Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Godu guddullu(kozhi muttai)3 in 1
Recipe by: R.J.Praveena
Ingredients:
பச்சரிசி மாவு-2 டம்ப்ளர், பயித்தம் பருப்பு -1 டம்ளர், கடலைப் பருப்பு-1 டம்ளர், பச்சை மிளகாய்-4, இஞ்சி- 1 துண்டு, எலுமிச்சம் பழம் - 1. உப்பு நெய்-2tsp, உளுத்தம் பருப்பு-1/2tsp, முந்திரி -10, காய்ந்த மிளகாய்-1 ஏலக்காய்-2 சர்க்கரை-10tsp தேங்காய் துருவல்-10tsp
Procedure:
வெள்ளை கரு செய்முறை: 1.வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, 3/4tsp உப்பு சேர்க்கவும். 2.தண்ணீர் கொதித்ததும் 2 டம்ளர் பச்சரிசி மாவு சேர்த்து கிளறவும் 5 நிமிடங்கள் குறைந்த தணலில் மூடிபோட்டு வேக வைக்கவும். 3.ஆறியபின் நன்கு பிசைந்து சிறிய உருண்டை செய்யவும். மஞ்சள் கரு செய்முறை:1. பயித்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைக்கவும். 2. அரைத்த மாவை இரண்டாக பிரித்து தனித்தனிப் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும், ஒரு பாத்திரத்தில் மட்டும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். 3. இரண்டு மாவிலும் தனித்தனியாக இட்லி வைத்து உதிர்த்துக் கொள்ளவும். 4. வாணலியில் 4 tsp எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உப்பு போட்டு வேக வைத்து உதிர்த்த இட்லியை சேர்க்கவும்5. பச்சை மிளகாய் இஞ்சி இரண்டையும் விழுதாக்கி தேங்காய் உடன் சேர்த்து நன்கு கிளறவும், கடைசியாக எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும். கார புட்டு தயார். இதுவே உள் பூரணம் (மஞ்சள் கரு). வெள்ளை கருவிற்கு பிசைந்து வைத்துள்ள மாவை தொன்னையாக செய்து, மஞ்சள் கருவிற்கு செய்து வைத்துள்ள பூரணத்தை உள்ளே வைத்து மூடி, முட்டை வடிவில் செய்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்தபின் வாணலியில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, மிரியம், வேகவைத்த முட்டை எல்லாம் சேர்த்து மெதுவாக பிரட்டி எடுக்கவும். கோழி முட்டை தயார். இனிப்பு புட்டு செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, முந்திரி, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் உப்பு சேர்க்காமல் உதிர்த்து வைத்துள்ள புட்டு சேர்க்கவும் பின் பொடித்த ஏலக்காய் சர்க்கரை அதனுடன் தேங்காய் துருவல், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். இனிப்பு புட்டு தயார்
Total Votes: 34

Total Views: 1120