Draw The Lion King | Navratri Utsav – 2019

VYSDOM.in, WAM – South India Mahila Vibagh and Kannikadhanam.com presents Vysya’s Navratri Utsav – 2019

Day4 – Draw with Dharsini | The Lion King

Mufasa மற்றும் Simba இவர்களை பிடிக்காத குழந்தைகளே இருக்கமாட்டார்கள். The Lion King இல் வரும் கதாபாத்திரங்களான Mufasa மற்றும் Simba வினை ஓவியமாக வரைய கற்றுக்கொடுகிறார் சென்னையை சேர்ந்த வைஸ்ய குல Budding Artist ப்ரியதர்ஷினி.

Click on the video tutorial, you’ll learn how to draw Mufasa and Simba From The Lion King in easy steps

Click here to draw the 3 Goddess – Saraswathi, Lakshmi and Durga

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

4th Tip for Healthy Living – Dos and Don’ts during Oil Bath | Dr. Bala Naga Lakshmi

உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் நான்காவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 3rd Tip Shared by the Doctor for Healthy Living

Day 4 – Do’s and Dont’s during Oil Bath

எண்ணெய் தேய்த்து குளித்தல்

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நல்லெண்ணையை பயன்படுத்த வேண்டும், எண்ணெய் தேய்க்கும் பொழுது எண்ணெய்யை ஒவ்வொரு காதிலும் மூன்று துளிகளும் ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகளும் விட்டு பின் தலை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மெதுவாக தேய்க்கவும்.

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையில் 6.30 மணிக்குள் குளித்து முடித்து விடவேண்டும்.

எந்தெந்த நாட்களில் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்

👨🏻‍🦰 ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்

👱🏻‍♀ பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய் குளியல் அன்று செய்ய கூடாதவை

  • பகல் தூக்கம் கூடாது
  • வெயிலில் அலைய கூடாது
  • உடலுறவு கூடாது
  • அதிக உழைப்பு கூடாது
  • மாமிச உணவுகளை தவிர்க்கவும்

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Colourful Navratri – Colourful Food – Red | ஆஹா ஏமி ருச்சி – Day 3

நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day3 | Colour – RED | Recipe – Beetroot Halwa

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • பால்  – 120 ml
  • துருவிய பீட்ரூட் – 300 gms.
  • நெய் – 50 ml
  • சர்க்கரை – 300 gms.
  • கோவா – 100 gms
  • முந்திரி – 20 gms

செய்முறை:

  • ஒரு கடாயில் துருவிய பீட்ரூட் மற்றும் பால் சர்க்கரை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்
  • சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்
  • சுவையான பீட்ரூட் அல்வா தயார்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

3 Creative Ideas – பிளாஸ்டிக்கில் கைவண்ணம் | Crafting Ideas by நவீனா கிரண்

VYSDOM.in, WAM – South India Mahila Vibagh and Kannikadhanam.com presents Vysya’s Navratri Utsav – 2019

#Day2 – Crafting Ideas by Naveena

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒடுக்க அனைவரும் ஒன்று கூடினாலும், யதார்த்தத்தில் பிளாஸ்டிக்கே வெல்கிறது.

உங்களிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கிறதா? குப்பையில் போட்டு சுகாதாரத்தை மாசுபடுத்தாமல் அப்பாட்டில்களினை அழகிய, உபயோகமுள்ள பொருட்களாக மாற்றும் Crafting Ideas களை பெங்களூருவை சேர்ந்த திருமதி. நவீனா கிரண் தருவதை காண்போம்! சுகாதாரத்தை காப்போம்!!

#CraftingIdea-1 | Plastic Plantation

#CraftingIdea-2 | Candle Holder

#CraftingIdea-2 | Wrist Band

SAY No to PLASTIC! Save Environment!!

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

3rd Tip for Healthy Living – Your Food, Your Health | Dr. Bala Naga Lakshmi

உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் மூன்றாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 2nd Tip Shared by the Doctor for Healthy Living

Day 3 – Your Food, Your Health

காலையில் எழுந்து பல் துலக்கிய பின், காபி அல்லது டீ போன்றவற்றை குடிக்காதீர்கள். டீ, காபி குடித்தால் அதில் உள்ள Caffine மூளையை தூண்டி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதற்கு பதிலாக நீராகாரத்தை பருகுங்கள்.

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்:

  • சிட்ரஸ் பழங்கள் – சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை
  • சோடா
  • காரமான உணவுகள்
  • வெள்ளரிக்காய்
  • பச்சை காய்கறிகள்
  • தக்காளி
  • தயிர்
  • இனிப்புகள்
  • ஈஸ்ட் கலந்த உணவுகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் காலை, மதியம், இரவு என இதனை பின்பற்றுங்கள்

காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே

என சித்தர்கள் பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளை தந்துள்ளனர்.

  • 🌄 தினமும் காலையில் இஞ்சி சாறு 15 ml (3 டிஸ்பூன்) எடுத்து, சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும் இது பித்தத்தை சமன் செய்யும்
  • 🌞 மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் அரை டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும் இது வாயுவை சமன் செய்யும்
  • 🌜 இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும் இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்

Eat Healthy! Stay Healthy!!

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Draw with Dharsini | Navratri Utsav – 2019

VYSDOM.in, WAM – South India Mahila Vibagh and Kannikadhanam.com presents Vysya’s Navratri Utsav – 2019

#Day2 – Draw with Dharsini

வீணையை இசைக்கும் சரஸ்வதி தேவி, தாமரை மலரில் வீற்றிருக்கும் மஹா லக்ஷ்மி, சிங்கத்தை வாகனமாக கொண்டுள்ள துர்கை – இம்முப்பெரும் தேவிகளை போற்றும் நவராத்திரி வைபவத்தில்; இம்மூவரையும் ஓவியமாக வரைய கற்றுக்கொடுகிறார் சென்னையை சேர்ந்த வைஸ்ய குல Budding Artist ப்ரியதர்ஷினி.

Check-out the video below and practice to draw the 3 Goddess.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

2nd Tip for Healthy Living – Take Care of Your Teeth | Dr. Bala Naga Lakshmi

உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navaratri Utsav – 2019 இன் இரண்டாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக 2nd Tip for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 1st Tip Shared by the Doctor for Healthy Living

Day 2 – Take Care of Your Teeth

பல் துலக்குதல்

பல் துலக்குவதற்கு துவர்ப்பு, கைப்பு அல்லது கார்ப்பு சுவை உள்ள அசோகு, வேம்பு, அத்தி, ஆல், இத்தி, எருக்கு, கடம்பு, கருங்காலி, குருக்கத்தி, செண்பகம், நாவல், நாயுருவி, மகிழ், மருது, மா அல்லது வேல் என ஏதேனும் ஒரு குச்சியைக் கொண்டு பல்துலக்குவது சிறப்பு.

பல் துலக்கும்போது இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக துலக்க வேண்டும். துலக்கிய பின் 12 முறை வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பற்கள் உறுதியாக இருக்கும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

பல் வலியை போக்க – Home Remedies

  • கல் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்
  • பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும்
  • கொய்யா இலை கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளிக்கவும்

வாய்புண் தவிர்க்க, வராமல் தடுக்க

  • ஆரஞ்சு ஜூஸ் பருகுங்கள்
  • லெமன் ஜூஸ் பருகுங்கள்
  • இளநீர் பருகுங்கள்
  • மாசிக்காய் பவுடர், மணத்தக்காளி, நெல்லிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்

வாய் துர்நாற்றம் போக்கவும், வராமல் தடுக்கவும்

  • காலை இரவு என இரண்டு முறை பல் துலக்க வேண்டும்
  • நாக்கில் தங்கியுள்ள பாக்டீரியா, Fungi மற்றும் இறந்த செல்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும், எனவே பல் துலக்கியவுடன் நாக்கினை சுத்தம் செய்ய வேண்டும்
  • கிராம்பு, வெந்தயம், சோம்பு, இலவங்கப்பட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு மெல்லவும். அதிலுள்ள ஆன்டிசெப்டிக் ப்ராப்பர்ட்டி வாய் துர்நாற்றத்தை போக்கும்
  • ஒரு துண்டு எலுமிச்சை பழம் அல்லது ஆரஞ்சுப் பழத்தை வாயில் போட்டு மெல்லவும், அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் வாய் துர்நாற்றத்தை போக்கும்

Keep your Teeth Healthy! Keep your Smile Beautiful!!

எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம், எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்பதை பற்றிய பதிவுடன் விரைவில் சந்திப்போம்!

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Colourful Navaratri – Colourful Food – White | ஆஹா ஏமி ருச்சி – Day 2

நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day2 | Colour – WHITE | Recipe – Ven Pongal

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – 200gm
  • பாசிப்பருப்பு – 50gm
  • மிளகு – 1tsp
  • இஞ்சி – 1 tsp
  • நெய் – 50ml
  • உப்பு – தேவையான அளவு
  • முந்திரி – 20gms
  • சீரகம் – 1/2 tbs

செய்முறை:

  • அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், முந்திரி, நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை வதக்க சேர்க்கவேண்டும்.
  • தாளிப்பினை பொங்கலுடன் சேர்த்து தேவையான அளவு உப்பினை சேர்த்தால் சுவையான வெண் பொங்கல் தயார்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Colourful Navaratri – Colourful Food | ஆஹா ஏமி ருச்சி – Day 1

நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day1 | Colour – Orange 🍊 | Recipe – Orange Kesari

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • Rava – 250gm
  • Sugar – 400gm
  • Ghee – 50ml
  • Cardamom – 1 pinch
  • Cashew and Dry grapes – 50gm
  • Orange Essence or Orange crush
  • Fresh Orange – 1

செய்முறை:

  1. கடாயில் ரவை சேர்த்து, நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்
  2. மற்றொரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி காய்ச்ச வேண்டும்
  3. அதில் வறுத்த ரவையுடன் சேர்த்து ஆரஞ்சு எஸ்என்ஸ், உரித்த ஆரஞ்சு சுளை (பொடியாக நறுக்கியது) ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
  4. அவற்றுடன் கேசரி கலர் பவுடர் சேர்த்து ஏலக்காய் நெய் வறுத்த முந்திரி திராட்சை ஆகியவற்றையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்
  5. சுவையான ஆரஞ்சு கேசரி தயார்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

9 Tips for Healthy Living – Waking Up Early | Dr. Bala Naga Lakshmi

உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navaratri Utsav – 2019 இல் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக 9 Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக நவராத்திரியின் 9 நாட்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

நம் அனைவருக்குமே நலமான வாழ்வுதான் விருப்பம் அல்லவா?

நம் வைஸ்ய Doctor கூறும் அறிவுரைகளை பற்றி சிந்தனை செய்யுங்கள்! உடல் நலத்தை பேணுங்கள்!!

#Day 1 – Waking up Early

சக்தியை வழிபடத் தகுந்த முக்கியமான ஒரு பண்டிகை நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது, நம் உடலில் ஒன்பது வாசல்கள் உள்ளது அதனை நவ வாசல்கள் என சித்தர்கள் அழைப்பர் அவை கண், காது, மூக்கு, வாய், கருவாய், எருவாய் என்பனவாகும்.

இந்த ஒன்பது வாசல்களையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் இதன் வழியாகவும் நோய்க்கிருமிகள் சென்று பற்பல நோயை மனிதருள் உண்டாக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் அன்றாடம் குளிக்கும் போது இந்த நவ வாசல்களையும் சுத்தம் செய்ய வேண்டும் இதுவும் ஒரு வகை ஒழுக்கம் என கூறுவர்.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் – ஒழுக்கமே மேன்மையைத் தருவதாக இருப்பதால் அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார் திருவள்ளுவர்.

சித்த மருத்துவத்திலும் ஒழுக்கத்தை நித்திய ஒழுக்கம், கால ஒழுக்கம் என கூறியுள்ளனர். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளே நித்திய ஒழுக்கமாகும், நாம் உடல் நலமும் – மன நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ இந்த ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் சாலச்சிறந்தது.

உறக்கத்திலிருந்து எழுதல்!

நல்லுடலையுடையோன் நாள்தோறும் அதிகாலை நான்காவது சாமம் (4 முதல் 6 மணிக்குள்) அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளை வணங்க வேண்டும்.

அப்படி வைகறையில் துயிலெழுபவர்கட்கு அறிவில் தெளிவை உணர்த்துகின்ற சுத்த நரம்பு என்னும் ஓர் வித நரம்பு தெளிவாய் வேலை செய்யும். வாதம் பித்தம் கபம் தத்தம் நிலையில் நிற்கும்.

ஆனால் இது நடைமுறையில் சாத்தியம் ஆவதில்லை! காலை 9 மணிக்கு அலுவலகம் செல்ல 8 மணிக்கு எழுபவர்களே இங்கு அதிகம். குளிர்காலங்களில் காலையில் எழுவது கஷ்டமான விஷயம் தான். சரி அதிகாலையில் எழுந்து கொள்ள என்ன தான் செய்யலாம்? சின்ன சின்ன வழிமுறைகள் இங்கே கூறுகிறேன், முயற்சித்து பாருங்கள்!

  1. இரவு உறங்கப்போகும் போது உங்கள் ஆழ் மனதுக்குள்ளேயே இத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்று பல முறை சொல்லிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நமது பயாலஜிக்கல் கிளாக் என்னும் உடலியல் கடிகாரம் நம்மை ஆட்டோமேட்டிக்காக எழுப்பிவிடும்.
  2. குறிப்பிட்ட ஒரே நேரத்தில் எழும்புவதை வழக்கமாக கொள்ளுங்கள் விடுமுறை நாட்களில் 10 மணி வரை உறங்கினால் வேலை நாட்களிலும் அதே நிலைமை தான் உண்டாகும்.
  3. சூரிய வெளிச்சம் படும் இடத்தில் உறங்குங்கள் சூரிய ஒளியே உங்களை எழுப்பிவிடும்.

#BeAnEarlyRiser

எழுந்தபின் செய்யும் கடமைகளை பற்றிய #2nd டிப்புடன் நாளை சந்திப்போம்! ஜெய் வாசவி!!