Know the Interesting Facts About விநாயகர்

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்த நன்னாளில் விநாயகரின் பெயருக்கான காரணங்கள், விநாயகர் உருவத்திற்கான காரணங்களை தெளிவாக காண்போம்.

விநாயகன்

நாயகன் – என்றால் தலைவன், வி – என்றால் இணையான. அதாவது தனக்கிணையில்லாத நாயகன் இல்லாததால் விநாயகன் என அழைக்கப்படுகிறார் விநாயகர்.

ஞானத்தை குறிக்கும் விநாயகரின் தத்துவார்த்த புகைப்படம்

பிடித்து வைத்த பிள்ளையார் போல

சிவபெருமான் வருகையை உணர்ந்த பார்வதி தான் தினகும் குளிக்கும் குளக்கரையில் குளித்து நறுமணத்துடன் சிவத்தை வரவேற்க எண்ணினாள். அதனால் குளத்தின் கண் இருக்கும் மஞ்சளை பிடித்து சிவபெருமானை தியானித்து தனக்கு ஒரு மைந்தன் வேண்டும் என பிரார்த்திக்க. பிடித்து வைத்த மஞ்சளிள் அச்சு அசல் பிசகாமல் பிள்ளையார் உருவானார்.

இதனால் தான் பிடித்து வைத்த பிள்ளையார் போல என பழமொழி உருவானது. அது சரி பிள்ளையார் எனும் பெயர்க்காரணம் வர ஒரு நிகழ்வு இருக்குமல்லவா??

பிள்ளையார்

தவத்தின் பொருட்டு சென்ற ஈசனை நெடுநாள் கழித்து பார்க்க இருப்பதால், வாசனை திரவியங்களுடன் முகமலர வரவேற்க எண்ணிய பார்வதி அன்னை, தன் ஏகாந்தமாய் குளிக்கும் குளத்தின் கண் இருந்த மஞ்சளை பிடித்து விநாயகரை உருவாக்கினார், பின் தான் உருவாக்கிய பிள்ளையை தன் அந்தபுரத்தை காவல் காக்கும்பொருட்டு யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார்.

விநாயகர் காவலிருக்கும் சமயம் தன் மனைவியை காண வந்த சிவனார், அங்கே ஒரு பிள்ளை காவலிருப்பதை கண்டு இந்த பிள்ளை யார் என தனக்குள் கேட்டுக்கொண்டு, பிள்ளை யார் நீ என விநாயகரிடம் கேட்டார். இவ்வாறு சிவமே பிள்ளை யார் நீ என கேட்டதால் அச்சொல்லே மருவி பிள்ளையார் எனும் பெயரானது.

பிறபெயர்கள்

சிவபெருமானுடைய பூதங்கணங்களுக்கு தலைவனானதால் கணநாதன் என்றும், கணபதி எனவும் அழைக்கப்படுகிறார். வேதம் நான்கையும் ஒவ்வொரு கையிலே ஏந்தி, தும்பிக்கை ஒரு கையாகவும் கொண்டுள்ளதால் ஐந்துகரன் அல்லது ஐங்கரன் என அழைக்கப்படுகிறார்.

இதனை யோகமுறையான ஆன்மீக மார்க்கத்தில் பார்க்கும்போது, கண், வாய், செவி, காது, மூக்கு என ஐந்து பொறிகளையும் அடக்கிய ஞான நிலையில் இருப்பதால் விநாயகனை ஐங்கரன் என அழைக்கின்றனர்.

இவருக்கு யானைமுகன் என்ற பெயர் உண்டு. யானை முகன் என்பது குறியீடுதான் அதாவது யானை முகன் எனும் சொல்லில் யானை என்பதை பிரித்தால் யானை = ஆ + நெய், ஆன்மாவின் நெய் என்று பொருள். குண்டலினி யோகத்தை தொடர்ந்து செய்கையில் மேல் நாக்கின் மேல் பகுதியில் ஒருவித சுரப்பி சுரக்கும் இதை ஆன்ம நெய் என்பர் யோக நெறியில் உள்ளவர்கள். இதனை பீனியல் சுரப்பி என அறிவியல் பெயரால் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆ + நெய் தலையுடன் விநாயகப்பெருமான், ஆணவத்தலை அழிந்த பின்

இந்த ஆனம நெய் சுரப்பவர்கள் முகதேஜஸ் ஒப்பிட முடியாத அழகினை உடையது, இதனை தெய்வ காடாட்சம் என்பர். இப்படி ஆன்ம நெய் அதிகமாக சுரக்கும் ஞானத்தின் இருப்பிடமாக தெய்வீக முகத்தினை உடையதால் ஆ + நெய் முகத்தான் என்பது ஆனை முகத்தான் என மருவி அதுவே யானை முகத்தான் என ஆனது.

குறிப்பாக விநாயகருக்கு மனித தலைக்குப் பதிலாக யானை தலை வந்த புராண நிகழ்வுக்கு பின்னும் பெரிய ஆன்ம அநுபூதி இருப்பது சற்று உற்றுப்பார்த்தால் தெரியும்!!

மனித தலையுடன் ஆதி விநாயகர், இடம் – செதலபதி

தத்துவார்த்தம்

பார்வதி எனும் ஆன்மா, சிவத்தை கண்டு உணர தன்னை பண்படுத்தும் முயற்சியில் விநாயகன் எனும் குண்டலினி யோகம் செய்யும்போது அங்கே இடையறாத பெரும் போராட்டத்தில் சிவபெருமானின் அருளால் ஆணவம் எனும் மனித தலை அழிந்து, ஆன்ம நெய் எனும் தெய்வ தலை தோன்றுகிறது. இதுவே புராணம் கூறும் சிவ தத்துவார்த்த உணரல்!

விநாயகரின் இந்த நன்னாளில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Feature Image credits – Coimbatore Mrs. Lakshmipriya Sreedharan

கம்பு தேங்காய் பால் கொழுக்கட்டை | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது கொழுக்கட்டை. தேங்காய் அல்லது நுகுலு ஜில்டிகாயை காலம் காலமாக சுவைத்த நமக்கு நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் ஒரு புதுவித கொழுக்கட்டையை பரிமாற இருக்கிறார்.

கம்பு தேங்காய் பால் கொழுக்கட்டை!

வாருங்கள் சத்தான, சுவையான கம்பு தேங்காய் பால் கொழுக்கட்டையை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி! 😋

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

Ingredients & Process

Ingredients:

  • கம்பு மாவு அரை கப்
  • அரிசி மாவு ஒரு கப்
  • தேங்காய் விழுது 4 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் ஒரு டேபிள்ஸ்பூன்
  • வெல்லம் அரை கிலோ
  • தேவையான அளவு
  • தேங்காய் பால் 2 கப்
  • குங்குமப்பூ தேவையெனில் பயன்படுத்தலாம்
  • முந்திரி 20 கிராம்
  • நெய் 2 டேபிள்ஸ்பூன்

Process:

  • ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கொதி வந்த பிறகு, தேங்காய் பூ மற்றும் மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • 10 நிமிடம் மூடி போட்டு வைக்க வேண்டும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
  • மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேண்டும். அதில் உருட்டிய உருண்டைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் ஊற்றி தேங்காய் பால், ஏலக்காய், வருத்த முந்திரி, குங்குமப்பூ ஆகிவற்றை போட்டு இறக்க வேண்டும்.

சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை ரெடி!

சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை ரெடி!

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Know about our Chef!

Our Chef is not only a champ in Culinary skills, but also a champ in Pencil Carving. Recently, our Chef presented a seminar on Pencil Carving to PGP College students.

Click here: கௌரியை செய்ய SMART Techniques [வீடியோ] | Step by Step Instructions – Video Tutorial

கௌரியை செய்ய SMART Techniques [வீடியோ] | ஹரிஷ்மிதா ரமேஷ், Krish’s Clay Creations

கோவையை சேர்ந்த வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM.in வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார் [VIDEO Tutorial].

கௌரியை செய்ய ஹரிஷ்மிதா கூறும் Step by Step Instructions ஐ கீழே உள்ள வீடியோவில் கண்டு பழகுங்கள்! All The Best!!

Krish’s Clay Creations நிறுவினர் ஹரிஷ்மிதா; ஆர்வமுள்ள பலருக்கு Gowri Making, Replica Dolls, Coffee Painting, Pencil Carving, Fluid Art முதலியவற்றை கற்றுக்கொடுக்கிறார் (ஆன்லைனிலும்).

Knowledge is Power! Sharing Knowledge is Empowering!!

Thank You Harishmitha! – From Vysdom Family!!

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Read This: மனிதர்களின் போட்டோவை கொண்டு அவர்களை போலவே அச்சு பிசராமல் சிறிய பொம்மை (Replica Dolls) செய்து அசத்துகிறார் வைஸ்ய குலத்தை சேர்ந்த கோவை ஹரிஷ்மிதா ரமேஷ்.

Click here and Join with Vysdom family on Telegram

Click here and Join with us on Facebook Group

ஆர்ய வைஸ்ய இளைஞர்களே – Discover New Opportunities | 10% Reservation for EWS

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப் பிரிவினருக்கு (Economical Weaker Section – EWS) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவால் கிடைக்கும் சலுகைகளும் அங்கீகாரங்களும் பொதுப்பிரிவில் உள்ள ஆர்ய வைஸ்யர்களான நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்! தெரியப்படுத்த வேண்டும்!!

Eligibility Criteria for EWS Reservation:

  • குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் Rs. 8 லட்சத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Income shall also include income from all sources – salary, agriculture, business, profession, etc. for the financial year prior to the year of application.

  • குடும்பத்தின் மொத்த விவசாய நிலம் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்க வேண்டும்

Your family should not own or possess agricultural land of size 5 acres or above.

  • குடும்பத்தினரிடம் சொந்த வீடு இருக்குமேயானால் அவ்வீடு 1000 சதுர அடிக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

Your family should not own or possess a residential flat of area 1000 sq.feet or more.

  • குடும்பத்தினரிடம் – நகர் புறங்களில் சொந்த வீட்டு மனை இருக்குமேயானால் அம்மனை 100 Sq. Yard க்கு உட்பட்டு இருக்க வேண்டும்

To be classified under EWS, your family should not own or possess a residential plot of area 100 sq.yards or more in notified municipalities.

  • குடும்பத்தினரிடம் – நகர் புறம் அல்லாத இடத்தில் சொந்த வீட்டு மனை இருக்குமேயானால் அம்மனை 200 Sq. Yard க்கு உட்பட்டு இருக்க வேண்டும்

To be classified under EWS, your family should not own or possess a residential plot of area 200 sq.yards or more in areas other than in notified municipalities.

மேலே கொடுக்கப்பட்டுள்ள Criteria விற்கு உட்பட்டு தாங்கள் இருந்தால், EWS Reservation மூலமாக கல்வி அல்லது அரசு வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க உடனே தங்களுடைய “Income and Asset Certificate” ஐ தாசில்தார் போன்ற அரசு அலுவலரிடம் பெறுங்கள்.

Format of Income & Asset Certificate

அரசின் eSEVA வெப்சைடிலும் Income & Asset Certificate பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

eSeva வின் வாயிலாக “Income and Asset Certificate” விண்ணப்பிக்கும் வழிமுறை

ஆர்ய வைசியர்களாகிய நாம் EWS Reservation Quota ஐ பற்றி அறிந்து; இப்பிரிவில் தகுதியுடைய அனைத்து வைஸ்யர்களும் இவ்வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு பன்மடங்கு உயர வேண்டும்! வாழ்த்துக்கள்!! ஜெய் வாசவி!!!

Introduction of EWS category in UPSC Civil Service Examination

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Want to feature your product/Talent/News on Vysdom? Click here and get in touch with Vysdom team!

வைஸ்ய சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, அன்பான அழைப்பு!

Kannikadhanam_Aryavysyas

தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்!

நம் வைஸ்ய குல மக்களுக்காக 41வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் வரும் நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் The Southern India Vysya Association சார்பில் நடைபெற இருக்கிறது.

நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி நிச்சியதார்தம், உபநயனம் மற்றும் மாங்கல்ய தாரணம் ஆகிய சடங்குகளுடன் இலவச திருமணத்தை செய்து​கொள்ள விரும்பும் வைஸ்ய மணமக்கள் விரைவாக முன்பதிவு செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு:

For queries, contact:
Mr. T. Niranjan – 9385381705
email – vysyaassociation@gmail.com

Best wishes to the team and all the brides & grooms by Kannikadhanam.com – Free Aryavysya Matrimony website

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஆர்ய வைஸ்யர்களும் கோதாவரி நாகரிகமும் | ஆரிய வைசியர் வரலாறு – 06

நம்மில் பலர் நாம் ஆரியர்கள் என்று கூறிக்கொள்கிறோம்! உண்மையில் நாம் ஆரியர்கள் இல்லை!!

ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் ஆரியர்கள் டி.என்.ஏ நம்மில் இருந்திருக்கும் அல்லவா?

திருமதி. மினி கரியப்பா நடத்திய இந்திய முழுவதுமான சாதிவாரிய டி.என்.ஏ சோதனையில் பாரதத்திற்கு வந்த குடியேறியகளான யூதர்கள் எனும் ஆரியர்களின் டி.என்.ஏ நம்மில் இல்லை என தெளிவான சான்று கிடைத்துள்ளது.

அப்படி என்றால் நாம் யார்? திராவிடர்களா?!

ஆம் என்கிறது வரலாறு.

திராவிடர் எனும் சொல் யூதர்கள் தன்னை தானே உயர்த்தியும் பாரத பூர்வீக குடிகளை இழித்து பேசவும் தரையில் வாழ்பவன் எனும் பொருள் கொள்ளும் வகையில்

தரை + இடன் = தரையிடன்

என்பது வடமொழியில் த்ராவிடன் எனப்பட்டு பின் திராவிடன் என மருவியது.

Read here: ஆரிய வைசியர் வரலாறு – ஆரிய வைசியர் ஆரியரா? திராவிடரா?? Part – 05

உண்மையில் திராவிடன் எனும் சொல் பாரதத்தின் வெவ்வேறு ஆற்று நாகரிகங்களின் கூட்டுத்தொகை ஆகும்.

இதில் கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை என பல நாகரிகங்களை கூறலாம்.

இதில் ஆரிய வைசியர்களான கோமுட்டிகளின் நாகரிகம் கோதாவரி நாகரிகம் ஆகும். பாரத நாகரிகத்துக்குள் நமது நாகரிகம் வருவதால் நம்மை திராவிடன் என கூறிக்கொள்ளலாம்.

சொல்லப்போனால் நமது நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை விட கோதாவரி நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என்பதே மிகச்சிறந்த அடையாளம் எனலாம்.

பிராமண பட்டம்

நாம் ஆரியர்களா? திராவிடர்களா? என்றால் திராவிடர்கள் என்கிறது வரலாறு? திராவிடர் பாரத பூர்வீக குடிகளை குறிக்க பயன்படுத்தும் சொல். ஆரிய வைசியர்கள் பெரும்பான்மையோர் பிராமணர்கள்.

என்ன குழம்புகிறதா?

முதலில் ஆரியர்கள் வேறு பிராமணர்கள் வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எதற்காக வந்தேறி ஆரியர்கள் பிராமண பட்டத்தை தட்டிப்பரித்தனர்? அப்படி என்ன பிராமண பட்டத்தில் இருக்கிறது? அதற்கான விடை இதோ!

பிராமண நிலை

உண்மையில் பிராமணர் என்பது சாதி பிரிவு இல்லை. அது ஒரு நிலை. பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் எனப்பட்டனர்.

அதாவது அன்றைய கால கட்டத்தில் 6 வயதில் குருகுல கல்வியில் இணையும் ஒருவர் 18 ஆண்டுகள் கடும் பயிற்சியில் ஆயகலைகள் 64 ஐயும் கற்று தெளிந்து ஞானத்தை அடைவாராகில், அவரை பிராமணன் என உலகம் கண்டது.

18 ஆண்டுகள்

18 ஆண்டுகளை கொண்ட குரு குல கல்வியானது 6 நிலைகளை கொண்டது. ஒவ்வொரு நிலையும் 3 ஆண்டுகளை கொண்டிருந்தது. 6 வயதில் தனது குருகுல கல்வியை தொடங்கும் ஒருவன் தொடக்க நிலையில் கருப்பு வண்ண ஆடையை அணிய வேண்டும்.

பின் 4 முதல் 6 ஆண்டுகள் வரை நீல நிற ஆடையையும், அடுத்த மூன்று ஆண்டுகள் பச்சை நிற ஆடையையும், பின் 9 முதல் 12 ஆண்டுகள் வரை சிவப்பு நிறத்தையும், கடைசி 3 ஆண்டுகள் தம் முழு மனமுதிர்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக வெள்ளை நிறத்தையும் அணிந்தனர். குருகுல கல்வியை முடித்தவர் பிராமண நிலையை அதாவது ஞான நிலையை பெற்றவர் என்பதை காட்ட எப்போதும் வெள்ளை நிற ஆடையை உடுத்தினர்.

அவரையே இந்த உலகம் பின்பற்றியது. பிராமணன் எனும் சொல் சித்த புருஷர்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் குறித்தது.

இவ்வாறு பிராமண நிலையில் இருந்தவர்களை பாரத மக்கள் போற்றி வணங்கியதால் வந்தேறி ஆரியர்கள் பிராமண பட்டத்தை தட்டி பறித்தனர்!

புத்தரே யூத பிராமணர்களை பொய் பிராமணர்கள் என எள்ளி நகையாடியுள்ளார்.

வைசிய பிராமணர்கள்

அப்படி என்றால் வைசியர்கள் பிராமணர்களா? என்றால் ஆம் என்கிறது நம் புராண வரலாறு. வைசியர்கள் பிராமணர்கள் என்பதை விட, ஆரிய வைசியர்களில் பிராமண நிலை அடைந்தவர்கள் அதிகம் எனலாம். சான்றாக நம் 102 ஆரிய வைசிய கோத்திரத்தை வழிநடத்தும் குல குருக்களான வைசிய முனிவர்களை சொல்லலாம்.

ஆக நம்மில் பெரும்பான்மையோர் பிராமண நிலையில் இருந்தனர் என்பது தெளிவாகிறது.

ஜைனர்களான சமணருக்கும் ஆரிய வைசியர்க்கும் உள்ள தொடர்பு அடுத்த பதிவில்.

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஸ்ரீ சண்டி ஹோமம் | உலக நலத்திற்காக கள்ளக்குறிச்சி ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில்

ஆர்ய வைசியர்கள் பொதுவாக தங்களின் நலம், தங்களுடைய சுற்றத்தின் பற்றிய நலம், தங்களுடைய நாட்டின் நலம் ஆகியவற்றையும் தாண்டி உலக மக்களின் நலத்தை வேண்டும் பரந்த எண்ணத்தை கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உலக மக்களின் நலம் வேண்டி ஸ்ரீ சண்டி ஹோமம் நடைபெற இருக்கிறது.

Invitation

கள்ளக்குறிச்சி வைஸ்ய குல மக்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!

தகவலுக்கு நன்றி:
திரு. ஜெகதீஷ், புனகசில கோத்திரம்
நிறுவனர் – ஸ்ரீ வாசவி வரன்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ராகி ஜோதி பிண்டி | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

ஜோதி பிண்டி இல்லாமல் நமக்கு நாக சதுர்த்தி பண்டிகை முழுமையடையாது. பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவற்றை கொண்டு ஜோதி பிண்டியை செய்து பழகியுள்ள நமக்கு நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் ஒரு புதுவித ஜோதி பிண்டியை பரிமாற இருக்கிறார்.

ராகி ஜோதி பிண்டி!

வாருங்கள் சத்தான, சுவையான ராகி ஜோதி பிண்டியை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி! 😋  

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • ஈர பச்சை அரிசி மாவு 700 கிராம்
  • ராகி மாவு 300கிராம்
  • வெல்லம் 600 கிராம்
  • ஏலக்காய் பவுடர் தேவையான அளவு
  • எள் 1 டேபிள்ஸ்பூன்
  • வெள்ளரி விதை 1 டேபிள்ஸ்பூன்
  • பூசணி விதை 1 டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் 1
  • பெட்டுகடலை மாவு 150 கிராம்

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ராகி மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். அதில் தேங்காய் வெள்ளரி விதை, பூசணி விதை ஏலக்காய், ஆகியவற்றைப் போட்டு பதம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி மாவை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
  • நன்றாக சூடு ஆறிய பிறகு வேண்டிய வடிவத்தில், அளவில், ராகி ஜோதி மாவை செய்து கொள்ளலாம்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here to Know – நாக சதுர்த்தி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

ராகி – தேங்காய் – மாங்காய் சுண்டல் | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

பண்டிகை கால ஸ்பெஷல்களில் சுண்டல் வகைகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பலவகையான சுண்டல்களை நாம் சமைத்து சுவைத்திருந்தாலும்; ஒரு இன்னொவேட்டிவான சுண்டல் வகையை நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் நமக்கு பரிமாற இருக்கிறார்.

வாருங்கள் சத்தான, சுவையான ராகி – தேங்காய் – மாங்காய் சுண்டலை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி! 😋

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு அரை கப்
  • துருவிய தேங்காய் கால் கப்
  • பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • தாளிக்க கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு
  • துருவிய மாங்காய் கால் கப்
  • பெரும்காயம் ஒரு சிட்டிகை

செய்முறை:

PROCESS:

ஒரு கப் தண்ணீர் ஊற்றி – உப்பு சேர்த்து – கொதி வந்த பிறகு ராகி மாவை அதில் சேர்த்து கிளற வேண்டும். பிறகு மூடி போட்டு 15 நிமிடம் வைக்க வேண்டும்; பின் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான அனைத்து பொருட்களையும் போட்டு, அதனுடன், தேங்காய் மாங்காவையும் சேர்த்து உருட்டி வைத்த சுண்டலையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சுவையான, சத்தான சுண்டல் தயார்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Know about our Chef!

Our Chef’s recipe has got featured in an International Magazine – Food & Health.

கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்

கௌரம்ம பண்டக – நம் வைஸ்ய பாரம்பரியத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளான கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம், போலால அமாவாசை, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் மஞ்சளினால் செய்த கௌரியை வழிபடுவோம்.

கௌரியை நம் வீட்டில் வைத்து வழிபடுவதால் இயற்கையாகவே பாசிடிவ் வைப்ரேஷன் நம்முள் நிறைந்து இருக்கும்.

அப்பேர்பட்ட சக்தி வாய்ந்த கௌரியை; ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைஸ்ய குல பெண்களுக்கு வடிவமைக்க பயிற்சியளித்துள்ளார் கோவையை சேர்ந்த திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்! அதுவும் இலவசமாக!!

திருமதி. லக்ஷ்மிப்ரியா அவர்களின் தெய்வீகம் நிறைந்த கைவண்ணங்கள் சில உங்கள் பார்வைக்கு:

நம் Vysdom.in குடும்பத்தினருக்காக; திருமதி. லக்ஷ்மிப்ரியா தரும் சில SMART TIPS:

  • கௌரி செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்தி செய்ய வேண்டும்
  • மஞ்சள் தூள் தரமானதாக இருப்பது அவசியம். முடிந்தால் அரவை மில்லில் அரைத்து விற்கும் மஞ்சளில் செய்தால் நன்றாக இருக்கும்.
  • அந்த மஞ்சள் தூளையும் நன்றாக சலித்து கொண்டால் கௌரி வழுவழுப்பாக செய்ய வரும்.
  • மஞ்சள் தூளில் சிறிது எலுமிச்சை சாறு (வடிகட்டியது) கலந்து செய்யும் போது கலர் ப்ரைட்டாக இருக்கும்.
  • மஞ்சளை மிருதுவாக பிசைந்து செய்ய வேண்டும்.
  • கைகளை அடிக்கடி நீரில் கழுவி துணியில் துடைத்து பின் கௌரி செய்யும் போது நம் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து மஞ்சள் தூள் விரைவில் நிறம் மாறாமல் இருக்கும்.
  • மஞ்சளில் கௌரி செய்து வழிபடுவது மட்டுமே சிறந்தது.

அனைவருக்கும் கௌரியின் அருள் கிடைக்கட்டும். ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Kovai Mrs. Lakshmi Priya and Family

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp