இந்திய சுதந்திர போராட்ட தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள்

2891

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுப்பட்ட திருப்பத்தூர் தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை நாட்டு மக்களுக்கும், நம் வைஸ்ய சமுதாய மக்களுக்கும் அர்ப்பணித்தவர்.

திருப்பத்தூர் நகரில் காங்கிரஸ் கமிட்டியை தோற்றி வைத்து அதன் தலைவராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு, தன் குடும்பத்தை மறந்து தியாகம் பல செய்து சிறை சென்றவர்.

கர்ம வீரர் காமராஜர், கக்கன், ம.போ.சி போன்ற தலைவர்களுடன் இணைந்து ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி சிறையில் ஆறு மாதங்களுக்கு மேல் வாடியவர்.

தன்னுடைய துணைவியார் திருமதி.வரலட்சுமி அம்மாளின் 50 பவுன் ஒட்டியாணத்தை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை சுதந்திர போராட்டத்திற்காக நிதி அளித்த வள்ளல் திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் ஆவார்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின் இந்திரா காந்தி அவர்களின் கைப்பட வரைந்த தாமிரபத்திரத்தை பெற்றார்.

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகளுக்கு அரசு அளித்த நிலத்தினை வினோபா பாவேயிடம் தாரை வார்த்த மாமனிதர் திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்களின் பெயர் இந்திய அரசு வெளியிட்ட “Who is Who” என்ற புத்தகத்தில் இடம்பெற்றளது.

திருப்பத்தூர் மைய நகரில் தான் தொடங்கிய ஜவுளி கடைக்கு நாட்டின் முதல் ஜனாதிபதியான திரு. ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஞாபகார்த்தமாக ‘பிரசாத் எம்போரியம்’ என பெயர் வைத்தார் இந்த தேச பக்தர்.

ஆர்ய வைசியர் சமாஜம் மற்றும் திருப்பத்தூர் கன்னிகா பரமேஸ்வரி கல்யாண மண்டபம் ஸ்தாபகராக நம் வைஸ்ய சமூக மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல உதவிகளை செய்தார்.

பலராலும் கொண்டாடப்பட்ட தலைவரான திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்களை நாம் அனைவரும் இணைந்து போற்றுவோம்.

Details shared by – திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் Mob: 8754677363 | திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்களின் மகன் வழி பெயர்த்தி

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group