சாதனை பெண்மணி விருது பெறப்போகும் ஆர்ய வைஸ்ய பெண்மணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இஷ்வாகு கோத்திரத்தை சேர்ந்தவர் திருமதி. சுகன்யாலட்சுமி இராம்மோகன் அவர்கள், கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர். இவர் வேலூர் தங்க கோவிலில் நடக்க இருக்கின்ற பாலாறு பெருவிழா, மாத்ரு சக்தி 2022 என்ற பெண் துறவியர் மற்றும் மகளிர் மாநாட்டில் சாதனை பெண்மணி என்ற விருது பெற இருக்கிறார்.

இவரின் சாதனைகளாவன

பென்னாகரம் நகரில் உள்ள சிவா விஷ்ணு ஆலயத்தில் உள்ள ஆலய சன்னதிகளை பல்வேறு மக்களின் உதவியுடன் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்தியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

கிராமங்கள் தோறும் விளக்கு பூஜை என்ற திட்டத்தில் இணைந்து பென்னாகரம் நகரத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி இந்து மத ஆன்மீக விழிப்புணர்வை கிராமத்து பெண்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் வீடுகள் தோறும் லலிதா சகஸ்ரநாமம் என்ற திட்டத்தில் பெரும்பங்கு ஆற்றி வருகிறார். இவரின் சேவையை பாராட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து இயக்கம் இவருக்கு பென்னாகரம் நகரில் பதவியை வழங்கியுள்ளது.

மேலும் வருடா வருடம் ஆஞ்சநேய பக்த ஆன்மீக இயக்கத்தினால் நடத்தப்படுகின்ற ஆஞ்சநேய சிலை பிரதிஷ்டைக்கு பல கோடி இராம நாமங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

இதுவரை 10 கோடிக்கும் மேல் இராமநாமங்களை சேகரித்து 4 ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

பொறுப்புகள்

திருமதி.சுகன்யா லட்சுமி இராம்மோகன் அவர்கள் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் தருமபுரி மாவட்ட பொருளாளராக திறம்பட நம் ஆர்ய வைஸ்ய சமூக பணியை மேற்கொண்டு வருகிறார்.

பென்னாகரம் சிவா-விஷ்ணு சேவா அறக்கட்டளை தலைவராக உள்ளார். பென்னாகரம் நகர விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொறுப்பாளராக உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் பென்னாகரம் ஒன்றிய துணை தலைவியாக உள்ளார். விரைவில் தருமபுரி மாவட்ட மகளிரணி நிர்வாகிகளில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இவர் இன்னும் பல சமூக மற்றும் சமய பணிகளை செய்து நம் சமூகத்திற்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல வாசவி அன்னையை வேண்டி வாழ்த்துவோம்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் வரும் வைகாசி மாதம் 30 ஆம் தேதி, திங்கட்கிழமை (13-06-2022) அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக குழுவின் இணை செயலாளர் திரு. P. பிரபு அவர்கள் வைஸ்ய குல மக்கள் அனைவரையும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறார்.

விழா அழைப்பிதழ்

வாசவி ஜெயந்தி திருநாளன்று 170ற்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பெறப்பட்ட ஶ்ரீ வாசவி அம்மனின் திருவுருவங்களின் புகைப்பட தொகுப்பு, தங்கள் தரிசனத்திற்காக!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Work in Progress

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

What Next? Career Guidance Program by தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா

10th, பிளஸ் 2 வகுப்புக்குள் நுழைந்து விட்டாலே மாணவ மாணவிகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ற, ஆர்வத்திற்கு ஏற்ற உயர்கல்வி எது, எவ்வாறு அதில் சேர்வது என்கிற எண்ணம் மேலோங்கும்.

நம் வைஸ்ய குலத்தின் எதிர்காலமான – வைஸ்ய மாணவர்கள் அனைவரும் தங்களின் எதிர்கால படிப்பினை நன்கு ஆராய்ந்து சேர வேண்டும் என்கிற நோக்கில் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி திண்டுக்கல் வாசவி மஹால் மேடா அரங்கத்தில் What Next? என்கிற கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சியினை நடத்த உள்ளனர்.

திண்டுக்கல் ஆர்ய வைஸ்ய மகாசபா நடத்த இருக்கும் What Next கல்வி முகாமிற்கு திண்டுக்கல் ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் திரு. E.R.K.M. இராஜசேகரன் அவர்கள் தலைமை தாங்க உள்ளார். முகாமினை தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா தலைவர் திரு. Er. R. ராமசுப்ரமணி அவர்கள் துவங்கி வைக்க உள்ளார். சேலம் Narasus Sarathy Institute of Technology’s Vice Chairman and Secretary கல்வியாளர் திரு. G. பிரபாகரன் அவர்களும் அக்கல்லூரியின் Director கல்வியாளர் திரு. R. மோகன்குமார் அவர்களும் இம்முகாமில் பங்குபெறும் மாணவர்களுக்கு உயர்கல்வியை பற்றிய ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

Check out the Invitation below for the Career Guidance Program:

9th, 10th, +1, +2 பயின்று வரும் வைஸ்ய சமூக மாணவர்கள், இம்மாபெரும் கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, What Next என்கிற தங்களின் கேள்விக்கு விடையினை கண்டுபிடியுங்கள். All the Best 👍

வாசவி ஜெயந்தி திருநாளன்று 170ற்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பெறப்பட்ட ஶ்ரீ வாசவி அம்மனின் திருவுருவங்களின் புகைப்பட தொகுப்பு, தங்கள் தரிசனத்திற்காக!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Global Green 2G – Powered by WAM TN Mahila Vibhaag

மண் வளத்தை காத்திடவும், பாரம்பரிய விதைகள், நெல் வகைகள் பற்றிய விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லவும் “GLOBAL GREEN- 2G” என்ற திட்டத்தினை WAM TN Mahila Vibhaag அமைப்பினர் தொடங்கியுள்ளனர்.

இந்த உன்னத முயற்சியின் பலனாக பல்வேறு ஊர்களிலிருந்து 400ற்கும் மேற்பட்டோர் விதைத்தூவி செடி வளர்த்தல். பூச்செடிநடுதல். மரக்கன்று நடுதல் என பல்வேறு பிரிவுகளில் பங்குபெற்று பூமி அன்னையை செழுமையாக்கி உள்ளனர்.

வாசவி ஜெயந்தி திருநாளன்று 170ற்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பெறப்பட்ட ஶ்ரீ வாசவி அம்மனின் திருவுருவங்களின் புகைப்பட தொகுப்பு, தங்கள் தரிசனத்திற்காக!

பசுமை சிந்தனையை மாணவ மாணவியர் மனதில் பசுமரத்தானியாக பதிய வைக்கும் இந்த சேவையின் திட்ட குழுத்தலைவர் திருமதி. பிரவீணா அருண் – President –
WAM-TN மற்றும் Global Green – 2022 திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக WAM-TN EC Members அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

தாங்களும் Global Green – 2022 சேவையில் பங்குகொள்ள விரும்பினால், Global Green – 2022 வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்திடவும்:
https://chat.whatsapp.com/K6WF8e2T0Lt9s7hXAxf21y

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

மாவிளக்கு மாவினை கொண்டு சாதனை புரிந்த ஆர்ய வைஸ்யர்கள்!

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பிறந்தநாளை முன்னிட்டு நம் குலத்தவரின் நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும் உலகம் முழுவதும் 204 வெவ்வேறு இடங்களில் ஆர்ய வைஸ்யர்கள் பலர் இணைந்து மாவிளக்கு மாவினை (ஜோதி பிண்டி) கொண்டு வாசவி மாதாவின் பாதத்தை உருவமைத்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்துள்ளனர்.

இந்த சிறப்பு மிக்க சாதனைக்கு முன்னோடியான திருமதி. ஜீவிதா பிரவீன்குமார், President – கடலூர் மாவட்ட ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த வைசிய வள்ளல் திரு. வசந்தம் V. ராமதாஸ் அவர்கள், திருமதி. பத்மாவதி ராமதாஸ் அவர்கள், திருமதி. லட்சுமி பாலாஜி அவர்கள், திரு. V. ராம்குமார் அவர்கள் மற்றும் விருத்தாச்சலம் ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வாசவி ஜெயந்தி திருநாளன்று 170ற்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பெறப்பட்ட ஶ்ரீ வாசவி அம்மனின் திருவுருவங்களின் புகைப்பட தொகுப்பு, தங்கள் தரிசனத்திற்காக!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Heroes of Aryavysyas – Mrs. பிரவீணா அருண்

பலிசெட்ல கோத்திரத்தை சேர்ந்த பென்னாகரம் திருமதி. பிரவீணா அருண் அவர்கள் கடந்த பதினெட்டு வருடங்களாக பல பிரபல இதழ்களில் தனது சிந்தனைகளை தொடர்ச்சியாக கட்டுரைகளின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

தன்னம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், ஆன்மீக தொடர்கள் ஆகிய தலைப்புகளில் நூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரபல இதழ்களான மங்கையர் மலர், தீபம், ஶ்ரீ ப்ரம்மம் மற்றும் பல இதழ்கள் திருமதி. பிரவீணா அவர்களுக்கு சிறந்த எழுத்தாளர் எனும் விருதினை அளித்து கவுரவித்துள்ளார்கள்.

சமூக செயற்பாடளரான திருமதி. பிரவீணா அவர்கள் உலக ஆர்யவைஸ்ய மகிளாவிபாக் WAM தமிழ்நாடு, கன்யகாராகாலயா இசைக்குழு, திருப்பதி தாச சாகித்யா ஸ்ரீ ஹரிமண்டலி ஆகிய அமைப்புகளில் பெரும் பொறுப்புகளை ஏற்று மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.

மேலும் – ஸ்வர்ண மகிளா விருது, வைஸ்ய ஆன்மிக ரத்னா விருது, வைஸ்ய சாதனையாளர் விருது, கின்னஸ் சாதனை, வ. உ. சிதம்பரனார் விருது, VSG-ICON விருது, National Pride of Woman விருது ஆகிய பல விருதுகளின் சொந்தக்காரராக திகழ்கிறார்.

கவிதாயினியாக, எழுத்தாளராக, நிருபராக, பாடகியாக, சமூக சேவகியாக, ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வரும் திருமதி. பிரவீணா அருண் அவர்கள் சமீபத்தில் World Aryavysya Mahasabha Mahila Vibhaag (WAM) – தமிழ்நாடு அங்கத்தின் மாநில தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் பணி சிறக்க VYSDOM குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

A Spiritual Tour to Penugonda Sri Vasavi Kannika Parameswari Temple [VIDEO]

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் ஆலயத்தை காண கண் கோடி வேண்டும்.

பல சிறப்புகளை கொண்டுள்ள பெனுகொண்டா ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் தெய்வ தரிசனத்தை காணுங்கள்! ஜெய் வாசவி!! 🙏

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா – புதிய மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

நம் வைஸ்ய குல மக்களின் குரலாக விளங்கி வரும் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் 2022 – 2025 ஆம் ஆண்டிற்கான மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, திருச்சி ஸ்ரீ வாசவி மஹாலில் நடைபெற உள்ளது.

புதிய தலைவர்களாக பொறுப்பேற்க உள்ள:

திரு. Er. R. ராமசுப்ரமணி அவர்கள் – தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா
திருமதி. லக்ஷ்மி பாலாஜி அவர்கள் – தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக்
திரு. G. ராஜேஸ் அவர்கள் – தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி

ஆகியோருக்கு VYSDOM குடும்பத்தினர்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள்! ஜெய் வாசவி!!

விழா அழைப்பிதழ்

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைஸ்ய சங்கமம் – VSG ICON 2022 சர்வதேச மாநாடு

ஏழு வருடங்களுக்கு முன் மதுக்கூர் திரு. P. நந்தகுமார் அவர்கள் வைஸ்ய சங்கமம் என்கிற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவினை துவக்கினார்.

இப்பொழுது, வைஸ்ய குலத்தை சார்ந்த பல்துறை வல்லுநர்கள் சங்கமிக்கும் இடமாக வைஸ்ய சங்கமம் வாட்ஸ் ஆப் குழு திகழ்கிறது. இக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல இன்றியமையாத சேவைகளை செய்து கொண்டே இருக்கின்றனர்.

பல சாதனைகளை படைத்த வைஸ்ய சங்கமம் குழுவின் VSG – ICON 2022 சர்வதேச மாநாடு புதுச்சேரி Ocean Spray ரிசார்ட்டில் கடந்த மார்ச் மாதம் கோலாகலமாக நடந்தேறியது.

இந்த மாநாட்டில் மதுக்கூர் திரு. நந்தகுமார் அவர்கள் வரவேற்புரையை நல்கினார். பின்னர், வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் தலைவர் சின்னசேலம் முனைவர் A. அரவிந்தன் அவர்கள் துவக்கவுரையை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக திரு. கஸ்தூரிரங்கன் அவர்கள் – முன்னாள் AVMS தலைவர், வாசவி கிளப் V503A மாவட்ட ஆளுநர் திரு. சதீஷ் குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குழு உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களுக்கு VSG – கர்ணா விருது, VSG – துரோணா விருது, VSG – சப்போர்ட்டர் விருது, VSG – பெண் சாதனையாளர் விருது என விருதுகள் வழங்கப்பட்டது.

மாநாட்டினை வெகுசிறப்பாக நடத்திய விழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு. நந்தகுமார் அவர்கள், திரு. பிரகாஷ் அவர்கள், திரு. பாலமுருகன் அவர்கள், திரு. ஹரிராம் பிரசாத் அவர்கள், திரு. பிரதாபன் அவர்கள், திரு. ராமதாஸ் அவர்கள் அனைவருக்கும் ஒரு சல்யூட்.

வைஸ்ய சங்கமம் குடும்பத்தினர் குதுகலமாக சங்கமித்து அகமகிழ்ந்து மனம் நிறைய மகிழ்ச்சியுடனும், கை நிறைய நினைவு பரிசுகளுடனும் நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றனர்.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

பண்ணுருட்டி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் – சிறப்பு தகவல்கள்

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருக்கோவிலின் உள்கூட்டின் மேல்புறத்தில் சக்திவாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சக்கரமும், இருதய கமலமும் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிலின் வசந்த மண்டபத்தின் மேல் அபூர்வ பிரமிடு ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

பண்ணுருட்டி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் நடந்தேறிய கும்பாபிஷேகத்தை பற்றியும், ஸ்ரீ சக்கரம் மற்றும் இருதய கமலம் ஆகியவற்றின் உன்னத சிறப்புகளை நம் பண்ருட்டி சொ. முத்துக்குமார் அவர்கள் கூற கேட்போம்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group