Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: புல்லணி மஜிக கோடி பேடலு ( Buttermilk rings )
Recipe by: Sravani Kiran
Ingredients:
தேவையானவை : அரிசிமாவு - 1 கப், புளித்த சிலுப்பிய திக்கான மோர் - 1 1/2 கப், பாசிப்பருப்பு - 1 tablespoon, தேங்காய்ப்பூ - 1 tablespoon, பச்சைமிளகாய் விழுது - அவரவர் காரத்திற்கு ஏற்ப உப்பு, பொரிக்க எண்ணெய் , கருவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியது - 1 (or) 2 tablespoon
Procedure:
வாணலியில் 1 spoon எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பில்லை தாளித்து பச்சை மிளகாய் அரைத்து போட்டு கிளறவும். நன்கு புளித்த சிலுப்பிய மோர் (திக்கானது) ஊற்றி, நன்கு கழுவிய பாசிப்பருப்பு, தேங்காய்ப்பூ, தேவையான உப்பு போட்டு கொதி வந்ததும் அளந்து வைத்த அரிசிமாவை நடுவில் கொட்டி தோசை திருப்பியை குத்தி வைத்து, அடுப்பு தீயை குறைக்கவும். 15 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைத்து, மாவை பதமாக கிளறி, கொத்தமல்லி தழை தூவி கிளறி 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு கையில் எண்ணெய் தொட்டு நன்கு பிசைந்து (oil வரும் cover ல் மாவை போட்டு வாயை மூடி கையால் பிசைந்தால் சூடு தெரியாது), பிசைந்த மாவை hotbox ல் வைத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து (நெல்லிக்காய் அளவு) அதை pencil வடிவத்தில் நீளமாக செய்து, முனைகளை ஒட்டி, ring போல் செய்து தட்டில் வைக்கவும். மற்றொரு வாணலியில், எண்ணெய் வைத்து, நன்கு சூடானவுடன் 5 , 6 rings போட்டு சிவந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும். இதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மொறுமொறுப்பாக அல்லது மெத்தென்றும் எடுக்கலாம். நீளமாக பென்சில் போலும் செய்யலாம். ருசியில், புளிப்பு காரம் வாசனை என்று yummy ஆக அட்டகாசமாக இருக்கும். சுமார் 60 வருட பாரம்பரிய பலகாரம் இது. side dish : புதினா சட்னி, தேங்காய் சட்னி அல்லது ketchup வைத்து சாப்பிடலாம்.
Total Votes: 3

Total Views: 1322