‘அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , ‘அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.இந்த வருடம் மே 5 -ம் தேதி அன்று அட்சய திரிதியை வருகிறது.
இந்த பொன்னாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும் என்று மக்கள் கூறுவர். ஆனால், அட்சய திரிதியை அன்று என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை நம் விஸ்டத்தின் ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!
உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் அவதரிப்பார். அவ்வாறு அவதரித்த மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் 10 அவதாரங்களையே தசாவதாரம் என கூறப்படுகிறது .
சென்னையை சேர்ந்த திருமதி. தீபா ராமகிருஷ்ணன், விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களையும் தத்ரூபமான ரங்கோலிகளாக வடிவமைத்துள்ளதை இக்காணொளியில் கண்டு இறையருள் பெறுக.
சத் யுகத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய மீனின் வடிவத்தில் அவதரித்தார் விஷ்ணு பகவான். ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கின் போது, மீனின் அவதாரத்தை எடுத்த விஷ்ணு பகவான் படகில் இருந்து மனு மற்றும் பிற உயிர்களையும் காப்பாற்றினார்.
கூர்ம அவதாரம்:
ராட்சச ஆமை வடிவத்தின் மூலமாக தன் இரண்டாம் அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். பாற்கடலை கடைவதற்கு மந்திரசாலா மலை கடையும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த பாற்கடல் மிகவும் ஆழமாக இருந்ததால், மந்திரசாலா மலை கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது ராட்சச ஆமை வடிவத்தை எடுத்த விஷ்ணு பகவான் அந்த மலையை தன் தோல் மீது சுமந்து கொண்டார்.
வராக அவதாரம்:
வராக என்ற வார்த்தைக்கு பன்றி என்ற அர்த்தமாகும். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்றார் என்பது ஐதிகம்.
நரசிம்ம அவதாரம்:
ஹிரன்யகஷிபு என்ற அரக்கனை கொல்ல விஷ்ணு பகவான் இந்த அவதாரத்தை எடுத்தார். ஹிரன்யகஷிபு தன்னை எந்த ஒரு மனிதன் அல்லது விலங்கினாலும், வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும், பகலிலும் இரவிலும், பூமியிலும் ஆகாயத்திலும், எந்த ஒரு ஆயுதத்தை கொண்டும் தன்னை கொல்ல முடியாது என்ற வரத்தை பெற்றிருந்தான். அதனால் பாதி மனிதன் பாதி சிங்க உருவத்தை எடுத்த விஷ்ணு பகவான், பொழுது சரியும் நேரம், அந்த அரக்கனின் வீட்டில், அவனை தன் மடியில் போட்டு தன் நகத்தினால் கொன்றார்.
வாமன அவதாரம்:
காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு அவரை வதை செய்வது வாமன அவதாரம்.
பரசுராம அவதாரம்:
ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, சிவபெருமானை வழிப்பட்ட பரசுராமன், ஒரு கோடாரியை பரிசாக பெற்றார். பிராமணர்களைக் காக்க மறுத்த ஷத்ரிய வம்சத்தை இந்த உலகத்தை விட்டு துடைத்து எடுத்தார்.
ராம அவதாரம்:
அயோத்யாவின் இளவராசான ராமர் அசுர அரசரான ராவணனை அழிக்க எடுத்த அவதாரமே ராம அவதாரம்.
கிருஷ்ணா அவதாரம்:
ட்வபரா யுகத்தின் போது கிருஷ்ணர் வடிவத்தில் தன் அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். தீய அரசனான கம்சனை கொல்வதற்காகவே அவர் கிருஷ்ணனாக பிறந்தார்.
பலராம அவதாரம்:
கிருஷ்ணரின் மூத்த சகோதரனான பலராமனே விஷ்ணு பகவானின் ஒன்பதாவது அவதாரம் என்றும் கூறப்படுகிறது.
கல்கி அவதாரம்:
கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்று நம்பப்படுகிறது.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
தமிழகத்தை சேர்ந்த வைஸ்ய குல இளைஞர் S. ரிஷி ராகவ் சமீபத்தில் வெளிவந்த UPSC தேர்வு முடிவில் இந்திய அளவில் 281வது ரேங்கினை பெற்று நம் அனைவரையும் பெருமைப்பட செய்துள்ளார்.
ரிஷி ராகவ் VIT பல்கலை கழகத்தில் Civil Engineering ஐயும் பின்பு அமெரிக்காவின் புகழ்பெற்ற Georgia Tech பல்கலை கழகத்தில் City and Regional Planning படிப்பை பயின்றுள்ளார். இவர் தந்தை திரு. சங்கர், தயார் திருமதி. வினுப்ரியா மற்றும் சகோதரர் பிரதீப்புடன் சென்னையில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவிற்கு சென்று எப்படியாவது செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு மத்தியில், நம் ரிஷி ராகவ் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி UPSC இல் வெற்றி பெற்று நாட்டிருக்கு சேவையை செய்ய நினைத்த மனதிற்கு நம் ராயல் சல்யூட்.
நம் குலத்தில் மேலும் பல ரிஷி ராகவ்கள் உருவாக வாழ்த்துக்கள்.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
இவ்வுலகில் 320 கோடி மக்கள் இணையத்துடன் இணைந்து வாழ்கின்றனர் என்று அமெரிக்காவை சேர்ந்த டோமோ என்ற நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையில் கூறுகிறது.
53 சதவீத இந்தியர்கள், தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு பின் சீனாவில் 36 சதவீதமும், ஜப்பானில் 39 சதவீத மக்களும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். (இந்தியாவே இதில் நம்பர் 1 😉)
Google, Twitter, Facebook, Instagram, Youtube, WhatsApp என்று நீண்டுள்ள இந்த இணையதள உலகத்தில் ஒவ்வொரு 60 நொடிகளில் என்னென்ன நடக்கிறது என்ற ருசீகர தகவலை இந்த வீடியோவில் காணுங்கள்.
நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்டது நம் திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மஹால். பல நன்நிகழ்வுகளை கண்ட இம்மண்டபத்தை முற்றிலும் புனரமைக்கும் திருப்பணியை திண்டுக்கல் ஆர்ய வைஸ்ய சபா உறுப்பினர்கள் முழு வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கலில் நம் அன்னை வாசவி அம்மனின் கோவில் இல்லாத குறையை போக்கும் வகையில், மண்டபத்தின் தரை தளத்தில் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் கட்டப்பட்டு வருகிறது. இப்புனித பணியில் வைஸ்யர்களாகிய நாம் திண்டுக்கல் வைஸ்ய குல மக்களுடன் கை கோர்த்து வாசவி கோவில் மற்றும் மண்டபத்தை எழுந்தருள உதவிட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
ஆர்ய வைஸ்ய சமூகம் வாசவி கிளப் பண்ருட்டி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள திருவள்ளுவர் தொடக்க பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது.
தகவல்: பண்ருட்டி சொ. முத்துக்குமார்
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
உலக ஆர்ய வைஸ்ய மகாசபா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று சென்னை M.சிதம்பரம் ஹாலில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.
தகவல்: Ponnuru Ranganayakulu, WAM
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு மக்கட் குழுவாகும்.
குலம் இரண்டு வகைப்படும் – ஒன்று சமூகம் அல்லது பெரும் பிரிவு குலம்.
மற்றொன்று சிறுபிரிவு குலம், அதாவது குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள் அதாவது ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ! பொதுவாகக் கொண்டிருக்கலாம். அவர்களின் வாரிசுகள் என்பது பொருள். ஆரிய வைசியர்களை பொறுத்தவரை கோத்திர முனிவர்க்கு பின் அந்த கோத்திரத்தைச் சேர்ந்த பெரும் சாதனை செய்த முனிவராக இருக்கும் ஒரு முன்னோனை கொண்டு அவர்களின் வாரிசுகள் என்று அடையாளம் கொள்ளும் வகையில் ரிஷிகுலம் என அழைக்கின்றனர். இது சிறுபிரிவு குலம்.
கோத்திரம்
அகராதியில் கோத்திரம் எனும் சொல்லுக்கு வம்சம் என்று பொருள். இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்த கோத்திரங்களை வகைப்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் முக்கியாமாக ஏழு ரிஷிகள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.
கோத்திரம் என்பது இந்த பிரவர்த்தகர்கள் வழிவந்த ஏதாவது ஒரு ரிஷி அதனை உருவாக்கி வழிநடத்தியிருப்பார் எனவே அந்த ரிஷியின் பெயரையே கோத்திரமாக கொள்வதே சாஸ்திர விதி.
ஆரிய வைசியர்கள் எல்லோருமே ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு.
ஆண்களுக்கு மட்டும் தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச சந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும்.
யார் யாருடன் திருமணம் செய்யக்கூடாது?
ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்கு அல்லது பெண்ணின் கோத்திரத்திற்கு அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
பிரவரத்தில் உள்ள ரிஷியின் பெயர் ஆண், பெண் கோத்திரங்களில் ஒன்றாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை.
கோத்திரப்பொருத்தம்
உதாரணத்திற்கு ஆணின் கோத்திரம் மாரீச்சிச என்றும், பெண்ணின் கோத்திரம் மார்கண்டேய என்றும் கொள்வோம். மாரீச்சிச மற்றும் மார்கண்டேய கோத்திரங்கள் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பார்க்கவ முனிவரின் வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் பகுதி ரிஷியின் பெயர் கட்டாயம் ஒன்றாக இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங்களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.
விஞ்ஞான ரீதியிலேயே கோத்திரம்
கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என ஒரு முதுமொழி உண்டு. அது ஏன்?
பெண் திருமணம்
ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக்
கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது.
விஞ்ஞான
ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா?
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்.
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.
பெண் குழந்தையை
உருவாக்கும் x க்ரோமோசோம்
இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y
க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே
ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின்
y க்ரோமோசொம்கள் மட்டுமே.
இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை.
ஏனெனில் ஆணின் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக. முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.
பிரிவுகள்
ஆக குலம் என்பது கோத்திரங்கள் பலவற்றை கொண்ட மிகப்பெரும்பிரிவு எனவும், கோத்திரம் என்பது சிறுகுலங்கள் பலவற்றை கொண்ட பெரும் பிரிவு எனவும், சிறுகுலம் அல்லது துணை கோத்திரம் அல்லது சிறுகுலம் என்பது சிறுபிரிவு வகைபாடு எனவும் கண்டோம்.
ப்ரவரான் என்று வடமொழியில் அழைக்கப்படும் பிரவரத்தின் அடிப்படையில் எந்த கோத்திரத்தில் பிறந்தவர்கள், எந்த கோத்திரத்தாரை திருமணம் செய்யலாம்? அடுத்த பதிவில்….
விரைவில் சந்திபோம் – பென்னாகரம் Bala Venkatraman
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
ஒரு ஆலயத்தின் வரலாற்றை அறிந்து அத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் வரும் பரவசம் அளவிடமுடியாதது. ஸ்தல புராணங்களின் வாயிலாக ஒரு கோவிலின் புகழ், இறைவனின் அருட்செயல்கள், அதனினுள்ள இறை ரகசியம், வாழ்முறை நெறிகள் பற்றி நம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளமுடிகிறது. நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. பென்னாகரம் பாலா வெங்கட்ராமன் பல்லாயிரக்கணக்கான கோயிலிற்கு சென்று அதன் புராணத்தை ஆராய்ந்து தொகுத்து வருகின்றார்.
நம் விஸ்டம் குடும்பத்திற்காக “பென்னாகரம் பாலா வெங்கட்ராமனின் ஸ்தல புராணம்” என்ற புதிய பகுதியை தொடங்கி அவர் இயற்றியுள்ள ஸ்தல புராணங்களை அனைத்து ஆர்ய வைசியரிடமும் கொண்டு சேர்த்து இறையருள் பெறுவோம்.
அன்னை காமாட்சியின் பாதை
காமாட்சி
மாங்காடு எனும்
தலத்திலும் காமாட்சி, காஞ்சியிலும்
காமாட்சி, தருமபுரியிலும்
கல்யாண காமாட்சி, இவை
அனைத்திற்கும் என்ன சம்பந்தம் என புராணத்தில் ஆராய்ந்த போது கிடைத்த புதையல்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அன்னை காமாட்சியின் பாதை எனும் தலைப்பில்
பதிவை பதிவிடுகின்றேன். தன் மனைவி பார்வதியையே ஈசன் எவ்வளவு அலைக்கழித்துள்ளார்!!!
பக்தர்களாகிய நாம் எம்மாத்திரம்….!
மாங்காடு
கைலாயத்தில் ஒரு
முறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூடவே உலகம் இருண்டது. சிவன்
மானிடப்பிறவி எடுக்கும்படி பார்வதிக்கு சாபமிட்டார். பார்வதி இத்தலத்தில் இருந்து
வழிபட்டபின் அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். அதன்படி பார்வதி இங்கு
வந்து தவம் செய்த இடம் தான் மாங்காடு.
வெள்ளீசுவரர்
ஆலயம்
அப்படி அன்னை ஊசிமுனையில் தவம் செய்த தலம் மாங்காடு காமாட்சி அன்னை ஆலயம். அருகே வெள்ளீசுவரர் ஆலயம் உள்ளது. மாங்காடு காஞ்சிக்கு முன்னோடி எனலாம்? அது என்ன வெள்ளீசுவரர் ஆலயம்? என்கிறீர்களா? வாருங்கள் தலவரலாறுக்கு செல்வோம்.
மகாபலி
சக்கரவர்த்தியை ஆட்கொள்வதற்காக, வாமனராக குள்ள
அவதாரம் மகாவிஷ்ணு, மகாபலியிடம்
தானம் கேட்டு சென்றார். அவனிடம் மூன்றடி வேண்டும் என்றார். அவரும்
ஏற்றுக்கொண்டார். அப்போது அவரது குலகுருவான சுக்ராச்சாரியாருக்கு, வந்திருப்பது திருமால் என்று தெரிந்து விட்டது.
எனவே, மகாபலியிடம் தானம் தர
வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், மகாபலி கொடுத்த
வாக்கை மீறமாட்டேன் என சொல்லி அவர் கூறியதை கேட்கவில்லை. அவன் திருமாலுக்கு
மூன்றடியை கொடுப்பதற்காக, தாரை பாத்திரத்தை
எடுத்தார். மனம் பொறுக்காத, சுக்ராச்சாரியார்
வண்டு வடிவம் எடுத்து தாரை பாத்திரத்தில் நீர் வெளியேறும் துளையை அடைத்தார்.
அப்போது வாமனராக வந்த திருமால், ஒரு தர்ப்பை
புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணில் குத்தினார். அதன்பின் மூன்றடியில்
மூன்று உலகையும் அளந்தார். இவ்வாறு கண் பார்வை இழந்த சுக்ராச்சாரியார் மீண்டும்
பார்வை கிடைக்க, இத்தலத்தில்
சிவனை வேண்டி தவமிருந்தார்.
காஞ்சிக்கு வா!!!
அம்பிகைக்கு
காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில்
சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை.
ஈசன் பார்த்தார்,
ஒரிடத்தில் ஒரு தேவதைக்கு மட்டுமே அருள
வேண்டும் என நினைத்தார் போலும், தன் பக்தனுக்கு
முதலில் இறங்கினார். சுக்கிரன் முன் தோன்றி சுக்கிரா! வாமனனால் இழந்த கண்ணை
மீண்டும் பெறுவாயாக எனக்கூறி அருளினார்.
காமாட்சியை அழைத்தார்!!! நீ காஞ்சி சென்று என்னை நோக்கி தவமிருப்பாயாக! அங்கே வந்து உனக்கு அருளுவேன் எனக்கூறி மறைந்தார்….. அப்படி அன்னை இறைவன் அழைத்ததின் பேரில் ஈசன் முன் வந்து நின்றதன் அடையாளமாக வெள்ளீசுவரர் ஆலயத்தில் அன்னை காமாட்சியின் பாதம் விளங்குகிறது. வாருங்கள் ஆலயம் செல்வோம்….
கோவிலில் உள்ள அன்னை காமாட்சியின் பாதம்
ஆலய அமைப்பு
இத்தலவிநாயகர்
நெற்கதிர் விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
சுவாமி விமானத்தில் எண்திசை அதிபர்கள் சிற்பம் இருக்கிறது. பிரகாரத்தில் வீரபத்திரர் இருக்கிறார். இவரது வலது பாதத்திற்கு அருகே ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள முருகன் சன்னதியில், சுவாமி, அம்பிகை இருவருடனும் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிவன் கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இடப்புறம் திரும்பியிருப்பதும், லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும், பிரயோக சக்கரத்துடன் விஷ்ணுவும் வணங்கிய கோலத்தில் இருப்பதும் சிறப்பு. கோஷ்டத்தில் உள்ள துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.
மாங்காடு வெள்ளீசுவரர் ஆலய கோபுரம்
பார்க்கவேசுவரர்
இக்கோயிலில் சிவன், சதுர பீடத்துடன் அருளுகிறார். துவாரபாலகர்கள் கிடையாது. சுக்ராச்சாரியாருக்கு (வெள்ளி என்றும் பெயருண்டு) காட்சி தந்தால் இங்கு சிவன், “வெள்ளீஸ்வரர்’ என்ற பெயரிலேயே அருளுகிறார். பார்க்கவேஸ்வரர் என்றும் இவருக்கு பெயருண்டு. இவருக்கான அம்பாள், மாங்காடு தலத்தில் இருக்கிறாள். எனவே, காஞ்சிபுரம் போலவே இங்கும் அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள், சன்னதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
காமாட்சியின் பாதை அடுத்த பதிவில் தொடரும்…
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10 முதல் 15 ஆம் தேதி வரை சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
A Quick Tour to Penugonda Vasavi Temple:
எந்நூற்றாண்டும் காண்டிராத இம்மஹா கும்பாபிஷேகத்தை வீராணம் திரு. சபரியின் வர்ணனையில் காண பெறுங்கள்.
Posted by Vasavi TV on Thursday, February 14, 2019
Unveiling the 90 feet Grand Panchaloga Vasavi Matha Statue!90 அடி பிரமாண்ட பஞ்சலோக வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டைKannikaDhanam.com | Vysdom for Aryavysyas