்று இரவே பிரசவ மையத்திற்கு சென்றோம். என் வயிற்றை பரிசோதித்து குழந்தையின் இதய துடிப்பை பரிசோதித்தனர். அரை மணி நேரத்திற்கு பின்பு நான் சிறிய செயற்கை குளம் ஒன்றில் அமர்ந்த நிலையில் அமர்ந்திருந்தேன். அப்போதே என் வலி உடனடியாக குறைந்ததை உணர்ந்தேன். மிக ரிலாக்ஸ்டாக எனக்கு பிடித்த பாடல்களை கேட்டேன். என் உள்ளுணர்வின் படி தேவைப்படும் போது நான்கு முறை அழுந்த தள்ளினேன். என் குழந்தை இந்த உலகத்திற்கு வந்தது.
இதில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்ந்தது, என் கணவர் என் பிரசவம் முழுவதிலும் என்னை தாங்கி கொண்டார், என் 5 வயது மூத்த மகன் என் பின்னிருந்து இந்த பிரசவத்தை காணொலியாக பதிவு செய்தான்” என்று வியப்பும் மகிழ்வுமாக தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மேலும் சென்னையில் இருக்கும் நம் வைஸ்ய சமூகத்தை சார்ந்த மதுமிதா அவர்கள் கூறும் போது: “என் பிரசவத்திற்கு நான் இயற்கை பிரசவ முறையை தேர்வு செய்தேன். என் பிரசவத்தின் போது எனக்கு பெரிதாக வலி இருக்கவில்லை. ஆனால் குழந்தையின் தலை சரியான இடத்தில் இருக்கவில்லை. மூன்று முறை தலை சுற்றியிருந்தது. மேலும் என் பனிக்குடம் உடைந்து, குழந்தையின் எடை குறைவாக இருந்தது. நான் பெங்களூரில் இருக்கும் “பர்த் ஹோம்” எனும் இயற்கை பிரசவ முறை மையத்தில் சிகிச்சை எடுத்து கொண்டேன்.
அங்கு இயற்கையான டெக்னிக்ஸ் மூலமாக எனக்கு உதவினார்கள். குறிப்பாக “பார்வர்ட் லீனிங் இன்வர்ஷன்” எனும் டெக்னிக் மூலமாக உடற்பயிற்சி செய்து குழந்தையின் தலையை சரியான இடத்திற்கு எடுத்து வந்தோம். மேலும் பனிக்குடம் உடைந்திருந்ததற்கு சில டெக்னிக்ஸை பயிற்சி செய்தேன். மேலும் வலியை தாங்கி கொள்ள சுவாச பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் எந்த நிலையில் நின்றால் எனக்கு வலி குறைவாக இருக்கும் என்பதை என்னையே உணரச்செய்து, அந்த நிலையில் நின்றவாறே என் குழந்தையை பிரசவித்தேன். மிகவும் ஆச்சர்யகரமாக, பிரசவம் முடிந்த 5 – 6 மணி நேரத்தில் நான் வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.” என உணர்ச்சி ததும்ப பகிர்ந்து கொண்டார்.

ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஒரு சில இயற்கை பிரசவ மையங்கள் மட்டுமே இருக்கின்றன. அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஒரு செயல்முறையில், ஆரோக்கியம், அக்கறை, அன்பு, அனைத்தும் அளவில்லாமல் அள்ளி தரும் அட்சயபாத்திரமாக இந்த “மிட்வைப்ரி மாடல்” எனும் இயற்கை பிரசவ முறை செயல்படுகிறது.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

அறியப்படாத அதிசய மனிதர்கள் – ஆர்ய வைஸ்யருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த அங்கீகாரம்

இன்றைய தேதியில் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவரான கே. அண்ணாமலை (ex IPS) அவர்கள் “அறியப்படாத அதிசய மனிதர்கள்” என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள தன்னலமற்ற, உன்னத மாமனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை பற்றி உலகறிய செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ரத்த தானத்தை தவமாக செய்து வரும் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த திண்டுக்கல் திரு. பாண்டியன் அவர்களை பற்றி நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இளம் தலைவர் திரு. பிரதீப். G (Secretary – BJP – IT) அவர்கள் அண்ணாமலை அண்ணனிடம் தெரிவித்துள்ளார். திரு. பாண்டியன் அவர்களின் இந்த ஒப்பற்ற மக்கள் நல சேவையை பாராட்டி அண்ணாமலை அவர்கள் நம் திண்டுக்கல் சகோதரரை பற்றி தனது அனைத்து சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளார்.

Thiru. Annamalai avl’s Facebook post and Tweet about Thiru. Pandiyan avl. We request all the Vysyas to Like and Retweet this post to the max.

திரு. பிரதீப். G அவர்கள் மேலும் பல வைஸ்ய குல மக்களுக்கு அங்கிகாரம் கிடைக்க உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். அவரின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

மேலும், திரு. பாண்டியன் அவர்களின் சேவையை அறிந்து அவரை பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்த பண்ருட்டி திரு. முத்துகுமார் அவர்களுக்கு நன்றிகள்.

விரைவில் வேறொரு வைஸ்ய சாதனை மனிதரை குறித்து அண்ணாமலை அவர்கள் அங்கீகாரம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறோம்.

Sathyakumar
Team VYSDOM

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஆர்ய வைஸ்யர்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி,
திவான் பகதூர் K. சுந்தரம் செட்டியார் ஆவர்கள் சேலம் மாவட்டம் (தற்போதைய நாமக்கல்) சேந்தமங்கலத்தில் வசித்து வந்த செல்வந்தர் கிருஷ்ணம்ம செட்டியாருக்கு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி 1875 ஆம் ஆண்டில் பிறந்தவர்.

இளமையில் படுசுட்டியாக விளங்கிய இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பையும், பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து F.L.Exam.ல் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராகத் தேர்வாகி கல்வி உதவித் தொகையையும் இவர் பெற்றார். ஆங்கிலேயர்களே கண்டு வியக்கும் வண்ணம் ஆங்கில மொழியில் அதீத ஞானம் பெற்றிருந்தார்.

சட்டநுணுக்கங்களை அறிந்த இவர் ஒரு சட்ட மேதையாகவே திகழ்ந்தார். சேலத்தில் வழக்கறிஞராக தன் பணியை ஆரம்பித்த இவரின் வாதத்திறமையையும், மதிநுட்பத்தையும் கண்ட ஆங்கிலேயர்கள் இவரை Dist.Munsiff ஆக 1902ல் நியமித்தனர். இந்தப் பதவிக்கு அவர் வந்த போது அவரின் வயது 27 என்றால் அவரின் திறமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

விரைவாக இவர் Sub Judge ஆகவும், District Judge ஆகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் இவருக்குப் பெறும் புகழைப் பெற்றுத் தந்தன.

இவரை 1926ஆம் ஆண்டு Commissioner of Election Enquiry Committee யில் தலைமை பொறுப்பில் அரசு இவரை நியமித்தது. இவர் பணிகளுக்கிடையே பல பொதுச்சேவைகளையும் செய்துவந்தார். எனவே இவருக்கு 1927ஆம் ஆண்டில்
ராவ்பகதூர், திவான் பகதூர் எனப் பட்டத்தை அளித்து அரசாங்கம் இவரை கெளரவித்தது.

1930 ஆண்டில் அரசு இவரை Officer on Special Duty as a Member of the Council of State, என்று டெல்லிக்கு அனுப்பியது. அதே ஆண்டில் ஜுலை மாதம் இவரை சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளித்தும் தன் கடமையை செய்தது. 1934 வரை நீதிபதியாக பதவிவகித்த இவர் தன் பதவி ஓய்விற்கு பின் சேலத்தில் தன் மகள் வீட்டிலேயே தங்கி பல அறப்பணிகளைச் செய்து வந்தார்.

திருவண்ணாமலையில் இவர் முனிசீப்பாக பதவி வகித்த போது சேஷாத்திரி ஸ்வாமிகளின் அருளைப் பெற்றார் என்கிறார்கள். ஸ்வாமிகள் இவரிடம் தனிப்பாசம் காட்டியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதுபோல் ரமண மகரிஷியிடமும் பக்தி செலுத்தி வந்தார்.

1935ஆம் வருடம் சேலத்திற்கு அருகில் உள்ள அழகாபுரம் கிராமத்தில் தொற்றுநோய் பரவியபோது தானாக முன்வந்து பெரும் தொகை கொடுத்து அங்கிருந்த சிறு கிணற்றை ஆழப்படுத்தி பெரியதாக்கி அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்தார். இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

சேலம் இராமகிருஷ்ணா மிஷனிற்கும், Theosophical Society க்கும் தன் வாழ்நாள் முழுவதும் அதாவது தலைவராகத் திகழ்ந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு சாலைக்கு ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் அளித்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பல நீதிபதிகள் பின்னர் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது நமக்கு மெய் சிலிர்ப்பது நிச்சயம்.

இவரின் நினைவாக சேலம் வாசவி மஹால் மேல் மாடியில் Justice Sundaram Hall ஐ அவர்கள் குடும்பத்தார் 1962ஆம் ஆண்டில் அர்பணித்திருக்கிறார்கள்.

இனி இந்த மஹாலுக்கு செல்பவர்கள் ஒரு நிமிடம் நம் சமூகத்திற்கு பெருமைத்தேடித்தந்த அந்த மாமனிதரைப்பற்றி ஒரு கணம் நினைத்துப்பாருங்கள், உங்கள் மனதில் பெரும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைஸ்ய சங்கமம் வாட்ஸ் அப் குரூப்பின் அசத்தலான மூன்றாம் ஆண்டு விழா

விஸ்டம் நேயர்களுக்கு என் வணக்கங்கள்🙏

அன்பு, சேவை இவ்விரண்டையும் இரு கண்களாக கொண்ட வைஸ்ய சங்கம குடும்பத்தின் மூன்றாவது ஆண்டு விழா பற்றிய ஒரு சின்ன பதிவு இது.

அதற்கு முன் இந்த வாட்ஸ் அப் குழுவின் முப்பரிமாணம் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்த ஆலமரத்துக்கு முதல் விதை ஊன்றியவர் மதுக்கூர் நந்தகுமார் அண்ணன் அவர்கள். அதன்பின் பெரும் ஆணிவேர்களாக இதை தாங்குபவர்கள் கஸ்தூரி ரங்கன் ஐயா, எஸ் எஸ் பிரகாசம் ஐயா, வல்லம் பெருமாள் ஐயா, சின்னசேலம் அரவிந்தன் அண்ணன், கோம்பை ராமசுப்ரமணி அண்ணன் மற்றும் பலர்.

அன்புள்ளம் கொண்ட பல ஊர் பறவைகளை கொண்ட வேடந்தாங்கல் இது. ஏன் சிங்கப்பூரிலும் சிறகடிப்பவை வி. எஸ்.ஜி பறவைகள். தொடங்கப்பட்ட நாள் முதல் சேவை என்ற ஒரு விஷயத்தில் மிக ஆழங்கால்பட்டது இந்த குழு. இயலாதவர்களுக்கு அறுபதாம் திருமணம், அவரவர் பிறந்த நாள் திருமண நாள் நடக்கும்போது பல முதியோர் இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றிற்கு உணவு வழங்கி மகிழ்வது இந்த குழுவின் பழக்கம். இதை நடைமுறைப்படுத்திய முன்னத்தி ஏர் நந்தகுமார் அண்ணன் அவர்கள் தான்.

அது இப்போது குழுவினரின் இயல்பான பழக்கமாக மாறி விட்டது. தெய்வம் மனுஸ்ய ரூபேண என்பார்கள். அதற்கு சிறந்த முன் உதாரணமாக தாரா என்பவர் இந்த குழுவின் தாயுள்ளம் கொண்ட சேவையாளர். வீடின்றி குடும்பமின்றி தன்னையே யார் என்று தெரியாது தெருவில் திரியும் பலரை தகுந்த காப்பகங்களில் சேர்ப்பவர் இவர். பலரின் இறுதி காரியங்களை குழு உறுப்பினர்களின் பொருள் உதவியோடு எடுத்து செய்தவர்.

வைஸ்ய சங்கம பவுண்டேஷன் தொடங்கிய பின் கொரோனா ஆட்டிப்படைத்த காலகட்டத்தில் அவரவர் வீடுகளுக்கு ஹோமியோபதி மருந்துகளை கொண்டு சேர்த்த குழு இது.

ஹயக்ரீவர் பூஜை செய்து அரசு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆன்மீக பலம் சேர்க்கும் பிரசாதங்களை கொண்டு சேர்த்தது இன்னும் ஒரு மயில்கல்.

இப்போது தான் அறிமுக படலம் என்னும் ட்ரெய்லர் முடிந்து இருக்கிறது. இனிதான் குடும்ப விழா என்னும் மெயின் பிக்ச்சர் தொடங்குகிறது.

குழுவின் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் பொருட்டு குடும்ப விழா என்னும் திருவிழா தொடங்கப்பட்டது. முதல் குடும்ப விழா திண்டுக்கல்லிலும் இரண்டாவது குடும்ப விழா மன்னார்குடியிலும் நடந்தது. மூன்றாவது குடும்ப விழா 26. 2. 2023 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இந்த குடும்ப விழாவின் ப்ராஜெக்ட் சேர்மன் ஏ.சி .மணிகண்டன் அண்ணன் அவர்களின் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. திருவண்ணாமலை வாழ் வைஸ்ய சங்கமம் உறுப்பினர்கள் இதை கனவா அல்லது நினைவா என்று நினைக்கும்படி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காலை விநாயகர் பூஜையில் தொடங்கி குழுவின் பெருமைமிகு உறுப்பினர்களை மேடையில் கௌரவித்து பல போட்டிகள் நடத்தி மிக்ஸர் கிரைண்டர், குக்கர், கேஸ் ஸ்டவ், பிரிண்டர் என பல பரிசுகளும் தந்தார்கள் (அதில் தங்க வெள்ளி காசுகளும் அடக்கம்). சேவை ப்ராஜெக்ட்களாக தெருவோர வியாபாரிகளுக்கு நிழல் குடைகள், ஒரு வைஸ்ய பெண்மணிக்கு தையல் இயந்திரம் கொடுத்தது உள்பட பல நல்ல நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த மூன்றாவது குடும்ப விழா இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்த உறுப்பினர்கள் அனைவரையும் அவரவர் விரும்பும் படி ஃபோட்டோ எடுத்து உடனடியாக போட்டோக்களை ஃபிரேம் செய்து தந்த சென்னை கிருஷ்ணகுமார் அண்ணனின் செயல்வேகம் பிரமிக்க வைத்தது.

நிகழ்ச்சிகளின் இடையில் நெகிழி உபயோகத்தை தடை செய்யும் பொருட்டு 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்யும் சைதன்யா தாசில்தாராக இருக்கும் வைஸ்ய பெண் அதிகாரி சரளா அவர்களை கௌரவித்தது நிகழ்வின் கூடுதல் சிறப்பு.

பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிகழ்வுகளையே தூக்கி சாப்பிடும் படி இருந்தது. உதாரணத்துக்கு மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் ஆண் உறுப்பினர்கள் பலரை மேடையில் முன்னாலும் பின்னாலும் குதிக்க வைத்த நிகழ்ச்சி அவ்வளவு ரசிக்கும்படி இருந்தது.

மாற்றுத்திறனாளிகள் பலரின் கூட்டு முயற்சியான மல்லர் கம்பம் நிகழ்ச்சி எங்கள் நெஞ்சில் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

சேலம் அர்ச்சனா கேட்டரிங் ரவிச்சந்திரன் அண்ணா அவர்கள் நிகழ்வின் முழு உணவு பொறுப்பை ஏற்று மிக மிக சிறப்பாக தாயுள்ளத்தோடு செயல்பட்ட விதம் ஒவ்வொரு உறுப்பினர் நெஞ்சிலும் அன்பான கல்வெட்டு பதிவாக அமைந்துவிட்டது.

நிகழ்வின் இறுதியில் ஒவ்வொரு உறுப்பினரும் தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும்படி ஒரு கட்டைப்பை நிறைய ஸ்பான்ஸர்கள் அள்ளித்தந்த பெருமைமிகு பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

அந்த பொருட்களில் ஹைலைட்களாக (விமல் ஜோதி ஏஜென்சிஸ் குமார் அண்ணன் மற்றும் ரவி ஒயர் ஹவுஸ் ரவிக்குமார் அண்ணன்) தந்த ஸ்மார்ட் (டெம்பரேச்சர் காட்டும்) பிளாஸ்க்கும், சுவையான தேங்காய் பூவும், திருப்பதி பெரிய லட்டும். பண்ருட்டி முத்துக்குமாரின் திருக்குறடு நூலும் விலை மதிப்பில்லாதது.

பின்குறிப்பு: நம் வைசிய குல தெய்வமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி குடி கொண்டிருக்கும் பெனுகொண்டா நகரில் மகா சபா மூலமாக வைஸ்யர்களுக்காக ஒரு தங்கும் விடுதி உருவாகப் போவதை சிதம்பரம் டி.கே.பாலமுருகன் அண்ணா அறிவித்ததும் நம் வைஸ்ய சங்கம பெருந்தகைகள் அரவிந்தன் அண்ணாவும் கோவை பால பட்டாபிராமன் சகோவும் ஒரு ரூமுக்கான மெயின் டோனர் தொகையான 5 லட்சத்தை தருவதாக உடனே ஒப்புக்கொண்டதும் மற்றும் அங்கத்தினர்கள் பலரும் சில லட்சங்களை நன்கொடையாக தர முன் வந்ததும் சற்றேறக்குறைய சில நிமிடங்களில் நடந்து முடிந்த அதிசயம்.

இதுதான் வைஸ்ய சங்கம குழுவின் தனிச்சிறப்புகள்.

என்றும் அன்புடன்
வைஸ்ய சங்கம பெருமை மிகு உறுப்பினர்
VSG. உமா மோகன் தாஸ்
திண்டுக்கல்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைஸ்ய ராகசுதா – வைஸ்ய பெண்களுக்கான பாட்டு போட்டி

வரும் உலக மகளிர் தினத்தை வைஸ்ய சமூக மகளிர்கள் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வைஸ்ய ராகசுதா என்ற பாட்டு போட்டியை நடத்த உள்ளனர்.

31 வயதிற்கு மேல் உள்ள வைஸ்ய சமூக பெண்கள் வைஸ்ய ராகசுதா போட்டியில் பங்கு பெற்று பெண் உரிமை அல்லது பெண் விடுதலை அல்லது பெண்கள் முன்னேற்றம் குறித்த பாடல்களை மூன்று நிமிடங்கள் மிகாமல் பாடி, அதன் ஆடியோ பதிவை போட்டியின் குழுவினருக்கு பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

ஆடியோ மெசேஜ் அனுப்பும்போது முதலில் உங்கள் பெயர், ஊர் மற்றும் கோத்திரம் கூறிவிட்டு, “வைஸ்ய ராகசுதா” விற்கான என்னுடய பதிவு என்று சொல்லிவிட்டு உங்களுடைய பாட்டினை பாட வேண்டும். பின்னர் உங்களுக்கு ஏன் அந்த பாடலின் வரிகள் பிடிக்கும் என்று கூற வேண்டும்.

போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வைஸ்ய ராகசுதா என்ற பட்டம் வழங்கப்படும். அடுத்த இரண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பை அளிக்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் e-certificate வழங்கப்படும்.

போட்டியாளர்களுக்கான WhatsApp குழுவில் இணைந்து இருங்கள்:
https://chat.whatsapp.com/HNkrCxkcCFn8gwEeIIvJwG

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group