வருமான வரியை மிச்சப்படுத்துங்கள் – ஆடிட்டர் அருண் | Finance Club for Aryavysyas

884

2023-24 நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி திட்டமிடலை (Tax Planning) ஏற்கனவே நீங்கள் செய்திருந்தால் தங்களுக்கு பாராட்டுக்கள். ஏனெனில், வருமான வரித் திட்டமிடலை நம்மில் பலரும் செய்வதே இல்லை. மார்ச் மாதம் தானே நிதி ஆண்டு முடிகிறது இப்போதே அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்றே நினைக்கிறார்கள். இது பெரிய தவறு. இதனால் பல ஆயிரங்களை நாம் இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். எனவே வருமான வரி திட்டமிடுதல் (Tax Planning) மிகவும் முக்கியம்.

நம் வைஸ்ய சமூக மக்கள் சரியான வழியில் வருமான வரி திட்டமிடவும், சரியான வழியில் வருமான வரியினை மிச்சப்படுத்திடவும் நம் VYSDOM – Finance Club for Aryavysyas வாயிலாக ஆலோசனை வழங்க உள்ளார் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த முன்னணி ஆடிட்டர் திரு. அருண் அவர்கள்.

Topic 1 – Old Tax Regime vs New Tax Regime:

பழைய வரிமுறை (Old Regime) vs புதிய வரிமுறை (New Regime)? உங்களுக்கு ஏற்றது எது? என்கிற கேள்விக்கு விடையினை இப்பதிவில் காண்போம்.

2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி மற்றும் வரி வரம்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு, புதிய வரிமுறையில் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் நாம் பழைய வரிமுறையைப் பின்பற்ற வேண்டுமா? இல்லை புதிய வரிமுறையைப் பின்பற்ற வேண்டுமா? எது நமக்குச் சரியானது? எது லாபகரமானது? என்ற கேள்வி இன்னும் பலருக்கும் உள்ளது.

இந்த சந்தேகங்களிற்கு விடை அளிக்கும் நோக்கிலும், தங்களின் வருமானத்தை ஆராய்ந்து (Tax Planning and Optimization) தங்களின் வருமான வரியினை மிச்சப்படுத்தும் நோக்கிலும் ஒரு எக்செல் கால்குலேட்டரை பகிர்ந்துள்ளோம்.

இந்த கால்குலேட்டரில் தங்களின் மொத்த வருமானம், வரிச் சலுகைக்காக செய்திருக்கும் முதலீடுகள், வரிச் சலுகை அளிக்கும் செலவுகள் போன்ற விவரங்களை அளித்தால், பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறையில் கட்ட வேண்டிய வரி எவ்வளவு என்கிற விவரம் வரும். இதன் அடிப்படையில், வரிதாரர் எந்த முறையைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும் என்கிற முடிவுக்கு வர முடியும். எளிமையான இந்த கால்குலேட்டர் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

Hello VYSDOM Members! Auditor Arun is here to help with tax planning and optimization for our community members at a nominal cost. Book your personalized session now and start saving on taxes!