Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: ராகி முருங்கைக்கீரை அடை
Recipe by: Vijayalakshmi Ayyappan
Ingredients:
ராகி மாவு - 500 கிராம், முருங்கைக்கீரை - கைப்பிடி அளவு, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு, தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை. நல்லெண்ணெய் - தேவையான அளவு.
Procedure:
ஒரு பேஷனில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், முருங்கைக்கீரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மாவில் கொட்டவும். இதனுடன் உப்பு போட்டு வெந்நீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசையவும். ராகி மாவை சிறிய உருண்டைகளாக்கி கொள்ளவும்.ஒரு வாழை இலையில் ராகி மாவு உருண்டையை போலி போல் தட்டவும்.ஒரு இரும்பு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி ராகி மாவு அடையை போட்டு மூடி போட்டு மூடவும். இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும். முறுகலான ராகி அடை ரெடி. இதற்கு வெங்காய சட்னி சரியான சைட் டிஷ். (குறிப்பு நன்றாக எண்ணெய் ஊற்றி வார்த்து எடுத்தால் முறுகலாக கிடைக்கும். )
Total Votes: 56

Total Views: 934