ஆரிய வைசியர்களின் தீபாவளி கொண்டாடும் முறை

ஆரிய வைசிய சொந்தங்களே!

ஆரிய வைசியர்கள் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என பார்ப்போம். நம் கொண்டாட்ட முறையை அறிய நம் வம்சத்தை பற்றிய அறிய வேண்டும்.

வம்சம்

வம்சம் ஒன்றிற்கு மேற்பட்ட பிரவரான்களை கொண்டது.

ஆரிய வைசியர்கள் மூன்று வம்சத்தை சேர்ந்தவர்கள், அவை:

1) சூரிய வம்சம்,
2) சந்திர வம்சம்,
3) அக்னி வம்சம்,

சூரிய வம்சம்

சூரிய வம்சத்தவர்கள் சூரியனிலிருந்து பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். அவர்கள் வணங்கும் சிவ வடிவம் சந்திரசேகரன் வடிவம்.

காசியபஸ, ஆங்கிரஸ, பார்க்கல பிரவான்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சூரியவம்சத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். இவர்களின் குரு பிரகஸ்பதி.

குறிப்பாக பரத்வாஜஸ, புலத்தியஸ, காசியபஸ, புண்டரீகஸ, கௌதமஸ, பார்க்கல கோத்திரங்களை சேர்ந்தவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள்.

சந்திர வம்சம்

இவர்கள் சந்திரனிலிருந்து தோன்றியவர்கள். மகாவிஷ்ணு சந்திரனின் வடிவமாக கருதப்படுவதால் சந்திர வம்சத்தவர் மகாவிஷ்ணுவை தங்கள் வழிபாட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவர்களின் குரு சுக்ரச்சாரியார்.

பெரும்பாலும் அத்ரி, பார்க்கவ பிரவரான்களை கொண்ட கோத்திரத்தாரும், பராசரஸ, ஜதுகர்னஸ, துர்வாஸச கோத்திரத்தாரும் சந்திரவம்சத்தை சேர்ந்தவர்கள்.

அக்னி வம்சம்

இவர்கள் அக்னியின் இருந்து தோன்றியவர்கள், சிவபெருமான் மற்றும் சுப்ரமணியரை ஆத்ம தெய்வமாக வழிபடுபவர்கள். இவர்கள் கொற்றவை தெய்வங்களையும் வணங்கி வருகின்றனர்.
இவர்களின் குரு வசிஸ்டர்.

வசிஸ்டச ப்ரவரான்களை சேர்ந்த அனைத்து கோத்திரத்தார் அனைவரும் அக்னி வம்சத்தை சேர்ந்தவர்கள்.

ஆக நம் கோத்திரத்தை வைத்து பிரவரானை கண்டுபிடிக்கலாம், நம் கோத்திர ஸ்லோகத்தில் முதலாவதாக வரும் முனிவரின் பெயரே நம் மூல பிரவரான்..

உதாரணமாக..

பலிசெட்ல எனும் குலத்தை கொண்ட பரத்வாஜஸ கோத்திரத்தின் பிரவரான் பற்றி அறிய கீழ் உள்ள ஸ்லோகத்தில் காண்போம்.

ஆங்கிரஸ ப்ருஹத்பாஸ்ய பரத்வாஜேதி த்வையார் ஷேய ப்ரவரான் விதா பரத்வாஜஸ‌ கோத்ரஹ.

இந்த ஸ்லோகத்தில் முதலாவதாக வருவது ஆங்கிரஸர் எனும் முனிவரின் பெயர், இதுவே பரத்வாஜஸ கோத்திரத்தின் ப்ரவரான்.

இப்போது ப்ரவரானை வைத்து உங்கள் வம்சத்தை அறியலாம். உங்கள் வம்சத்தை வைத்து நீங்கள் செய்ய வேண்டிய தீபாவளி கொண்டாடும் முறைகள் அறியலாம்..

அக்னி வம்சத்தார் எமதீபமும், கேதார கெளரி விரதமும்.

சூரிய வம்சத்தார் தீபவரிசையையும், நீலு நிஞ்சே பண்டக எனும் முறையையும்.

சந்திர வம்சத்தார் நல்ல எண்ணெய் தைத்து, கங்கா ஸ்நானம் செய்வது அவசியம்..

தந்தை மற்றும் தாய் வழி என அனைத்து வம்சமும் நம் உடலில் இருக்கலாம். எனவே ஆரிய வைசியர்கள் பொதுவாக செய்ய வேண்டிய முறைகள் காணலாம்.

தீபாவளி முதல் நாள்

தீபாவளி முதல்நாள் யமதீபம் ஏற்ற வேண்டும், இது பித்ருக்களுக்கு நாம் செய்யும் கடமை. வீட்டில் உயரமான இடத்தில் தெற்கு நோக்கி புதுவிளக்கில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்ற அது அன்று இரவு வரை அணையாமல் பார்த்து கொள்ளவும், வீட்டில் ஏற்ற முடியாதவர்கள் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது மாடியிலோ எற்றலாம். தீபம் அணையாமல் பார்த்து கொள்ளவும்..

நீலு நிஞ்சே பண்டக

கங்கை நீர் நிரப்பும் பண்டிகை என்றும் சொல்வர். தீபாவளி முதல் நாள் இரவு, வீட்டின் வெளியே ஓரிடத்தில் வெட்டவெளியில் சுத்தம் செய்து நீரிட்டு மெழுகி, கோலமிட்டு அதன் மீது மூன்று செங்கல் வைத்து அடுப்பு அமைப்பில் வைத்து, அதன் மீது புதியதோர் பாத்திரத்தில் மஞ்சள் கங்கணம் கட்டி. அதை அப்படியே திறந்து வைக்க வேண்டும். ஏனெனில் தீபாவளி முதல்நாள் இரவு, தீபாவளி விடிய விடிய எப்போது வேண்டுமானாலும் கங்கை அன்று மட்டும் ஆகாய கங்கையாக மாறி வானமுழுவது பரவி நீர் நிலைகளில் சென்று நிரம்புகிறது.

மறுநாள் காலை அந்த நீருடன் சுடுநீரோ அல்லது அதை அடுப்பு மூட்டி வெந்நீராக மாற்றி அந்நீரால் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்..

எண்ணெய் குளியல்

முதல் நாள் இரவே, ஒரு தட்டில் எண்ணெய், சந்தனம், குங்குமம், பழம், வெற்றிலை என அனைத்தையும் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

கோத்திர தீர்த்தம்

காலை எழுந்தவுடன் ஒரு மனை போட்டு அதன் மீது அமர்ந்து பெரியவர் ஒருவர் ஒரு பூவால் தொட்டு எண்ணெய் தேய்த்து பின் அவரவர் கோத்திர தீர்த்தத்தை மனதில் நீரை கையில் எடுத்து கோத்திர தீர்த்த பெயரை சொல்லி ஆவாஹயாமி, ஆவாகனம் என சொல்லி, மீண்டும் அதே பாத்திரத்தில் விடவும். இதே போல் மூன்று முறை செய்ய வேண்டும். பின் கோத்திர தீர்த்தத்தில் குளிப்பதாய் எண்ணி ஸ்நானம் செய்ய வேண்டும்.

தான தருமம்

ஸ்நானம் செய்த பின் அவரவர் கோத்திர குருவை எண்ணி அவரை வணங்க வேண்டும்.

பின் அவரவர் கோத்திர இறைவனை வணங்கி பின், அவரவர் கோத்திர முறைப்படி தான தருமங்கள் செய்ய வேண்டும்..

ஒவ்வொரு கோத்திர மக்களின் தீர்த்தம், தெய்வம், தானம் செய்ய வேண்டிய பொருள், கோத்திர ஸ்லோகம் ஆகியன அறிய..

அடியேன் உருவாக்கிய, கீழே உள்ள PDF-ஐ பார்க்கவும், சர்ச் பாக்ஸில் உங்கள் கோத்திர பெயரை போட்டால் உங்கள் கோத்திர விளக்கத்தை அறியலாம்.

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

‘ஆயில் பாத்’ தும் தீபாவளியும் மருத்துவமும் | Dr. Bala Naga Lakshmi

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நம்மூரில் பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. உடல் சூடு, உடல் வலி, தசை வலி, சோர்வு போன்ற பல விஷயங்களுக்கு உடனடி நிவாரணி தான் இந்த எண்ணெய் குளியல். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் எண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்று வெந்நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மையானது.

எண்ணெய் குளியலின் Dos and Don’ts பற்றி வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi கூறுவதை கேட்போம்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நல்லெண்ணையை பயன்படுத்த வேண்டும், எண்ணெய் தேய்க்கும் பொழுது எண்ணெய்யை ஒவ்வொரு காதிலும் மூன்று துளிகளும் ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகளும் விட்டு பின் தலை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மெதுவாக தேய்க்கவும்.

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையில் 6.30 மணிக்குள் குளித்து முடித்து விடவேண்டும்.

எண்ணெய் குளியல் செய்த நாளில் செய்ய கூடாதவை

  • பகல் தூக்கம் கூடாது
  • வெயிலில் அலைய கூடாது
  • உடலுறவு கூடாது
  • அதிக உழைப்பு கூடாது
  • மாமிச உணவுகளை தவிர்க்கவும்

Happy Diwali! Healthy Diwali!!

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

தித்திப்பான தீபாவளி – Sweets and Savouries | திருமதி. சுஜாதா மனோகரன்

பட்டாசும், பலகாரமும் தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள்.

இந்நாட்களில் விதவிதமான பலகாரங்கள் கடைகளில் கிடைத்தாலும், நம் வீட்டின் அடுப்பில் செய்யும் பலகாரங்களுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு.

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட சேலம் திருமதி. சுஜாதா மனோகரன் அவர்கள் (அரி செட்ல கோத்திரம்), நம் VYSDOM குடும்பத்தினருக்கு பல இனிப்பு, கார வெரைட்டிகளை கற்று தர இருக்கிறார்.

தித்திப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Crispy நெய் முறுக்கு

Awesome தட்டு வடை @ நிப்பட்

Healthy பாதாம் அல்வா

Tasty கப் கேக்

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

6 Powerful Mantras | VYSDOM and WAM’s Navratri Utsav – 2019

வெற்றியைக் கொண்டாடும் திருவிழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தியின் வெற்றியை தேவர்கள் கூடி பத்தாவது நாளான தசமியன்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் வெற்றிகரமாகவே அமையும் என்பது நம்பிக்கை. நம் VYSDOM.in, Kannikadhanam மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இன் நிறைவு நாளான இன்று மந்திரங்களை ஜெபிப்பதால் கிடைக்கும் பலன்களையும், வாழ்க்கையை மேம்படுத்தும் 6 Powerful மந்திரங்களை கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

Day 10 | #6 Powerful Mantras | Mrs. B.S. Lakshmi Prabanjani – Founder, VYSDOM.in & Kannikadhanam.com

Benefits of Chanting Mantras

  1. Chanting mantras stimulates the endocrine system (நாளமில்லா சுரப்பி)
  2. Chanting mantras help focus your attention
  3. Mantras align your vibration to create awareness
  4. Chanting mantras is an effective way to release emotion
  5. Mantras adjust your vibration and increases your awareness with aspects of the self and the infinite
  6. Mantra cleanses your karma

#1 சகல காரிய சித்தி தரும் ஸ்ரீ சுதர்சன மந்திரம்:

ஓம் சுதர்சன சக்ராய |
மம சர்வ கார்ய |
விஜயம் தேஹி தேஹி |
ஓம் பட் ||
Click below & Hear the Powerful Mantra:

பயன்: எடுத்து வைக்கும் சர்வ காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும் என்ற எண்ணத்துடன், சர்வ கார்ய விஜய சுதர்சன மந்திரத்தை ஜெபியுங்கள்.

#2 காலை எழுந்தவுடன் பூமாதேவியை போற்றுங்கள்

ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே |
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே ||
Click below & Hear the Powerful Mantra:

பொருள்: பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்.

#3 மன அமைதிக்கான மந்திரம்

ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது|
சர்வேஷாம் ஷாந்திர் பவது|
சர்வேஷாம் பூர்ணம் பவது|
சர்வேஷாம் மங்களம் பவது||
Click below & Hear the Powerful Mantra:

பொருள்: எங்கும் எல்லாவற்றிலும் நன்மை, அமைதி, முழுமை, வளம் உண்டாக வழிபடுவோம்.

#4 நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய|
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய|
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய|
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹே||
Click below & Hear the Powerful Mantra:

பலன்: தெய்வீக மருத்துவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் உடலில் உள்ள வியாதிகள் மறையும், ஆரோக்கியம் நிலைக்கும்.

#5 பாண்டவ கீதா மந்திரம் (காந்தாரி கிருஷ்ணருக்காக கூறிய ஸ்லோகம்):

த்வமேவ மாதா சபித்தா த்வமேவ|
த்வமேவ பந்துஷ் சகா த்வமேவ|
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ|
த்வமேவ சர்வாம் மம தேவ தேவ||
Click below & Hear the Powerful Mantra:

பொருள்: நீரே என் தாய், நீரே என் தந்தை, நீரே என் தமையன், நீரே எனது நண்பன் !
இறைவா! நீரே எனது அறிவு, நீரே எனது செல்வம்
எமக்கு அனைத்தும் நீரே!!

#6 ஞானத்தை அருளும் சரஸ்வதி மந்திரம்

சரஸ்வதி மஹாபாகே வித்யே கமலலோசனி|
வித்யாரூபே விசாலாக்ஷி வித்யாம் தேஹி நமோஸ்துதே||
Click below & Hear the Powerful Mantra:

பொருள்: கலைகளின் வடிவானவளே! தாமரை போன்ற கண்களை கொண்ட சரஸ்வதி தேவியே! உன்னை வணங்குகிறேன்! கல்விச் செல்வத்தை எனக்கு அருள்வாயாக!!

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

அத்திவரதர் மகாத்மியம், நவராத்ரி கொலுவில் | திருமதி. சுமதி சதிஷ்

VYSDOM.in, WAM – South India Mahila Vibagh and Kannikadhanam.com presents Vysya’s Navratri Utsav – 2019

தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி.

சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை அடுக்கி வைக்கும் வைபவம் கொண்டாடப்படுகிறது. அனைத்து உயிர்களிலும், சக்தியைக் காண வேண்டும் என்பதை சொல்லவே படிகளில் தெய்வங்களின் பொம்மைகள் மட்டுமின்றி எல்லாவித பொம்மைகளும் வைக்கப்படுகின்றன.

இத்தகைய வைபவத்தை நாம் திண்டிவனத்தில் உள்ள திருமதி. சுமதி சதிஷ் இல்லத்திற்கு சென்று அவர்களது இல்லத்தின் கொலுவினை கண்டு ரசிப்போம்.

கொலு வைத்தது: திருமதி. சுமதி சதீஷ் | கதை சொன்னது: திருமதி.ஹஷ்மிதா

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

9th Tip for Healthy Living – Seasonal Foods | Dr. Bala Naga Lakshmi

உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஒன்பதாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 8th Tip Shared by the Doctor for Healthy Living

பருவ கால உணவு

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் உண்ணும் உணவுகளை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்றாற் போல் உட்கொள்வது சிறப்பு.

ஏனெனில் பருவ கால மாற்றங்கள் நம்முடைய உடலின் வெப்பநிலையையும் மற்ற செயல்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்கு ஈடுசெய்யும் வகையில் நாம் உணவுகளை எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்!

What to have? When to have??

சித்திரை மற்றும் வைகாசி
கசப்பு, காரம், துவர்ப்பு சற்று கூடியதாக உள்ள உணவு ஏற்றது. நெய், கொழுப்புச்சத்து உள்ள உணவை குறைக்கவும்.

ஆனி மற்றும் ஆடி
நெய் முதலிய கொழுப்புச்சத்துக்கள் கூடிய உணவுகளையும். குளிர்ச்சி, இனிப்பு சேர்த்ததுமான உணவு வகைகளையும் சாப்பிடுவது நல்லது.

ஆவணி மற்றும் புரட்டாசி
புளிப்பு, உப்புச்சுவை கூடிய உணவுகளையும், கொழுப்புச்சத்துகள் மிதமான உணவு வகைகளும் சாப்பிடுவது நல்லது. இக்காலத்தில் ஜீரணம் ஓரளவு மிதமாகவே இருக்கும்.

ஐப்பசி மற்றும் கார்த்திகை
கொழுப்புச்சத்து, இனிப்பு, புளிப்பு கூடிய உணவு வகைகளே ஏற்றவை, வெந்நீரை குடிப்பது நல்லது.

மார்கழி மற்றும் தை
கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத, குளிர்ச்சியடைய உணவு வகைகளை சாப்பிடலாம். துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகள் உள்ள உணவுகள் இக்காலத்தில் உட்கொள்வது நல்லது.

மாசி மற்றும் பங்குனி
குளிரும் வெயிலும் இதமாக இருக்கும் இக்காலத்தில் ஜீரணம் விரைவில் ஆகும். கொழுப்புச்சத்தும், நெய்பசையுமுள்ள உணவை ஏற்கலாம். இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை கொண்டவற்றை உண்ணலாம்.

Take care of your Health 😇

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Colourful Navratri – Colourful Food – Light Green|ஆஹா ஏமி ருச்சி – Day 9

நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day 9 | Colour – LIGHT GREEN | Recipe – பச்சை பயிறு சுண்டல்

  • பச்சை பயிறு – 200 gms.
  • துருவிய மாங்காய் – 50 gms.
  • துருவிய தேங்காய் – 5 tsp
  • சிவப்பு மிளகாய் – 2 or 3
  • எண்ணெய்- 2 tsp
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • கடுக – 1tsp
  • கறிவேப்பில்லை – 10
  • கொத்தமல்லி – 1 spring
  • முந்திரி – 20 gms.

செய்முறை:

  • முளைகட்டிய பச்சை பயிறை வேக வைக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், முந்திரி, நறுக்கிய இஞ்சி, சிவப்பு மிளகாய், கருவேப்பிலை, தேங்காய், மாங்காய், பச்சை பயிறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
  • சுவையான பச்சை பயிறு சுண்டல் தயார்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

திருவண்ணாமலையில் வைஸ்யர்களுக்கான நம்ம வீட்டு கல்யாணம்!

நம் வைஸ்ய குல மக்களுக்காக திருவண்ணாமலை வாசவி ஷேம நலநிதி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும் நம்ம வீட்டு கல்யாணம் (கூட்டு திருமணம்) வரும் ஆண்டில் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள வாசவி மஹாலில் நடைபெற உள்ளது.

மேலும் விபரங்களுக்கு:

நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி இலவச திருமணத்தை செய்து​கொள்ள விரும்பும் வைஸ்ய மணமக்கள் விரைவாக முன்பதிவு செய்யுங்கள்.

மேலும், இப்புனித பணியில் வைஸ்யர்களாகிய நாம் நம்மால் இயன்ற பொருளுதவி அல்லது பணவுதவி அளிக்கலாம், விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள:

  • A. சந்திரசேகரன் – தலைவர்: 9486962644
  • R. விஜயகுமார்- செயலாளர்: 9443375573
  • N. சாயிகுமார் – பொருளாளர்: 9994217533

தகவலுக்கு நன்றி: திரு. ஜெகதீஷ், கள்ளக்குறிச்சி

ஸ்ரீ வாசவி வரன்கள் Telegram லிங்க்: https://t.me/joinchat/GZbwtEvN8ZlA9UzXfSN7Fg

VYSDOM இன் ஆர்ய வைஸ்யர்களுக்கான WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Colourful Navratri – Colourful Food – Purple| ஆஹா ஏமி ருச்சி – Day 8

நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day 8 | Colour – PURPLE| Recipe – Grape Halwa

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • கருப்பு திராட்சை (seedless) – 200 gms.
  • Corn Flour – 100 gms.
  • நெய் – 25 ml
  • சர்க்கரை – 200 gms.
  • முந்திரி – 20 gms
  • குங்குமப்பூ – 1 pinch
  • தண்ணீர்

செய்முறை:

  • கருப்பு திராட்சையை தண்ணீருடன் வேகவைத்து பின் வடிகட்டி சாற்றை தனியாக எடுக்க  வேண்டும்.
  • ஒரு கடாயில் வடிகட்டிய திராட்சை சாறுடன்,  சர்க்கரை, Corn Flour ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவேண்டும்.          
  • பின், கடாயை அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கிளற        வேண்டும்
  • அல்வா பதத்திற்கு வந்தவுடன் நெய், முந்திரி, குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
  • சுவையான ரவை சக்கரை பொங்கல் தயார்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

8th Tip for Healthy Living – பிணியணுகா விதி | Dr. Bala Naga Lakshmi

உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் எட்டாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 7th Tip Shared by the Doctor for Healthy Living

Day 8 – பிணியணுகா விதி

பிணியணுகா விதி என்பது நோய் நம்மை நெருங்காமல் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை சித்தர்கள் கூறியுள்ளனர், அவை என்னவென்றால்:

  • 6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்தையும், 4 மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்தையும் உட்கொள்வோம்.
  • ஒன்றரை மாதத்திற்கு ஒரு தரம் நசியம் செய்து கொள்வோம் (நசியம் எனும் பாரம்பரிய ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை மூலம், நாசிகப்பாதை, சைனஸ்கள் சுத்தம் செய்யப்படும்).
  • வாரத்திற்கு ஒரு முறை சவரம் (Shaving) செய்து கொள்வோம்.
  • நான்கு நாட்களுக்கு ஒரு முறை என்னை விட்டு தலை முழுகுவோம்.
  • மூன்று நாட்களுக்கு ஒரு தரம் கண்களுக்கு மை இட்டு கொள்வோம்.
  • வாசனைப் பொருட்களையும், பூக்களையும் நடு இரவில் முகர மாட்டோம்.
  • தினமும் இரண்டு முறை மலம், ஆறு தடவை சிறுநீர் கழிக்க வேண்டும்.
  • இரவில் பசுவின் பாலையே பருகுவோம்.
  • எண்ணெயிட்டு தலை முழுகும் போதெல்லாம் வெந்நீரிலேயே குளிப்போம்.
  • இடது கையை கீழே வைத்து உறங்குவோம்.
  • முன்னால் சமைத்த உணவு, அமுதெனினும் உண்ணமாட்டோம்.
  • பெருந்தாகம் கொண்டாலும் உணவின் கடைசி அன்றி மற்ற காலங்களில் நீரை அருந்தமாட்டோம்.
  • உண்டபின் சிறிது தூரம் குறுநடை கொள்வோம்.
  • இரவில் விளக்கு, மனிதர், மரம் இவைகளின் நிழலில் தங்க மாட்டோம்.

இத்தகைய நியதிகளை கை கொண்ட இடத்தில் எமனுக்கு என்ன வேலை? என சித்தர் கூறுவர்

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group