ப்ரவரான்கள் தொடர்ச்சி
சாஸ்திர விதி ஒரே ப்ரவரான்களில் வரும் கோத்திரங்களுக்குள் பெண் கொடுக்கவோ! எடுக்கவோ! கூடாது என்கிறது. இவையாவும் மரபு வழி நோய்களை தடுக்க நம் முன்னோர்கள் கையாண்ட வழிமுறை. இதனை தான் சுருக்கமாக நம் முன்னோர்கள்
ஜண்ட கோத்திரமுலு என்றனர்.
Click here to read the Previous Part of Know Your Roots series : https://www.vysdom.in/2019/05/18/கோத்திரம்-குலம்-சிறுக/
பிரவரான்களை 8 ரிஷிகள் நிர்ணயிக்கிறார்கள், அந்த எட்டு ரிஷிகள்:
- அகத்தியர்
- அத்ரி
- அங்கிரஸ
- பார்கவ
- பார்க்கலர்
- காசியபர்
- வசிஷ்டர்
- விஷ்வாமித்ரர்
என நம் ஆரிய வைசியர் பெரும் குலத்திற்கு எட்டு ப்ரவரான்கள்.
நம் முன்னோர்கள் சூட்சுமமாக கோத்திர ஸ்லோகத்தில் வைத்துள்ள ப்ரவரான்களை கொண்டு, எந்தெந்த கோத்திரம் எந்தெந்த ப்ரவரானில் வருகிறது என்பதை எளிதாய் கண்டுபிடிக்கலாம்.
இன்னும் எளிமையாக பாலா உருவாக்கிய பிரவரான்களின் அட்டவணையை இனி காணலாம்.
அகத்திய ப்ரவரான்:
இந்த ப்ரவரான் ஒரே கோத்திரத்தை கொண்டுள்ளது. அது அகஸ்த்யச கோத்திரம்.
இந்த கோத்திரத்தில் உள்ள ரிஷி குலங்கள்-
அனப்பகுல, அனபால, அனுப்பகுல, அனுபால, அனப்பாலகுல, அப்பப்பாலகுல.
மேற்கண்ட உட்பிரிவு குலங்கள் அனைத்தும் அகஸ்த்யச கோத்திரத்தையே குறிக்கும்.
அத்ரியச ப்ரவரான்:
அத்ரி பிரவரானிலும் ஒரே ஒரு கோத்திரம் மட்டும் இருப்பதால், இவர்கள் தன் கோத்திரத்தை தவிர வேறு எந்த கோத்திரத்திலும் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ செய்யலாம். அத்ரி மகரிஷியை மூலமாக கொண்ட கோத்திரங்கள்.
அத்ரேயச கோத்திரம்
ரிஷி குலங்கள்-
அரஸ்தகுல, அரிசிஷ்தகுல, அரிசெட்ல, அரிசெட்லகுல, யரிசிஷ்தகுல, எலிசெட்ல, எலிசெட்லகுல, அரசகுல, ஹரிசிஷ்தகுல, ஹரசிஷ்தகுல, யரசிஷ்தகுல.
மிக அதிக எண்ணிக்கையிலான கோத்திரங்களை கொண்டுள்ள பிரவரான்கள் என்றால் அது ஆங்கிரஸ மற்றும் பார்க்கவ பிரவரான்கள் மட்டுமே. மீதமுள்ள பிரவரான்கள் ஒன்று அல்லது இரண்டு கோத்திரங்களை மட்டுமே கொண்டுள்ளன.
ப்ரவரான்கள் பற்றிய விளக்கம் முற்றும்!
Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp