ஆரிய வைசியர் ஆரியரா? திராவிடரா?? | ஆரிய வைசியர் வரலாறு – 05

ஆரிய வைசியர்கள் ஆரியர்களா? அல்லது திராவிடர்களா? என்பதை அறிய வேண்டும் என்றால் முதலில் ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார்? என்பதை அறிய வேண்டும்!

யூதர்கள்:

இப்போதைய ஐரோப்பிய நாடுதான் யூதர்களின் தேசம், யூதர்களில் இரு பிரிவினர் உண்டு..

யூதர்கள், யூத பிராமணர்கள் – இவர்களும் யூதர்களே இவர்கள் இந்தியாவில் குடியேறி உயர்ந்த பிரிவான பிராமணர்கள் என்று பின்னாளில் தனக்கு தானே அறிவித்துக் கொண்டனர்.

இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒரு பிரிவினர் தனது மேய்ச்சல் தொழிலை தொடர்ந்து நடத்தி வர நல்ல ஒரு செழிப்பான தேசம் நோக்கிவந்தனர் அப்படி அவர்கள் மத்திய ஆசியா, கைபர் கணவாய் வழியாக வந்த தேசம் தான் நம் நாடு, இப்படிதான் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

அவர்களின் வெள்ளை நிறத்தின் காரணமாகவும், வந்தாரை உபசரிக்கும் நமது கலச்சாரத்தையும் தவறாக பயன்படுத்தி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இங்கிருந்த மக்களின் வாழ்வுரிமைகளை பறித்தனர்.

Read here: ஆரிய வைசியர் வரலாறு – நாம் யார்? Part – 04

திராவிடம்

யூதர்கள் தங்களை எப்போதும் உயர்வாக எண்ணிக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்கள் (உண்மையில் வேஸ்ட் பீஸுங்க); தங்களை கடவுளின் தூதுவர்கள் என்று சொல்லி கொண்டனர்.

அவர்கள் பெரிய இடத்தில் இருக்கும் மக்கள் எனவும், இந்திய பூர்வ குடிகளை தாழ்ந்தவர்கள் என கருத்தில் கொள்ளும்படி இந்திய மக்களை திராவிடன் என அழைத்தனர்.

திராவிடன் – என்பதை பிரித்து பார்த்தால்
தரை + இடன் என பிரிக்கலாம். இதை இணைத்தால் தரைவிடன் என அழைக்கலாம்.

ஆரியமொழிகளில் – ரி ழ ஆகிய சொற்களை சொல்ல முடியாது. எனவே தரைவிடன் என்பதை த்ராவிட என அழைத்தனர்.

தரை = த்ரா ஆனது. மேலும் சான்றுக்கு தமிழில் திரி என்றால் மூன்று என்று பொருள் உண்டு. உதாரணமாக திரிகடுகம் என்ற நூலே உண்டு.

திரி என்பது காரணப்பெயர் ஆகும், அக்காலத்தில் விளக்கில் இடும் திரியை மூன்று நூல்கள் சேர்த்து திரித்து விளக்கிடுவர். எனவே மூன்று எண்ணிக்கையை கூற திரி என்றனர் இதனை அவர்களுக்கே உரிய வார்த்தையான த்ரி என்றனர்;

  • த்ரிசூலம்
  • த்ரிநேத்ரம்

எனும் வடமொழி சொற்கள் இப்படி பிறந்தது தான். ஆக தரையில் வாழ்பவன் எனும் பொருளில் திராவிடன் என இந்திய பூர்வீக குடிகளை அழைத்தனர்.

இவனுங்க மேல வானத்துல இருந்து வந்தவங்களாம்…🤣

இந்து கோமுட்டிகள்

கவரா எனும் இந்து கோமுட்டிகளே, கோமுட்டி சமூகத்தின், பூர்வீக கலாச்சாரம்.

இந்த ஆரிய வைசியர்களே ஷெட்டி, செட்டி, செட்டியார், குப்தா எனவும் அடைமொழி இட்டு தென்னிந்தியா மற்றும் பல்வேறு இந்திய மாநிலங்களில் அழைக்கப்படுகிறார்கள்

கோமுட்டி செட்டியார்

தமிழ்நாட்டை பொறுத்தவரை செட்டியார் எனும் சொல் வாணிபம் செய்யும் சமூகத்தை குறிப்பதால் மேலும் செட்டியார்கள் சமூகம் அதிகமாக உள்ளதால், உதாரணமாக

  • நாட்டுக் கோட்டை செட்டியார்கள்,
  • கொங்கு செட்டியார்கள்,
  • 24 மனை செட்டியார்கள், என பலர் உள்ளனர்.

இவர்களில் இருந்து ஆரிய வைசியர்களை தனித்து காட்ட,
கோதவரி நதிக்கரையை சேர்ந்த செட்டியார்கள் என்பதன் சுருக்கமாக கோமுட்டி செட்டியார்கள் என மரியாதையாக அழைத்து வந்தனர்.

இந்த மரியாதை காலப்போக்கில் கிண்டல் சொல்லாக மாறிப்போனது. எது எப்படி இருந்தாலும் நாம் அனைவரும் கோதவரி நதிக்கரை நாகரிகத்தில் தோன்றியவர்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

கோதாவரி நாகரிகம் அடுத்த பதிவில்…

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

கம்பு – பச்சைப்பயிறு சாலட் | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

ஹலோ ஆர்ய வைஸ்ய பெருமக்களே! நீங்கள் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளையும் அனுபவித்திருப்பீர்கள். இவற்றிற்கு அப்பாற்பட்ட ஏழாம் சுவையை, சமையல் கலையின் ஜாம்பவான் ஒருவர் தங்களுக்கு பரிமாற இருக்கிறார் – உங்கள் VYSDOM.in வாயிலாக! ஆஹா ஏமி ருச்சி என்ற புதிய பகுதியின் மூலமாக!!

வாருங்கள் சுவைப்போம்:

கம்பு – பச்சைப்பயிறு சாலட் by Vn Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

Ingredients

  • கம்பு முளை கட்டியது – 100 கிராம்
  • பச்சைப்பயிறு களைகட்டியது – 100 கிராம்
  • மாதுளை – 1
  • எலுமிச்சை – 1
  • உப்பு தேவையான அளவு
  • கருப்பு மிளகு தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1
  • Lettuce கீரை – 50 gm
  • ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்

Difficulty – Very Easy

Cooking Time – 10 minutes

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அனைத்து பயிர்களையும், மாதுளையும், வெங்காயத்தையும், lettuce கீரையையும் அந்த எலுமிச்சை உடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

சுவையான பயிறு சாலட் தயார்!!

ஆஹா ஏமி ருச்சி! by Chef Kumaresan

Know about our Chef!

Till now, our Chef has introduced 1012 flavors of ice cream and 400 + variety of new dishes and 80 + new desserts.

Vn. Chef Kumaresan

விரைவில் மீண்டும் வேறொரு ரெசிப்பியுடன் சந்திபோம்! சுவைப்போம்!!

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

நீயும் பொம்மை! நானும் பொம்மை!!

மனிதர்களின் போட்டோவை கொண்டு அவர்களை போலவே அச்சு பிசராமல் சிறிய பொம்மை (Replica Dolls) செய்து அசத்துகிறார் வைஸ்ய குலத்தை சேர்ந்த கோவை ஹரிஷ்மிதா ரமேஷ்.

Krish Clay Creations நிறுவினர் ஹரிஷ்மிதா; மனிதர்களை மட்டும் அல்ல கடவுள், கார்ட்டூன், டால்ஸ், Clay Idli, Dosa முதலியன Miniature பொம்மைகளை வடிவமைப்பது மட்டுமல்லாமல் ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றும் கொடுக்கிறார் (ஆன்லைனிலும்).

பிறந்த நாள், திருமண நாள் முதலிய நாட்களுக்க வித்தியாசமாக பரிசளிக்க விரும்பும் பலர் முழுக்க முழுக்க களிமண்ணாலேயே (Clay) செய்யப்படும் இப்பொம்மைகளை Krish Clay Creations மூலமாக செய்து பெறுகின்றனர் என்கிறார் Artprenuer ஹரிஷ்மிதா.

Workshop – Krish Clay Creations

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 03

ப்ரவரான்கள் தொடர்ச்சி

சாஸ்திர விதி ஒரே ப்ரவரான்களில் வரும் கோத்திரங்களுக்குள் பெண் கொடுக்கவோ! எடுக்கவோ! கூடாது என்கிறது. இவையாவும் மரபு வழி நோய்களை தடுக்க நம் முன்னோர்கள் கையாண்ட வழிமுறை. இதனை தான் சுருக்கமாக நம் முன்னோர்கள்
ஜண்ட கோத்திரமுலு என்றனர்.

Click here to read the Previous Part of Know Your Roots series : https://www.vysdom.in/2019/05/18/கோத்திரம்-குலம்-சிறுக/

பிரவரான்களை 8 ரிஷிகள் நிர்ணயிக்கிறார்கள், அந்த எட்டு ரிஷிகள்:
  • அகத்தியர்
  • அத்ரி
  • அங்கிரஸ
  • பார்கவ
  • பார்க்கலர்
  • காசியபர்
  • வசிஷ்டர்
  • விஷ்வாமித்ரர்

என நம் ஆரிய வைசியர் பெரும் குலத்திற்கு எட்டு ப்ரவரான்கள்.
நம் முன்னோர்கள் சூட்சுமமாக கோத்திர ஸ்லோகத்தில் வைத்துள்ள ப்ரவரான்களை கொண்டு, எந்தெந்த கோத்திரம் எந்தெந்த ப்ரவரானில் வருகிறது என்பதை எளிதாய் கண்டுபிடிக்கலாம்.
இன்னும் எளிமையாக பாலா உருவாக்கிய பிரவரான்களின் அட்டவணையை இனி காணலாம்.

அகத்திய ப்ரவரான்:

இந்த ப்ரவரான் ஒரே கோத்திரத்தை கொண்டுள்ளது. அது அகஸ்த்யச கோத்திரம்.

இந்த கோத்திரத்தில் உள்ள ரிஷி குலங்கள்-

அனப்பகுல, அனபால, அனுப்பகுல, அனுபால, அனப்பாலகுல, அப்பப்பாலகுல.

மேற்கண்ட உட்பிரிவு குலங்கள் அனைத்தும் அகஸ்த்யச கோத்திரத்தையே குறிக்கும்.

அத்ரியச ப்ரவரான்:

அத்ரி பிரவரானிலும் ஒரே ஒரு கோத்திரம் மட்டும் இருப்பதால், இவர்கள் தன் கோத்திரத்தை தவிர வேறு எந்த கோத்திரத்திலும் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ செய்யலாம். அத்ரி மகரிஷியை மூலமாக கொண்ட கோத்திரங்கள்.

அத்ரேயச கோத்திரம்

ரிஷி குலங்கள்-

அரஸ்தகுல, அரிசிஷ்தகுல, அரிசெட்ல, அரிசெட்லகுல, யரிசிஷ்தகுல, எலிசெட்ல, எலிசெட்லகுல, அரசகுல, ஹரிசிஷ்தகுல, ஹரசிஷ்தகுல, யரசிஷ்தகுல.

மிக அதிக எண்ணிக்கையிலான கோத்திரங்களை கொண்டுள்ள பிரவரான்கள் என்றால் அது ஆங்கிரஸ மற்றும் பார்க்கவ பிரவரான்கள் மட்டுமே. மீதமுள்ள பிரவரான்கள் ஒன்று அல்லது இரண்டு கோத்திரங்களை மட்டுமே கொண்டுள்ளன.

ப்ரவரான்கள் பற்றிய விளக்கம் முற்றும்!

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஆர்ய வைஸ்யர்களுக்கான சர்வதேச Shuttle போட்டி

ஆர்ய வைஸ்யர்களுக்கான 7th International Golden Rackets Doubles Shuttlecock Tournament வரும் ஜூலை மாதம் 21 ஆம் தேதி கோவை Krish Shuttle Indoor court இல் நடைபெற இருக்கிறது. இப்போட்டியினை கோவை வாசவி கிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குழுவினர் பெருமையுடன் வழங்குகிறார்கள்.

Zoom & View – Shuttlecock Championship 2019

போட்டியாளர்கள் அனைவருக்கும் சர்டிபிகட், மெடல், டி ஷர்ட் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். Tournament இல் பங்கேற்க ஜூலை 19 ஆம் தேதியினை வரை பதிவு செய்யலாம்.

Vysdom.in – A Digital magazine for Aryavysyas wishes all the very best to all the Shuttlecock players.

தகவல்
நன்றி:
திரு. குமரேஷ், கோவை
திரு. முத்துகிருஷ்ணன், கோவை

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

முதலீட்டிலேயே சிறந்த முதலீடு!!

பொதுவாக நாம் நம் அடுத்த தலைமுறையினரின் வளமையான வாழ்விற்காக ரியல் எஸ்டேட், கோல்ட், ஸ்டாக்ஸ், முயூச்சுவல் பண்ட்ஸ் , பேங்க் என பல வகையில் நம் சக்திக்கு ஏற்ப முதலீடு செய்வோம், செய்துக்கொண்டே இருக்கிறோம்.

எனினும் நம்மில் பலர், அடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கப்போகும் தண்ணீரை சேமிப்பதை பற்றிய எண்ணமும் செயலும் குறைவாகவே உள்ளது.

மழை பெய்யாததுதான் நம் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான காரணம் என்ற அறியாமையே தண்ணீர் பிரச்சனைக்கான காரணம் என கூறுகிறார் நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த Rain Harvesting நிபுணர் அக்ஷய்.

குறைந்த மழை பெய்தாலும், பெய்யும் மழையை ஒழுங்காகச் சேமித்தாலே நமக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துவிடும்.

Rain water harvesting என்ற சிறிய கருவியின் மூலம் 1000 மில்லி மீட்டர் வருடாந்திர மழையளவைப் கொண்டு 1200 சதுர அடி கூரை பகுதி வீட்டில் வருடத்திற்கு 1,00,000 லிட்டர் தண்ணீர் வரை சேமிக்க முடியும், மேலும் தொடர்ந்து, ஆழ்குழாய் கிணற்றிற்கு இந்த சேகரிப்பு செல்கிறது, இதன் மூலம் நிலத்தடி நீர் உயரும்.

தமிழக அரசு பூகோள ரீதியாக இனி அணைகள் கட்ட இயலாது என்று தெரிவித்த உள்ள நிலையில், இது போன்ற நுட்பங்களை பொருத்த தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு அறிவுறுத்துவதோடு நில்லாமல் தானே முன்மாதிரியாக, அரசு துறை சார்ந்த ஏரளமான அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் நிறுவி, பெய்கின்ற மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர் உயரவும், அடுத்து வரும் பல மாதங்களுக்கு சுத்தமான மழை நீரை அன்றாட பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்: Ayushmmaan Solar Akshiay @ 9677889830, 7667212151

#SaveRainWater #InvestForFuture #BeResponsible

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆம் தேதியா அல்லது ஜூன் 7 ஆம் தேதியா???

நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. மேலும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இருப்பினும், ஒரு நாட்டின் மக்கள் மட்டும் ஜூன் 7 ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தியினை கொண்டாடுகின்றனர். அவர்கள் எந்த நாட்டினர் மற்றும் ஏன் வேறொரு நாளில் காந்தி ஜெயந்தியினை கொண்டாடுகின்றனர் என்ற ருசீகர தகவலை அறிய கீழே உள்ள காணொளியை காணுங்கள்.

நன்றி: பண்ருட்டி சொ. முத்துக்குமார்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 02

கோத்திரங்கள் பலவற்றை உள்ளடக்கியது பெரும் குலம் எனவும், கோத்திரத்திற்குள் சிறுபிரிவாகவும் சிறுகுலப் பிரிவுகள் இருக்கும் எனவும் கண்டோம். புரியவில்லை தானே….?
வாருங்கள் விளக்கமாக காண்போம்.

முதல் (சென்ற) பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரிய வைசியர் குலத்தை பெரும் குலப்பிரிவாக கொண்டால்,
போதயனர் உருவாக்கிய போதாயனச கோத்திரம் எனது கோத்திரப்பிரிவு, இந்த கோத்திரத்தில் புதனகுல, புத்திகுல, புதகுல ஆகியன சிறுகுல பிரிவுகள் எனவும், ரிஷிகுலம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய வைசியர்களைப் பொறுத்தவரை இந்த சிறுகுலப் பிரிவுகளை ரிஷிகுலம் என்பதே சாலச் சிறந்தது.

பிரவரம்

ப்ரவரான் என்று வடமொழியில் அழைக்கப்படும் பிரவரம் என்பதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

பிரவரான் என்பது வேத பாராயண முறையை, அந்த வேத பகுதியை எழுதிய முனிவர் பெயரையும், சைவ ஆகம பூசனை முறை ஆகிய விவரங்களை உள்ளடக்கிய பெரும் குலப்பிரிவுக்கும், கோத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒரு வகைப்பாடு. இந்த வகைப்பாடு தான் ஆரிய வைசிய குலத்தில் ஜெனிடிக்ஸ் டிஸ் ஆர்டர் எனப்படும் மரபுவழி நோய்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தவிர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கும் காரணியாக திகழ்ந்தது. இதனை ஜண்ட கோத்திரங்கள் என்பர். இப்போது அந்த ஜண்ட கோத்திர முறையை யாரும் பின்பற்றுவதில்லை, எனவே தான் ஆரிய வைசிய கோத்திர மக்களில் நிறைய உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பிரவரான் என்பது பல கோத்திரங்களை ஒன்றிணைந்த ஒரு வகைப்பாட்டு பிரிவு எனலாம், பிரவரான்களை 8 ரிஷிகள் நிர்ணயிக்கிறார்கள்.

அந்த எட்டு ரிஷிகள்:

  • அகத்தியர்
  • அத்ரி
  • ஆங்கிரஸர்
  • பார்கவ
  • பார்க்கலர்
  • காசியபர்
  • வசிஷ்டர்
  • விஷ்வாமித்ரர்

ஆரிய வைசிய கோத்திர குலகுருக்கள் அனைவரும் இவர்களுடைய வாரிசுகளே. இவர்களை வைத்தே ப்ரவரான்கள் நிர்ணயிக்கப்படுகிறது.

முன்னோர்களின் சூட்சுமம்

உதாரணமாக போதாயனச கோத்திரம் தோற்றுவித்த போதாயனசர் பார்க்கவ முனிவரின் வழி வந்தவர், எனவே போதாயனச கோத்திரத்துக்கு பார்க்கவ முனிவர் ப்ரவரான்.

சரி! ஒவ்வொரு கோத்திரத்துக்கும் பிரவரம் எனும் பிரவரான் எப்படி கண்டுபிடிப்பது?. இங்கே தான் நம் முன்னோர்களின் சூட்சுமம் இருக்கிறது.

கோத்திர பிரவரான்களை கோத்திர ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்லோகத்தில் அதை எப்படி கண்டுபிடிப்பது என்கிறீர்களா? வாருங்கள் முறையை அறிவோம்….

புதனகுல, புத்திகுல, புதகுல எனும் ரிஷிகுலங்களை கொண்ட போதாயனச கோத்திரத்தின் ஸ்லோகம் இதோ:

பார்க்கவ போதாய த்வயார் ஷ்யேயே ப்ரவரான் விதா போதாயனச கோத்திரஹ…

மேலே உள்ள ஸ்லோகத்தில் பார்க்கவ எனும் முதல் ரிஷி பெயரே ப்ரவரான்.

மேற்கூறிய போதாயனச கோத்திர ஸ்லோகத்தின் அர்த்தம்
பார்க்கவ முனிவரின் வழிவந்த போதாயனர் கோத்திரத்தின் ப்ரவரான் பார்க்கவர். இவ்வாறு ஒவ்வொரு கோத்திர ஸ்லோகமும் ஆரம்பிக்கும் முதல் முனிவரின் பெயரே அந்த கோத்திரத்தின் ப்ரவரான்.

சரி ப்ரவரானை பற்றி கண்டுவிட்டோம். அதனால் என்ன பயன்? காசியப சாஸ்திர விதி ஒரே ப்ரவரான்களில் வரும் கோத்திரங்களுக்குள் பெண் கொடுக்கவோ! எடுக்கவோ! கூடாது என்கிறது.

பந்த கோத்திரம்

உதாரணமாக வெண்ணகுல, வினுகுல, என்னகுல ஆகிய பல்வேறு சிறுகுலம் எனும் ரிஷி குலங்களைக் கொண்ட மந்தபாலச கோத்திரமும், போதாயனச கோத்திரமும் முறையே மந்தபாலர், போதாயனசர் எனும் இருவேறு முனிவர்களில் இருந்து தோன்றியிருந்தாலும், இந்த இரு முனிவர்களும் பார்க்கவ முனிவரின் வழித்தோன்றல்கள் எனவே இந்த இரு கோத்திரமும் ஒரே ப்ரவரானை கொண்டுள்ளன. எனவே இந்த இரு கோத்திரங்கள் தங்களுக்குள் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்கிறது சாஸ்திரவிதி. இவை யாவும் மரபு வழி நோய்களை தடுக்க நம் முன்னோர்கள் கையாண்ட வழிமுறை. இதனை தான் சுருக்கமாக நம் முன்னோர்கள் உறவு கோத்திரங்கள் அல்லது பந்த கோத்திரங்கள் என்றனர்.

உடனே நம் மனதில் ஒரு கேள்வி எழும், இந்த எட்டு ரிஷிகளும் எங்கிருந்து வந்தார்கள் என்று அவர்கள் பிரம்ம தேவனின் மானஸ புதல்வர்கள் அதாவது பிரஜாபதி என வடமொழியில் அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் உறவுமுறையில் அண்ணன் தம்பி ஆனாலும் உடலளவில் உறவுமுறை கொண்டவர்கள், ஏனெனில் பிரம்ம தேவன் இவர்களை தன் படைப்புத்தொழிலுக்கு உதவும் பொருட்டு தன் மனதில் நினைத்ததனால் உருவானவர்கள். இவர்களுக்குள் உடல் சம்பந்தம் இல்லை. எனவே தான் இவர்களை அடிப்படையாக வைத்து பிரவரான்கள் வகைப்படுத்தப்பட்டன.

எங்கே உங்கள் கோத்திர ஸ்லோகத்தை படிக்க சென்றுவிட்டீர்களா???? 😉

இன்னும் பல தேடல்களுடன், ப்ரவரான்கள் கோத்திர அட்டவணை அடுத்த பதிவில்…

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

வாசவி ஜெயந்தி – 2019

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியன்று அஹிம்சை என்ற மாமந்திரத்தை போதிக்க அவதரித்தவர் வைஸ்ய குல அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி.

இந்த ஆண்டில் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் வாசவி ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

VYSDOM.in குடும்பத்தினர் பலர் நம்முடன் பகிர்ந்த வாசவி ஜெயந்தியின் புகைப்படங்களை ஒரு தொகுப்பாக வளங்கியுள்ளோம். ஜெய் வாசவி!

Click here to view Sri Kannika Parameshwari in 3D

Note: View the image using Facebook App

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஸ்ரீ வாசவி விஜயம் – ஆர்ய வைஸ்யர்களின் புனித நூல் உருவான வரலாறு

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் பேசும் ஆர்ய வைஸ்யர்கள் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு புனித நூலினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய தக்ஷிண கண்ட ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் வைஸ்ய பூஷணம் கோவை திரு. P.A. ராஜு ஸ்ரேஷ்டியாரின் எண்ணத்திற்கு இணங்க கோவை கிரந்தி வெங்கடகோபால் செட்டியார், சேலம் M.V. கோபால் செட்டியார், தமிழ் புலமை வாய்ந்த அனத்தூர் K. வெங்கட்ராமன் செட்டியார் ஆகியோர் இணைந்து ஸ்ரீ வாசவி விஜயம் எனும் புனித நூலினை இயற்றினர்.

ஸ்ரீ வாசவி விஜயத்தை இயற்றியவர்கள்

தெலுங்கு மொழியில் உள்ள ஸ்ரீ கன்னிகா புராணம், வைஸ்ய தர்ம பிரகாசிகா, வைஸ்ய தர்ம தீபிகா ஆகிய நூல்களை குறிப்புகளாய் கொண்டு ஸ்ரீ வாசவி விஜயம் இயற்றப்பட்டது. மொத்தம் 500 பக்கங்களை கொண்ட இப்புனித நூல், உடுமலை திரு. T.V. ராதாகிருஷ்ணன் செட்டியாரின் கோபால் பதிப்பகத்தில் அச்சடிக்கப்பட்டு 1943 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

பழனி திரு. குருசாமி செட்டியாரின் கைவண்ணத்தில் அட்டை படம்

இந்நூலின் மூலமாக நாம் வைஸ்ய குலத்தின் ஆணிவேர், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியின் வாழ்கை வரலாறு, வைஸ்ய குலத்தின் உன்னதம், வைஸ்ய கோத்திரங்கள் ஆகியவற்றை அழகிய தமிழில் அறிந்து கொள்ளலாம். இந்நூல் வெளியான பின், அனத்தூர் K. வெங்கட்ராமன் செட்டியாரை வைஸ்ய பாரதி, பாலகவி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்றார்.

ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்து கொண்டிருப்பது பாரத வல்லமை. அதேப்போல ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிதல் மிக மிக அவசியமல்லவா?! அதற்காக செய்யும் முயற்சிகளை பற்றியும் ஸ்ரீ வாசவி விஜயத்தை பற்றியும் பண்ருட்டி சோ. முத்துக்குமார் கூறுவதை கீழேயுள்ள காணொளியில் காணுங்கள்.


VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp