ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine வெளியீடு

VYSDOM.in (a Digital Media for Aryavysyas) மற்றும் Kannikadhanam.com (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine வெளியிடப்பட்டது.

வாசவி கிளப்ஸ் இன்டெர்னஷனலின் V501 மாவட்ட ஆளுநர் திரு. பத்ரி நாராயணன் BA., B.L., அவர்கள் கோவையில் நடந்த வாசவி கிளப் நக்ஷத்ராவின் இன்ஸ்டலேஷன் நிகழ்ச்சியில் eMagazine ஐ வெளியிட்டார்.

பிப்ரவரி மாத eMagazine இன் உள்ளடக்கம்:

  • ஆர்ய வைஸ்ய வதுக்களின் Profiles
  • ஆர்ய வைஸ்ய வரன்களின் Profiles
  • Dos and Don’ts in ரத சப்தமி | ஆன்மீக குரு திருமதி. விஜயநேதாஜியின் அறிவுரை
  • பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பொற்கோவில் கும்பாபிஷேகம் பற்றிய ஒரு பார்வை
  • இசைஞானி இளையராஜாவுடன் இசைக்கும் Guitar Maestro – Sadanandam | A Gem of Aryavysyas

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!

வாசவி அன்னையின் தியாகத்தை போற்றிய ஆர்ய வைசியர்கள்!

நம் குல தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி இவ்வுலகத்திற்கு அஹிம்சை என்ற மந்திரத்தை போதித்த வரலாற்றுமிக்க நிகழ்வே ஆத்மார்ப்பணம் (அக்னி பிரவேசம்).

நம் குலத்திற்காக பெருந்தியாகம் புரிந்த நம் அன்னைக்காக, இந்நாளில் உலகம் முழுவதும் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. VYSDOM சொந்தங்களாகிய தங்களுக்கு பல்வேறு வாசவி அன்னை கோவில்களின் புகைப்படங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். ஜெய் வாசவி!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!

பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பொற்கோவில்!

Penugonda_Aryavysya_Vasavi_Feature.png

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை நம் அன்னைக்காக கட்டப்பட்டுள்ள பொற்கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் மற்றும் வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டை என இருபெரு விழா நடந்தது என்பது அனைத்து ஆர்ய வைஸ்ய மக்களும் அறிந்ததே.

காண கண் கோடி வேண்டும்:

Penugonda_Aryavysya_Vasavi_Statue

ஐந்து அல்ல, பத்து அல்ல, கடந்த முப்பது ஆண்டுகளாக கோடிக்கணக்கான ஆர்ய வைஸ்யர்களின் உழைப்பாலும் நன்கொடையினாலும் இப்புனித சேத்திரம் கட்டப்பட்டுள்ளது.

காஸ்மிக் கதிர்களை இழுக்கும் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள 90 அடி உயரமான வாசவி அன்னையின் சிலையே இவ்வுலகத்தின் மிக உயர்ந்த பஞ்சலோக சிலையாகும். 40 டன் எடை கொண்ட இந்த பிரமாண்ட சிலை 185 அடி உயர பொற்கோவிலுற்குள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இப்பொற்கோவிலில் மொத்தம் 102 தூண்கள் உள்ளன. இது 102  ஆர்ய வைஸ்ய கோத்திரங்களை குறிக்கிறது, இத்தூண்களில் அன்னை வாசவி தேவியுடன் அக்னி குண்டத்தில் ஏறிய கோத்திர முனிவர்களின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கோவிலின் கோபுரம் இந்தியாவின் Top 5 உயர்ந்த கோபுரங்களை கொண்ட கோவில்களுள் ஒன்றாக இணைந்துள்ளது. இக்கோவிலின் கர்பகிரகமே உலகத்தின் மிகப்பெரிய கர்ப்பகிரகம் என்ற பெருமையும் பெறுகிறது.

ஆர்ய வைஸ்யர்களின் காசியாகிய பெனுகொண்டவிற்கு குடும்பத்துடன் சென்று அன்னையின் அருளை பெறுங்கள். ஜெய் வாசவி!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!

Image Credits: Vasavi Santhi Dham

வைஸ்ய வது வரன் ஜாதக பரிவர்தனை WhatsApp குழுக்கள்!

WhatsAppGroups_Aryavysya

கடந்த 10 வருடங்களாக நம் வாழ்க்கையிலும் மொபைலிலும் நிரந்தர இடத்தை WhatsApp பெற்றிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. Friends group, Family group, Bhakti group, Business group, Political group என்று அளவிட முடியாத எண்ணிக்கையில் WhatsApp குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒருவர் ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது WhatsAppஐ பயன் படுத்துகின்றனர் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது!

இத்தகைய WhatsApp ஐ கொண்டு நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த சில நல்லுளங்கள் வைஸ்ய வது வரன்களுக்கான ஜாதக பரிவர்தனை குழுக்களை செவ்வென நடத்தி நம் குலத்திற்காக இன்றியமையாத சேவையை செய்து வருகிறார்கள்.

அடுத்த Card ஐ காண அழுத்தவும் – வலமிருந்து இடம்

இவர்களின் சேவை இன்னும் சிறக்க நாம் மனதார வாழ்த்துவோம்.

கோரிக்கை:
ஜாதகம் எடுத்த உங்கள் சொந்தங்களுக்கு இவ்வாட்சாப் குழுக்களை பற்றி நிச்சயம் தெரிவித்து உதவி புரியவும்.

நீங்கள் அறிந்த, சிறந்த ஜாதக பரிவர்த்தனை குழுக்களை பற்றி எங்களுக்கு தெரிவியுங்கள், அடுத்த கட்டுரையில் அவர்களின் சேவையை கொண்டாடுவோம்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

புதிய வருடம்! புதிய வண்ணங்கள்!!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

116 வருட மு.கோ : தி.ர : வ.சீ : அ.அ: பெ.கு: வைஸ்ய தர்ம சத்திரம் | தேனி

Theni_Aryavysya_satram

காஞ்சிக்குப்போனால் காலாட்டி கொண்டே சாப்பிடலாம் இந்த சொலவடையை பெரும்பாலானோர் நம்மில் கேட்டிருப்போம் இதனுடைய உண்மையான விளக்கம் என்னவென்றால் காஞ்சிபுரம் ஊருக்குச் சென்றால் அங்கே நெசவுத்தொழில் நமக்கு கை கொடுக்கும் எனவே நாம் உழைத்து காலாட்டிக்கொண்டே நெய்து கொண்டே உழைத்து சாப்பிடலாம் உழைப்பிற்கு பஞ்சமிருக்காது! என்பதே சரியான அர்த்தம் ஆகும் அதைப்போல தேனிக்கு சென்றால் தெரிவித்து சாப்பிடலாம் என்பது புதுமொழி! என்ன வைஸ்ய சொந்தங்களே புரிந்தும் புரியாதது போல் உள்ளதா?

தேனியில் 116 வருடங்களாக யாரிடமும் எந்த ஒரு நன்கொடைகளும் பெறாமல் இடைவிடாது தொடர்ந்து… “இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நாளில் கூட இந்தவேளையில் கூட” அன்னதானம் செய்து வரும் ஓர் வைஸ்ய தர்ம சத்திரம் ஒன்று தேனி பழைய பேருந்து நிலையம் எதிர்புறம் செயல்பட்டு வருகின்றது. இந்த செயலைப் பார்த்து எங்கெங்கோ நாம் வைஸ்யராக பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் அளவிற்கு பெருமை கொண்ட செயல்.

இந்த தர்மசத்திரத்திற்கு ஓர் மிகப் பெரிய வரலாறு உண்டு அதாவது நூறு வருடங்களுக்கு முன் தேனி என்பது ஊராக இல்லை மதுரை செல்லும் சாலை பெரியகுளம் வழி திண்டுக்கல் செல்லும் சாலை சின்னமனூர்பாளையம் கம்பம் வழி குமுளி செல்லும் சாலை இப்படி மூன்று சாலைகள் சந்திக்கும் இடமாக முக்கூட்டு கூட்டுச்சாலை என்று இருந்தது இன்றளவும் கூட தேனி அல்லி நகரம் நகராட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த நகராட்சிக்கு முதன்முதலில் அல்லி நகரத்தை சேர்ந்த நம் இனத்தவர் தான் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி முக்கூட்டு சாலையில் வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம் சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வியாபாரிகள் விற்கவும் வாங்கவும் வந்து செல்வார்கள் நமது வைஸ்ய பிரமுகர்கள் மேற்படி கூட்டு சாலைக்கு கொள்முதலுக்கு வருவார்கள் அந்தக் காலத்தில் ஹோட்டல் சாப்பாட்டுக் கடைகள் இப்போது போல் இருக்காது எல்லோரும் மாட்டுவண்டியில் கூட்டுச்சோறு கட்டிக் கொண்டு வருவது வழக்கம் தற்போது இந்த வைஸ்ய தர்ம சத்திரம் இருக்கும் இடத்திற்கு பின்பக்கம் ஒரு வாய்க்கால் உள்ளது மேற்படி வாய்க்கால் கரையில் வெயிலில் அமர்ந்து சிரமப்பட்டு உணவு அருந்தி செல்வது அன்றைய வியாபாரிகளுக்கு வழக்கமாக இருந்தது மேற்படி வைஸ்ய தர்ம சத்திரத்தின் நிறுவனர்கள் யாவரும் அவரவருடைய சொந்த ஊர்களில் மற்ற அனைவராலும் மதிக்கப்பட்டு கௌரவமாக மரியாதையாக வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள் தங்களது சொந்த ஊரில் மிகவும் சீரும் சிறப்போடு வாழ்ந்து வரும் அவர்கள் தேனி ஊருக்கு வியாபார நோக்கத்திற்காக வரும்போது சாப்பிடுவதற்கு தோதாக ஓரிடம் இல்லாதது அவர்களை மிகவும் வேதனை பட வைத்தது நாம் மட்டுமில்லாமல் நம் இனத்தவர் எல்லோரும் தங்குவதற்கு இடமும் அனைவருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவானது தான் இந்த வைஸ்ய அன்னதான தர்ம சத்திரம்.

1900ஆம் வருடம் உத்தமபாளையம் மு. கோபால் செட்டியார் குமாரர் பாலசுப்ரமணியம் செட்டியார், கோம்பை. தி.ரங்கையன் செட்டியார், குமாரர் ராமசாமி செட்டியார், திருமலைசுப்பு செட்டியார், வையாபுரி செட்டியார் குமாரர் ஸ்ரீராமன் செட்டியார் நால்வரும் ஒன்று சேர்ந்து தற்போது உள்ள இந்த இடத்தை விலைக்கு வாங்கி இரண்டு வருடங்களுக்குள் கட்டிடங்கள் கட்டி வரும்போது கம்பம் அழகிரிசாமி செட்டியார் குமாரர் சுப்பிரமணியன் செட்டியார், வாசு செட்டியார், காளப்பன் செட்டியார் என்ற ஐந்து பேர்களுக்கு ஆண்டிப்பட்டி பெத்தி செட்டியார் மகன் குருமூர்த்தி செட்டியார் மனைவி வெங்க லட்சுமி அம்மாள், பெத்தின செட்டியார் குமாரர்கள் சுப்பிரமணியன் செட்டியார், நாகுலு செட்டியார் ஆகிய மூன்று பேர்களும் சேர்ந்து தங்களின் ஈவுப்படி பணம் கொடுத்து மேற்படி சத்திரத்திற்கு தங்கள் பெற்றோர்களின் இன்சியலையும் பெயரையும் சேர்த்து மு.கோ : தி.ர : வ.சீ : அ.அ: பெ.கு: வைஸ்ய தர்ம சத்திரம் என்று பெயர் வைத்து சிறப்பாக வருடம் முழுவதும் அன்னதானத்தை ஆரம்பித்து வைத்தார்கள் இந்த தர்மத்திற்கு வேண்டி அரிசிக்காக வயல்வெளிகளை எழுதி வைத்தார்கள் 1920ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இது சம்பந்தமாக ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அதில் இந்த தர்மம் செயல் இந்த உலகம் அளவிற்கும் நிரந்தரமாக நடக்கவேண்டும் என்பதற்காகவும் தனக்குப் பின்னால் வரும் வாரிசுகள் இந்த தர்ம சத்திரத்தை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் 27 தர்ம பரிபாலன நிபந்தனைகளை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் மேற்படி தர்ம சத்திரத்திற்கு விபரம் தெரிந்து​ வரும் நம் குல மக்கள் வந்து உணவு அருந்தி சற்று ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக உள்ளது இங்கிருந்து மட்டுமல்ல ஆந்திராவிலிருந்து பஞ்சு வியாபாரம் சம்பந்தமாக வருகின்ற நம் சமூகத்தினர் மிக மகிழ்ச்சியுடன் உணவருந்தி ஓய்வெடுத்து மகிழ்வாக செல்கின்றனர் 1991 ஆம் ஆண்டு தேனியில் தனியாக வாசவி மஹால் அமையப்பெற்றது வரை அதற்கு முன்பாக நம் சமுதாயத்தினரின் குடும்பங்களில் நடைபெற்ற அத்தனை விசேஷங்களும் இந்த தர்ம சத்திரத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது எந்தவித வாடகையும் வசூலிக்கப்படாமல் முற்றிலும் இலவசமாகவே விசேஷங்கள் நடத்தப்பட்டுவந்துள்ளது.

இந்த வைஸ்ய தர்மசத்திரத்திற்கு வரும் நம்மவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறி நம்முடைய வைசிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் நிரந்தரமாக இந்தப் பணியை செய்து வருகின்றார்கள். இந்த தர்ம சத்திரத்தை உருவாக்கியவர்களின் வாரிசுகள் இன்றளவும் இந்தப் பணியை முன்னோர்களின் விருப்பப்படி நம் குல தெய்வத்தின் அருள் வேண்டி செய்துவருகின்றார்கள்.

வயல் வெளிகள் மட்டுமல்லாது உழைப்பவருக்கு ஊதியம் கொடுப்பதற்காக தர்ம சாத்திரத்தின் முன்புறம் ஒரு சில கடைகளை கட்டி அந்த வாடகை வருமானத்தைக் கொண்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு இன்றளவும் அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்காக யாரிடமும் எந்தவிதமான நன்கொடைகளும் இதுவரையிலும் இனிமேலும் வாங்குவதில்லை என்பது இந்த தர்ம சாத்திரத்தின் தனிச்சிறப்பாகும்.

தேனிக்கு வரும் வைசிய குல சொந்தங்களே நீங்கள் யாவரும் எங்களது வைசிய தர்ம சாஸ்திரத்தில் வந்து தங்கிச்செல்ல உணவருந்தி செல்ல ஓய்வெடுத்து செல்ல உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம் என்கின்றார்கள் இந்த தர்ம சத்திரத்தின் நிர்வாகஸ்தர்கள். வாழ்க பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! இந்த தர்ம சத்திரத்தை உண்டாக்கிய பெரியோர்களின் வாரிசுகள் யாவரும் இறையருளால் மற்றவர்கள் போற்றத்தக்க வகையில் வாழ்ந்து வருகின்றனர் இது தர்மசிந்தனைக்கான பலன்.

இந்த சத்திரத்தைப் பற்றி உங்கள் அனைவருடன் பகிர்வதற்காக கண்ணன் ஆகிய நான் நேரில் சென்று இந்த தர்ம சாஸ்திரத்தின் செயல்பாடுகளை அறிந்து உங்களைப் போலவே ஆச்சரியப்பட்டு மெய்மறந்து சிலையாக ஆகாமல்……நின்று அங்குள்ள வருகையாளர்கள் பதிவேட்டில் பெயரெழுதி… கையொப்பமிட்டு… அன்னதானம் சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்து… வந்து அனுபவபூர்வமாக அனுபவித்து உங்கள் அனைவருடனும் எழுத்தால் பகிர்ந்துள்ளேன்.

அன்னதானம் என்று சொன்னவுடன் ஏதோ ஒப்புக்கு செய்யும் சாப்பாடு அல்ல மல்லிகை பூ சாதம், சாம்பார், ரசம், மோர் குழம்பு, அப்பளம், ஊறுகாய், மோர்,  மூன்று வகை கூட்டு என ஓர் விருந்து ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.

எதையுமே நம்முடைய அனுபவத்தில் வந்தால் தான் நம்மால் அதை 100% உணர முடியும். எனவே நீங்கள் யாரேனும் தேனி பக்கம் வந்தால் அனுபவிக்க வேண்டியது தென்மேற்கு பருவக்காற்று மட்டுமல்ல வள்ளலார் ஏற்றிய அணையாத அடுப்பை போல தேனியிலும் வள்ளல்கள் ஏற்றிய அணையா அடுப்பு எத்தனையோ உள்ளங்களின் உன்னதமான வயிற்றையும் மனத்தையும் குளிர வைத்துக்கொண்டுள்ளது. எனவே நீங்களும் ஒருமுறை அனுபவித்துப் பாருங்கள் அந்த ஆத்ம பேரானந்தத்தை! அன்னதான ஆனந்தத்தை!!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஶ்ரீ வாசவி சரித்திரம் நாட்டிய நாடகம்

Vasavi_History_Coimbatore

ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்துக்கொண்டிருப்பது பாரத வல்லமை. அதேப்போல பெண் குல உயர்வை போற்றும் வண்ணம் அவதாரம் செய்த ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிதல் மிக மிக அவசியமல்லவா?!

அந்நோக்கத்தில் கோயம்புத்தூர் ஆர்ய வைஸ்ய மஹிளா சபா தலைமையில் திருமதி. விஜய நேதாஜியின் வசனத்தில் உருவாக்கப்பட்ட நாட்டிய நாடக பதிவு கற்பனை கலப்பின்றி அழகான முறையில் அற்புத வடிவில் எளிதாக புரியும் வண்ணம் பாரத பரத கலைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை: இந்நாடகத்தை நம் வைசிய குலத்தின் உறவுகளுக்கு சென்று சேர்ப்பது, நம் ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரத்தை பரப்புவது, உங்களடைய நம்முடைய கடமையாகும்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

கோலம் சொல்லும் காலங்கள்! – சாரதா ஹரிஹரன்

வேதங்களையும் ஆகமங்களையும் நல்ல விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில், காலத்திற்கு ஏற்ற வகையில் முயற்சித்தே வந்துள்ளார்கள். ஆனால் இங்கு சென்னையை சேர்ந்த நம் வைஸ்ய குல சகோதரி திருமதி. சாரதா ஹரிஹரன் அவர்கள் ஓர் புதிய வழியை தானே உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். அதுதான் கோலம் சொல்லும் காலங்கள்!

இப்போதெல்லாம் பலரும், கோலங்களையும் அது சொல்லும் செய்திகளையும் பல்வேறு வைஸ்யர்களுக்கான WhatsApp க்ரூப்களில் கண்டிருப்பீர்கள், அவையாவும்  நம் சாரதா ஹரிஹரன் சகோதரியின் தனித்திறமையே ஆகும்.

இச்சிறப்புவாய்ந்த திறமைக்காக இவருக்கு வைஸ்ய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

திருமதி. சாரதா ஹரிஹரன் அவர்களின் கோலங்களை தனித்திறமையை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளீர்களா???

“மதி நிறைந்த நன்மாதம் மார்கழியை” பற்றி கோலத்தின் வாயிலாக நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல சாரதா ஹரிஹரன் பாணியில் திருப்பாவையும் திருவெம்பாவையும் கண்டு அறிந்து கொள்வோம்.

கோலம் சொல்லும் திருப்பாவை
கோலம் சொல்லும் திருவெண்பாவை

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஆரிய வைசியர் வரலாறு – நாம் யார்? | பாலா வெங்கட்ராமன்

History of Aryavysya_WhoWeAre

 கோமுட்டிகளுக்கும் ஜைனர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால்? அதற்கு நாம் ஆரியர்களா? திராவிடர்களா? என்பதை அறிய வேண்டும். அதற்குமுன் நாம் நம்முடைய முந்தைய வரலாறுகளை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்!

இதுவரை நாம் ஐரோப்பா நாட்டிலிருந்து வந்த ஒரு இனம் இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பறித்தனர்! அவர்கள் நம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல பாரத தேசத்தின் பூர்வீக பெருமைகளையும் தனதாக்கி கொண்டனர் என கண்டோம்.

உதாரணமாக பூர்வீகமாக இங்கு சிவாகமத்தின்படி பூசனை செய்து கொண்டிருந்த கோமுட்டிகளின் ஒரு சாரரான ஆரியவைசியர்களின் பூசனை செய்யும் உரிமையை பறித்து அவர்களை புலம் பெயர செய்தனர் என கண்டோம்.

உண்மையாக ஓர் இனம் இந்திய துணை கண்டத்திற்கு வந்து இங்கிருந்த மக்களின் வாழ்வுரிமை பறித்ததா..?

அந்த இனம் தான் ஆரியர்களா? அவர்கள் எங்கிருந்து வந்தனர்….? எந்த காலத்தில் வந்தனர் ? ஏன் வந்தனர்?

அப்படி அவர்கள் வந்திருந்தால் அவர்களின் வாரிசுகள் எங்கே…?

எல்லாவற்றிற்கும் விடை மற்றும் அதற்கான சான்றினை தேடி ஆராய்ந்தால் சரித்திரம் நமக்கு அருமையான சான்றுகளை தந்துவிட்டு சென்றிருக்கிறது.

யூதர்கள்

ஐரோப்பாவில் இருந்து ஒரு இனம் வந்ததற்கும் அவர்கள் ஆரியர்கள் என தன்னை அழைத்து கொண்டனர் என்பதற்கும், மேலும் அவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர் என்பதற்கும் அவர்களின் பரம்பரை டி.என்.ஏ சான்றாக உள்ளது.

ஆம்! இந்த ஆராய்ச்சி முடிவுகளை படிக்க டாக்டர் திருமதி.மினி கரியப்பா. இவர் கேரளா திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரபணுப் பிரிவு பேராசிரியர். இவர் 2001 முதல் 2005ம் ஆண்டு வரை மேற்கொண்ட மாபெரும் ஆராய்ச்சியில் சில இந்திய பிராமணர்கள் யூதர்களின் மரபணுக்களைக் கொண்டிருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஆராய்ச்சிக்காக உலகின் மிகச் சிறந்த இளம் விஞ்ஞானிக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த பிராமணர்களின் பட்டியல்…!!!!

1) கேரள நம்பூதிரிகள்.

2) மராட்டிய சிட்பவன் பிராமணர்கள் (கோட்சே வகையறா).

3)துளு பிராமணர்கள்.

4)சிரியன் கிருத்துவர்கள்.

ஆக ஐரோப்பிய யூதர்களே இங்கு வந்து குடியேறிய ஆரிய இனத்தவர் என்பது தீர்மானமாகிறது.

ஐரோப்பிய யூதர்களால் பிராமண வாழ்வுரிமை பறிக்கப்பட்ட கோமுட்டி மக்கள், வணிகம் செய்தனர். அவர்கள் வணிகத்திற்காக பல நாடுகள் சென்றனர் என்றும் வரலாற்று ஆய்வுக்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

கிட்டதட்ட 2000 ஆண்டுகள் முன்னர் ஆப்ரிக்கா நாட்டில் ஒரு கடற்கரை வணிக  நகரத்தில் பரத கண்டத்தில் இருந்து ஒரு வணிக கும்பல் வந்து குடியேறினர் எனும் வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது.

இதற்கான சான்றாக அந்த ஓவியம் இருக்குமிடம் ஆப்ரிக்கா நாட்டின் ஒரு நகரம்.அந்த நகரின் பெயர் கோமட்டி போர்ட் இந்த நகரத்தின் அருகில் உள்ள ஆற்றின் பெயர் கோமட்டி ஆறு, ஆக இங்கிருந்த கோமுட்டி மக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு வணிகத்தின் பொருட்டு சென்றுள்ளனர் என்பது புலனாகிறது.

ஆரிய வைசியர்கள் ஆரியர்களா?? திராவிடர்களா?? அடுத்த பதிவில்…..

TIT BIT

தென் ஆப்ரிக்காவில் கோமட்டி போர்ட் மற்றும் கோமட்டி ஆறு பற்றிய Wikipedia செய்தி இதோ –

https://en.wikipedia.org/wiki/Komatipoort

https://en.wikipedia.org/wiki/Komati_River

போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரின் 37 வருட பாரம்பரியம்!

போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரும் ஊர்பொதுமக்களின் பங்களிப்பில் கார்த்திகை தீப விழாவை கடந்த 37 வருடங்களாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திற்கு 2 நாள் முன்னதாக நமது வைஸ்யர்கள் குழு வீதி, வீதியாக ஜாதி மத பேதமின்றி கடைகள், வீடுகளில் தீபத்திற்கு எண்ணை, நெய், கற்பூரம், ஊதுபத்தி, வரட்டி, ரொக்கம் வசூலித்தார்கள். இது தவிர போளூர் பஜாரில் திரு.ப.சந்தானகோபால் செட்டியார் அரிசிகடை, திரு.ஈ.ஹோமநாதன் அரிசிகடையில் எண்ணை சட்டிகள் வைக்கப்பட்டு பொது மக்களிடம் எண்ணை சேகரிக்கப்பட்டது.

23-11-2018 வெள்ளிக்கிழமை மாலை 02.30 மணிக்கு சேகரிக்கப்பட்ட எண்ணை சட்டிகள், தூக்குகள் கொப்பரைகளை எடுத்துக் கொண்டு போளூர் சப்தகிரி மலைமேல் தீபம் ஏற்ற மேளதாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக போளூர் வாழ் பர்வதராஜ குலத்தவர்களே இந்த எண்ணெச் சட்டிகளை தலையில் சுமந்து செல்கிறார்கள். அதேபோல் இவ்வருடமும் அவர்கள் சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.Arjunan தலைமையில் அவர்களுடைய மகன்கள் தீபக் மற்றும் சத்தீஷ் ஆகியோர் எண்ணை சட்டிகளை சுமந்தனர்.

போளூர் பஜாரில் திரு.ஹேமநாதன் செட்டியார் அரிசி கடையிலிருந்து மேளதாளத்துடன் கார்த்திகை தீப ஊர்வலம் சென்றது. ஊர்வலத்திற்கு போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தின் தலைவர் திரு.ஈ.தனபால் செட்டியார் தலைமை ஏற்று நடத்தினார். இந்த திருவிழாவிற்கு முழு வீச்சில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நம்மவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. ஸ்ரீராமுலு செட்டியார் வழி நடத்தினார். சமாஜத்தின் உபதலைவர் திரு.அ.ராமதாஸ் செட்டியார் செயலாளர் த.கோவர்தனன் இணைச்செயலாளர்கள் ந.குப்பு செட்டியார் ஆ.தேவந்திரசெட்டியார் ஓ.துவாரகாசெட்டியார், செயற்குழு உறுப்பினர்கள் ப.சந்தானகோபால் செட்டியார், ஆ.ஜெயசங்கர் செட்டியார்,ஈ.ஹேமநாதன் செட்டியார், அ.சண்முகம்செட்டியார், மஹிளாசபா தலைவி ஓ.மஹேஸ்வரி, ஈ.கனகவல்லி மற்றும்  உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான இளைஞரணியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேளதாளத்துடன் சென்ற ஊர்வலம் வழியில் நமது குல தெய்வம் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மனின் ஆலயத்தை அடைந்து அங்கு வழிபாடு செய்து, பின்னர் 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மலையை பல தெருக்கள் வழியே சென்றது. வழி நெடுகிலும் அனைத்து தரப்பு மக்களும், எண்ணை, கற்பூரம் ஊதுவத்தி, வரட்டி (எரிப்பதற்கு) அளித்தனர். வழியில் உள்ள கோவில்களுக்கு நாங்கள் சேகரித்த எண்ணெயில் ஒரு பகுதியை அங்கு தீபம் ஏற்ற அளித்தோம். இதுபோல் ஊரிலுள்ள மற்ற கோவில்களுக்கும் எண்ணெய் கொடுத்தோம்.

இறுதியில் மலையடிவாரத்தை அடைந்து அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டு மலைப்படிகட்டுகள் வழியே மலை உச்சியை அடைந்தோம். அங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமியை சேவித்து விட்டு, கோவில் அருகிலுள்ள பாறையில் எண்ணை கொப்பரை வைத்து சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபட்டோம், ஜகத்ஜோதியாக எரிந்த தீப ஒளி சுற்று வட்டாரத்தில் 3 கிலோ மீட்டர் வரை தெரிந்தது.

இத்திருவிழாவை போளூர் வாழ் அனைத்து மக்களும் இணைந்து மதநல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டாக 37 வருடங்களாகச் செய்து வருகிறோம். இதற்கு நமது முன்னோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக ஆர்ய வைஸ்யர்களுக்காக இத்தகவலை பகிர்ந்தமைக்கு ஈ.தனபால் செட்டியார், தலைவர் ஆர்ய வைஸ்ய சமாஜம் போளூர் மற்றும் Vn . திரு. R. கோவர்தனன், Past President, Vasavi Club, போளூர் (V502A)அவர்களுக்கு VYSDOM.in இன் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய , இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp