வேட்டவலம் கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் 8 ஆம் நாள் நவராத்திரி உற்சவத்தில் நவகுஞ்சரத்தை பற்றி கோலம் வரைந்து அதைப்பற்றி மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை என்றும், ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது என்றும், சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின்வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்? அது தான் நவகுஞ்சரம் என்றும், ‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர் என்றும் அழகான விளக்கத்தை தந்திருந்திருந்தார்கள்.
இதைப் போன்ற நவகுஞ்சர விலங்கு பொறிக்கப்பட்ட முத்திரை சிந்து வெளி நாகரீகத்தில் கிடைத்திருக்கிறது. இவ்வாறு வித்தியாசமான விலங்குகளை இணைத்து ஏன் இவ்வாறு முத்திரையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளீர்களா? கீழேயுள்ள காணொளி பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்!
Dream, dream, dream. Dream Transforms into thoughts and thoughts result in action.
என்கிற பொன்மொழியை உலகிற்கு வழங்கியவர் People’s President என்றழைக்கப்படும் Dr. APJ. அப்துல் கலாம் ஐயா அவர்கள்.
Dr. ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை (15th Oct 2020) முன்னிட்டு, அவருக்காக ஒரு உலக சாதனையை படைத்துள்ளார் நமது வைஸ்ய சமூகத்தை சேர்ந்த Chef. குமரேசன் அவர்கள்.
230 பக்கங்களை கொண்ட ஐயா அவர்களின் ஆட்டோ-பயோகிராபி புத்தகமான அக்னி சிறகுகள் புத்தகம் முழுவதையும் மைக்ரோ நேம் ஆர்ட் ஒர்க் மூலமாக 61 சென்டிமீட்டர் உயரமும் 29.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரு வெள்ளைத்தாளில் (அதாவது மூன்றுக்கும் குறைவான A4 சீட் அளவில்) அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி உள்ளார்.
மேலும், ஐயா கலாம் அவர்களின் உருவ வரைபடம், அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தின் பெயர், கலாம் ஐயாவின் பெயர் மற்றும் SLV3 (முதன்முதலாக அவர் விண்ணில் செலுத்திய ராக்கெட்) உருவ படத்தையும் ஐம்பது மணி நேரத்தில் புத்தகத்தில் உள்ள எழுத்துகளால் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.
Zoom – Zoom – ZoomChef. Kumaresan speaking about the World Record with Press
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
கோயமுத்தூர் ஆர்ய வைஸ்ய மகா ஜனம் சார்பில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 30 பண்டிதர்கள் இணைந்து உலக நன்மைக்காக ஸ்ரீ சதசண்டி மஹா யாக விழா நடத்த உள்ளனர்.
ZOOM மற்றும் YouTube வாயிலாக நாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே இந்த மஹா யாகத்தில் பங்குபெறலாம்.
யாக சங்கல்பத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் – தங்கள் பெயர், கோத்திரம், நட்சத்திரம் மற்றும் தொலைபேசி எண்ணினை திரு. குப்தா அவர்களுக்கு (78717 77477) அனுப்புங்கள்.
யாகத்திற்கு நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளோர் திரு. ரவி அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் (99420 82821)
யாகத்தினை பற்றி மேலும் அறிந்து கொள்ள திரு. ஸ்ரீதர் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் (98422 45995)
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
எல்லோரும் கல்வி கற்கிறோம், கற்ற கல்விக்கெற்ற பணியில் அமர்கிறார். ஒரு சிலர் மட்டுமே கல்வியை ஆர்வத்துடன் பயிலும்போதே சில சாதனைகளை பயில்கின்றனர். அவ்வாறு தன் துறையில் ஆர்வத்துடன் சாதனை படைத்தவர் தான் நம் வைசிய சமூகத்தை சேர்ந்த திரு. பிரணவ், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த இவரின் தாய் திருமதி. மகாலட்சுமி மற்றும் தந்தை திரு. இரவி. இவர் பலிசெட்ல குலம், பரத்வாஜஸ கோத்திரத்தை சேர்ந்தவர்.
தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் Automobile Engineering படித்து வருகிறார். SAE வருடந்தோறும் Baja SAE எனும் தலைப்பில் போட்டியை நடத்துகிறது.
SAE என்பது Society of Automobile Engineers, அதாவது வெவ்வேறு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையை சேர்ந்த வல்லுனர்களின் இயக்கம். இந்த இயக்கம் வருடம் தோறும் உலகம் முழுவதும் உள்ள வளரும் புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், கண்டறியவும் Baja SAE என்ற தலைப்பில் புதுவகை அம்சங்களை கொண்ட வாகனங்களுக்கான போட்டியை நடத்துகிறது. அதில் காணொளி தேர்வில் வெற்றிபெறும் இந்தியாவில் சிறந்த 100 கல்லூரி மாணவர்கள் அணி மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் புதுவிதமான வாகனங்களை உருவாக்கும்.
சென்ற 2019-ம் வருடம் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற காணொளி தேர்வில் இந்திய முழுவதும் பங்கேற்ற அணிகளில் முதல் 100 இடங்களில் தேர்வாகி, ஜனவரி 2020-ல் நடைபெற்ற Baja SAE போட்டியில் பங்கேற்ற பிரணவ் தலைமையிலான அணி புதுவித அம்சங்களை கொண்ட குறைந்த பொருட் செலவில் All Terrain Vehicle– உருவாக்கி, பங்கேற்ற 100 அணிகளில் Static எனும் முதல் பிரிவில் இந்தியாவிலேயே முதல் அணியாக தேர்வு செய்யப்பட்டது. Dynamic எனும் இரண்டாம் பிரிவில் இந்தியாவிலேயே நான்காம் அணியாகவும், தென் இந்தியாவில் முதல் அணியாக தேர்ந்தேடுக்கப்பட்டது. இதற்காக அணி தலைவராக பல மாத உழைப்பை பிரணவ் அவர்கள் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களுடைய படைப்புகளை பற்றி பிரணவ் கூறுகையில்:
👉🏻 இந்த வாகனம் சாலை, மணல், மலைப்பாதை, நீர்நிலை வழுவழுப்பான பாதை என அனைத்து தடங்களில் செல்லுமாறு வடிவமைத்துள்ளோம்.
👉🏻 வாகனம் எரிபொருளில் இயங்காமல், பேட்டரி மூலமாக இயங்கும். மேலும் பேட்டரி நிலைகளை கண்காணிக்க Battery Manager ஒன்றை பயன்படுத்தி உள்ளோம். நம் மொபைலில் இருந்தே பேட்டரியை கண்காணிக்க முடியும்.
👉🏻 இதுவரை இன்ஜின்களில் மட்டுமே இன்ஜின் கூலர் இருக்கும், ஆனால் பேட்டரி மூலமாக இயங்கும் எங்கள் வாகனத்தில் பேட்டரி கூலர் பயன்படுத்தி உள்ளோம்.
👉🏻 பேட்டரி வெப்பநிலை அளக்க பொறுத்தப்பட்ட தெர்மாமீட்டரில் வெப்பநிலை உயர்வை தொட்டவுடன் ஆட்டோமெட்டிக் சென்சார் மூலம் பேட்டரியில் பொருத்தப்பட்ட பேட்டரிகூலர் தானாக இயங்கும்.
👉🏻 வண்டியின் நான்கு சக்கரங்களிலும் கார் போன்ற வாகனத்திற்கான டிஸ்க் பிரேக் பயன்படுத்தாமல், பைக்கின் ஹைட்ராலிக் டிஸ்க் ப்ரேக் மட்டுமே பயன்படுத்தி உள்ளோம்.
👉🏻 வாகன ஓட்டுனர் விபத்துகளின் போது வாகனம் தலைகுப்புற விழும்போதும், மலை பாதைகளில் விபத்துகளில் வாகனம் மேலிருந்து புறண்டு விழும்போதும், பாதுகாப்பாக இருக்க 5 pin safety Belt பயன்படுத்தியுள்ளோம்.
இதுபோல பல அம்சங்களை தன்னுடைய வாகனத்தில் பயன்படுத்தியுள்ளனர் பிரணவ் தலைமையிலான அணியினர்.
இது போன்ற வைசிய சாதனை இளைஞர்களை ஊக்குவிக்க நம் வைசிய சமூகம் முன்வர வேண்டும்.
உலகத்தின் தலைசிறந்த சொல் செயல்!
என்றும் அன்புடன்! பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன், ஆசிரியர் – ஆர்ய வைசியர் வரலாறு புத்தகம் 9710878517
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
இந்துக் காலக் கணிப்பு முறையில், இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
ஒருவர் பிறக்கும் போது இருந்த நக்ஷத்திரம், திதி, ஆண்டு ஆகியவை அவர் அறுபது வயதில் அடியெடுக்கும் பொழுது மீண்டும் வருவதை கொண்டாடுவதே சஷ்டியப்த பூர்த்தி விழா.
இத்தகைய சிறப்புமிக்க சஷ்டியப்த பூர்த்தி விழாவினை அறுபது ஆர்ய வைஸ்யர்களுக்கு இணைய வாயிலாக வாசவி கிளப்ஸ் Dist V502A குழுவினர் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி அன்று நடத்தி சிறப்பிக்க உள்ளனர்.
இந்த அறுபதாம் மணவிழாவில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் திருமாங்கல்யம், உடைகள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும்.
For registration and for more information, contact – Vn. KCGF. K.K. Thirinath Kumar, Project Chairman, 9566116783
This initiative by Vasavi Clubs International is supported by Vysya Sangamam Foundation and Kannikadhanam.com – Aryavysya Matrimony Website
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
வைஸ்ய சமூக மக்களின் மேம்பாட்டிற்காக பல சேவைகளை செய்து வரும் வைஸ்ய சங்கமம் பவுண்டேஷன் குழுவினர், வைஸ்ய மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்காக வைஸ்ய பிரம்மாக்கள் எனும் போட்டியினை நடத்த உள்ளனர்.
வைஸ்ய மாணவர்களின் கண்டுப்பிடிப்புக்களை மற்றும் படைப்புக்களை உலகறிய செய்யும் போட்டியே வைஸ்ய பிரம்மாக்கள்!
மேலும் விபரங்களுக்கு:
VYSDOM Family wishes All the best to Young Scientists!
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
அதாவது வைசியர்களில் உயர்பதவியில் இருக்கும் கலெக்டர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணம் குப்தாவிற்கு தோன்றியது.
அதாவது சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் தாங்கள் எவ்வாறு அவ்வாறு உயர முடிந்தது என்பதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அதனால் மற்ற வைஸ்யர்களும் பயன் பெறவேண்டும் என்று அவர் நினைத்தார். அதற்காக ஒரு சேவைச் சங்கம் ஆரம்பித்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
சரித்திரத்தில் திருப்புமுனையாக 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அகில இந்திய வாசவி சங்கம் பதினோரு உறுப்பினர்களுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. பிறகு பத்து வருடங்கள் கழித்து ஏழை மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவினால் என்ன என்கிற உயரிய எண்ணம் அவருக்கு மீண்டும் தோன்றவே போலியோ சொட்டு மருந்து போடுதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரம் மற்றும் கிரைண்டர் வாங்கித் தந்து அவர்களின் வறுமையைப் போக்குதல் போன்ற சேவைத் திட்டங்களை நம்முடைய வாசவி கிளப்பின் தந்தை கே.சி. குப்தா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆந்திராவில் நம் சமூகத்தை பிற சமூகத்தார் பெருமையுடன் பார்க்கத் தொடங்கினர். பிறகு ஆந்திராவில் பிற இடங்களிலும் வாசவி சங்கம் ஆரம்பித்தால் என்ன? என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றவே ஆந்திராவில் உள்ள வாராங்கலில் (Warangal) முதல் வாசவி கிளப்பின் கிளைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 1976 இல் இருந்து 1992 வரை ஆறு புதியச் சங்கங்கள் தோன்றின.
இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, உகாண்டா போன்ற பல வெளிநாடுகளில் வசித்து வந்த வைசியர்களும் வாசவிச் சங்கத்தை பெருமையுடன் ஆரம்பிக்க 2007 ஆம் ஆண்டு அகில இந்திய வாசவி சங்கத்தின் பெயர் அகில உலக வாசவிச் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
பிறகு மீண்டும் 2008 ஆம் ஆண்டு வாசவி கிளப் இன்டர்நேஷனல் என்று ஹைதராபாத்தில் சங்கம் பதிவு செய்யப்பட்டது. பிறகு பெண்களுக்காக வாசவி கிளப் வனிதா தோன்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியாவில் தோன்றி வெளிநாடுகளில் பரவிய ஒரே சங்கம் இது எனும் மாபெரும் சாதனையை செய்தது நம் வாசவி கிளப்.
நம் தமிழகத்தில் குறிப்பாக சங்கத்தின் கவர்னர்களாக விளங்கிய கோயமுத்தூர் திரு. பி.வி. சேகர் அவர்கள், ஈரோடு சௌபாக்கியா திரு. ஆதிகேசவன் அவர்கள், விருதாச்சலம் திரு. ராமதாஸ் அவர்கள், பொள்ளாச்சி திரு. பலராமன் அவர்கள், மதுரை திரு. ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் அதற்கு பின் வந்த அத்தனை கவர்னர்களின் அயராத முயற்சியால் இன்று சங்கம் பெரும் வளர்ச்சியுற்று மூன்று மாவட்டமாக வளர காரணமாக இருந்திருக்கிறார்கள்.
மேலும் 1961ம் ஆண்டு குப்தா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வாசவி கிளப் இன்று சிறப்பாக செயல்படுகின்ற ஒரு சர்வதேச சங்கமாக மாறி பெரிய ஆலமரத்தைப் போல் சேவை எனும் நிழலைப் பரப்பி சமத்துவம் எனும் பிராண வாயுவை வெளியிட்டு அடையாறு ஆலமரத்தைப் போல் இன்னமும் பெரியதாக வளர்ந்து கொண்டே வருகிறது.
அந்த ஆலமரத்தின் வேராக திகழ்ந்து நம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மை ஆசிர்வதிக்கும் தெய்வமாக இன்றும் திகழ்பவர்தான் வைஸ்ய ஸ்ரீ என்றும் வைஸ்யபந்து என்றும் புகழப்பட்ட கல்வகுண்டல சந்திரசேன குப்தா அவர்கள்.
இவர் 2001 ஆம் ஆண்டு 25 ஆம் தேதி அக்டோபர் மாதம் இந்த உலகை விட்டு மறைந்தார்.
அவர் மறைந்தாலும் அவரின் புகழ் சரித்திரத்தில் மட்டுமல்ல நம் மனதிலும் அழியா இடம் பெற்றுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இந்த வரலாற்றுத் தொடர் இதனுடன் முற்றும். ஆனால் வாசவி கிளப்பின் சேவைகள் சூரியன் சந்திரன் இருக்கும் வரை தொடரும்.
பண்ருட்டி சொ.முத்துக்குமார்
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
கொரோனா பெருந்தொற்று நம்மை சுற்றிலும் கடுமையாக பரவி உள்ளது. ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் பலரும் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடிய கொரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கொரோனாவின் அறிகுறி தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதனை கோவை கங்கா மருத்துவமனையின் அனஸ்தீஸியா துறையின் அக்கடெமிக் டைரக்டர் Dr. பால வெங்கட் அவர்கள் ஆர்ய வைஸ்ய மக்களுக்கு கூறுவதை கேளுங்கள்! விழிப்போடு இருங்கள்
#PreventionIsBetterThanCure
Thanks to Vysion Charitable Trust
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
ஆந்திர மக்களால் அமரஜீவி என அழைக்கப்படுபவர், ஆந்திரா எனும் தனிப்பெரும் மாநிலம் உருவாக காரணமாக இருந்தவரும் தன்னையே அர்ப்பணித்தவருமான பொட்டி ஸ்ரீராமலு அவர்கள் ஒரு ஆரிய வைசியர் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வரலாறு அவரை மறந்தாலும் ஒரு ஆரிய வைசியரான அவரை நாம் மறக்க கூடாது. அவரை பற்றி சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
பொட்டி ஸ்ரீராமலு
இவர் குருவைய்யா, இலட்சுமி அம்மா ஆகியோருக்கு 1901ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 16-ம் தேதி மகனாகப் பிறந்தார். இவரது சொந்த ஊரான படமட்டிபள்ளி பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது. அப்போது பழைய நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வறுமைக் காரணமாக அவர் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. தனது உயர்நிலை பள்ளிக் கல்வியை சென்னையில் முடித்தார். பம்பாயில் உள்ள விக்டோரியா ஜூப்ளி தொழில்நுட்ப நிறுவனத்தில் சுகாதாரப் பொறியியல் படித்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு 1928-இல் பம்பாயில் இந்திய ரயில்வேயில் பணிக்குச் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் அவரது மனைவியும், புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் தனது வேலையை விட்டு விலகி, காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் மனிதக்குலத்திற்குச் சேவை செய்யவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம், காந்தியின் உப்பு சத்தியாகிரகம் ஆகிய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
தனிமாநிலம்!
விடுதலைக்குப் பிறகு தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்க சென்னையை தலைநகராகக் கொண்ட தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு மக்களால் எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பிரதமர் சவகர்லால் நேரு போன்றவர்கள் நிராகரித்தனர். ஆந்திர மாநிலம் உருவாக்கப்படாததால் ஸ்ரீராமுலு சென்னையில் உள்ள அவரது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை 19 அக்டோபர் 1952 அன்று துவக்கினார். புதிய மாநிலம் அமைவதைப் பற்றிய அறிக்கை வெளிவராததால் ஸ்ரீராமுலு தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதன் காரணமாக 15 டிசம்பர் 1952 அன்று இரவில் இறந்தார். இதன் விளைவாக நேரு அவர்களால் 1953-ல் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது.
பொட்டி ஸ்ரீராமலு நினைவாக இந்திய அரசு வெளியிட்ட தபால் தலை
தெலுங்கு பேசும் மக்களுக்கு என ஒரு அடையாளமாக ஆந்திராவை உருவாக்கி தந்த ஒரு மாமனிதராய் விளங்கிய பொட்டி ஸ்ரீராமலு ஒரு ஆரிய வைசியர் என்பது நமக்கு எவ்வளவு பெருமை என்பதை சிந்தித்து பார்ப்போம்.
நினைவிடம்
பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராதாகிருஷ்ணன் சாலையில் 126-ம் எண் கொண்ட வீட்டில் இறந்தார். இவர் நினைவாக இந்த வீட்டை ஆந்திர மாநில அரசு நினைவு சின்னமாகப் பாதுகாக்கிறது.
Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp