யுகாதி தின மகத்துவமும், பஞ்சாங்கம் படிக்கும் அவசியமும்

புராணங்களின் படி, பிரம்மதேவன் யுகாதி நாளில் தான் உலகத்தை படைத்தார். எனவே, இந்த நாள் புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது.

நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் யுகாதி திருநாளின் சிறப்புகளையும், மகத்துவத்தையும் கூறும் எளிய விளக்கத்தை கேளுங்கள்:

மேலும், யுகாதியன்று பஞ்சாங்கத்தை எதற்காக படிக்க வேண்டும் என திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக கூறுவதை கேளுங்கள்:

அனைவருக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்! இந்த யுகாதி திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

மிளிரும் வைஸ்ய மாணவர்கள் | Arya Vysya Charitable and Education Foundation Scholarship for FY 2025 – 26

ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. இன்றைய காலத்தில் கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் சரிசமமாக இல்லாததன் பிரதானமான காரணம் பணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு, காலச் சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கை கொடுத்து வருகிறது ‘Arya Vysya Charitable and Education Foundation’.

சேவை மனப்பான்மை கொண்ட பல வைஸ்ய குல தலைவர்கள் இணைந்து நடத்தும் இந்த உன்னத அமைப்பு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 10000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மேற்ப்படிப்பிற்காக உதவி செய்து வைஸ்ய மாணவர்களின் கனவினை நனவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-26 கல்வியாண்டிற்கான Scholarship பதிவினை Arya Vysya Charitable and Education Foundation தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளநிலை (UG), முதுநிலை (PG) மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு உதவித்தொகை தேவைப்படும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என Arya Vysya Charitable and Education Foundation தலைவர் திரு. ரவிக்குமார் அவர்கள் கூறினார்.

+2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரி விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும். உங்கள் கல்விக்கான உதவித்தொகையை உங்கள் கல்லூரியின் பெயரிலேயே காசோலையாகப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, ஆர்யவைசிய சமுதாய மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

Displaying 1001131957.jpg

Click here to submit your Scholarship Request

For more details, visit – https://avcef.vysyacharity.org/

Arya Vysya Charitable and Education Foundation குழுவினை தொடர்பு கொள்ள:

Address:
ARYA VYSYA CHARITABLE AND EDUCATION FOUNDATION
No 28, Errabalu Street, 1st Floor, Chennai – 600 001

Email id: vysyacharity@gmail.com

Phone: +91 88706 53555

ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் பெற்றோர் நினைவாகச் சிறுகதைப் போட்டி!

தமிழ் இலக்கிய உலகில் குற்றவியல் மற்றும் திரில்லர் நாவல்களின் மன்னனாகக் கொண்டாடப்படும் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பிரபல பட்டுக்கோட்டை பிரபாகர், தன் பெற்றோரான திரு. வி. ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி. ஆர். சந்திரா ஆகியோரின் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான திரைக்கதை ஆசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நடத்தவுள்ள இந்தச் சிறுகதைப் போட்டி, புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

போட்டியின் விவரங்கள்:

• போட்டியில் பங்கேற்பவர்கள் 1000 வார்த்தைகளுக்குள் சிறுகதைகளை எழுத வேண்டும்.
• எந்த வகை கதையையும் (genre) தேர்வு செய்யலாம்.
• ஒவ்வொருவரும் இரண்டு வேறுபட்ட கதைகளை அனுப்பலாம்.
• கதைகளை chandra.radha.pkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பரிசு விவரங்கள்:

• 🏆 முதல் பரிசு: ₹10,000

🥈 இரண்டாம் பரிசு: ₹5,000

🥉 மூன்றாம் பரிசு: ₹2,000

🏅 ஆறுதல் பரிசு: ₹1,000 (10 பேருக்கு)

வெற்றி பெறும் அனைத்து கதைகளும் ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்த முயற்சியானது, புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு, தமிழ் இலக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழுத்தாற்றல் கொண்ட அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

இன்று ஸ்ரீ வாசவி அன்னையின் அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள் | Bala Venkatraman

இன்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் மகா பிரளயம் – அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள். சரியாக 1007 வருடத்திற்கு முன்னால் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாள் இன்று!

ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை அர்ப்பணித்த நாள் இன்று!

எந்த செல்வத்தை எண்ணி இவர்கள் அக்னிபிரவேசம் செய்தனர். வைஸ்ய குலம் உய்தி பெற வேண்டும் என்று தனது உயிர்களை தியாகம் செய்தனர்.

இவர்களுக்கு வீடு, வாசல், செல்வம், மக்கள், உற்றார், உறவினர் இல்லையா?? அனைத்தும் உண்டு இந்த தம்பதியர் போகத்தில் மிதப்பவர்கள், வீரம், வேள்வி, ஞானம் ஆகியவற்றில் கரை கண்டவர்கள்.

இருப்பவைகள் யாவற்றையும் மக்களுக்கு என தரும் வள்ளல் பெருமகன்கள். வைஸ்ய குலத்தின் தருமத்தை நிலை நாட்ட தனது உயிரை அக்னியில் தந்த தியாக தினம் இன்று.

அவர்கள் பாதையில் நடக்க முடியாவிட்டாலும் அவர்களை இந்த நாளில் நினைத்து பார்ப்போம்.💐🙏🏻

102 கோத்திரத்தில் அக்னிபிரவேசம் செய்த தியாக தெய்வங்களை (தம்பதிகளை) இங்கே காண்போம், அவர்களுடைய ஆசிகளை பெறுவோம்.

1) அகத்தியஸ கோத்திரம் – அனுகுல, அனபகுல, அனபாலகுல

அக்னி பிரவேசம் செய்த தம்பதியர்

சிருங்கீஸ்வர ஸ்ரேஷ்டி – சந்திரலேகா

2) அத்ரேயஸ கோத்திரம் – அரிசெட்ல, எலிசெட்ல, அரசகுல, அரிசிஷ்டகுல.

ராஜீ ஸ்ரேஷ்டி – ராஜமுகி

3) ஆச்யாயனஸ கோத்திரம் – அக்ரமூல, அக்யமூலகுல, அர்க்யமூலகுல, அமலகுல.

கபில ஸ்ரேஷ்டி – விமலா.

4) உக்ரசேனஸ கோத்திரம் – குமாரசெட்ல, குமாரசிஷ்டகுல.

பார்த்தீப ஸ்ரேஷ்டி – ஹலகாம்பாள்

5) உத்க்ருஸ்டஸ கோத்திரம் – கன்னிகுல, காமகுல, கிராணுகுல, கானுகுல.

சம்பந்த ஸ்ரேஷ்டி – கமலாட்சி

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

6) உத்மோஜஸ கோத்திரம் – உத்தகுல, உத்தகாலகுல, உதசிஷ்டகுல, உத்தமகுல.

உத்தம ஸ்ரேஷ்டி – தருமாம்பாள்

7) ரிஷ்ய ஸ்ருங்கஸ கோத்திரம் – அனந்தகுல.

அனந்த ஸ்ரேஷ்டி – அனுமிதா

8) அச்சித்யஸ கோத்திரம் – யனஸ குல, யானஸககுல, யானஸபிகுல.

பாசுர ஸ்ரேஷ்டி – நீலவேணி

9) கண்வஸ கோத்திரம் – கர்ணகுல, கமட்டகுல, கர்நாடகுல, கோடகுல, கௌடுகுல, காடகுல.

சோமத ஸ்ரேஷ்டி – சமதர்ஷினி

10) கந்தர்பஸ – செகோட்டகுல, சலகுல, ஸ்ரீஸ்தகுண்டலகுல, சேகோள்ளகுல, மனகுல.

தொத்தம ஸ்ரேஷ்டி – அமிர்தபாஷினி.

11) கபிலஸ கோத்திரம் – மண்டகுல, ஹஸ்தகுல.

கபில ஸ்ரேஷ்டி – கம்புகமுடி

12) கம்போதஸ கோத்திரம் – வெங்கலகுல, வெங்கோல குல.

சுதர்ஸன ஸ்ரேஷ்டி – குமுதவல்லி

13) காசியபஸ கோத்திரம் – கணமுகிகுல, கணமுககுல.

தனந்த ஸ்ரேஷ்டி – தனலட்சுமி

14) குத்ஸஸ கோத்திரம் – இஷ்வாகுகுல, கதம்பகுல.

பாவன ஸ்ரேஷ்டி – சஞ்சலாஷி

15) கௌதின்யஸ கோத்திரம் – கன்னஸ்ரீலகுல, கன்னஸ்ரீகுல, கனலோல.

கவுர ஸ்ரேஷ்டி – கமலா.

16) கவுதேயஸ கோத்திரம் – காமிசெட்ல, காமிசிஷ்ட குல.

கோவிந்த ஸ்ரேஷ்டி – குந்தரத்னா.

17) கௌஷிகஸ கோத்திரம் – கனகபால

மல்லக்ய ஸ்ரேஷ்டி – ஹர்காம்பாள்..

18) கிருஷ்ணஸ கோத்திரம் – தனகுல, தநதகுல, தேனுகுல

கிருஷ்ண ஸ்ரேஷ்டி – சியாமளா.

19) கார்க்கியஸ கோத்திரம் – பிராணிகுல, பைடிகுல.

காலகண்ட ஸ்ரேஷ்டி – பார்வதி.

20) க்ருதசன்மஸ கோத்திரம் – ஜனகுல, ஜானுகுல, இசுபகுல.

கஜத்வ ஸ்ரேஷ்டி – கமலா.

21) கோபகஸ கோத்திரம் – இஞ்சுபகுல, கோண்டகுல, கோந்தககுல

உத்பலாஷ ஸ்ரேஷ்டி – கீர்த்தி காந்தா.

22) கௌதமஸ கோத்திரம் – கந்தசீல, கிரந்தசீல, கெந்தசில.

லோகவய்ய ஸ்ரேஷ்டி – லோகாம்பாள்.

23) சக்ரபாணிஸ கோத்திரம் – சக்ரமூலகுல, சக்கரமூலசகுல.

துருதசாத்வ ஸ்ரேஷ்டி – தனுமாத்யா.

24) சாமர்ஷனஸ கோத்திரம் – பெதகுல, பெத்தசிஷ்டகுல, பதசிஷ்டகுல.

மாஸ்யத்வஸ ஸ்ரேஷ்டி – ஹேமங்கி

25) ஜடபாரதஸ கோத்திரம் – குண்டகுல, தூரசிஸ்டகுல.

ஆதித்ய ஸ்ரேஷ்டி – மணிமஞ்சரி.

26) ஜதுகர்ணஸ கோத்திரம் – சந்திரகுல, சந்திரமசிஸ்டகுல, சந்திரமூலகுல.

ஆலதேச ஸ்ரேஷ்டி – பாலமணி

27) ஜம்பசூதனஸ கோத்திரம் – திரிமூலகுல.

சுந்தர ஸ்ரேஷ்டி – மோகனாங்கி

28) ஜராத்கரஸ கோத்திரம் – சனகுல, சந்தகுல, ஜியானுகுல.

சந்திராக்ய ஸ்ரேஷ்டி – கலாவதி

29) ஜாபாலிஸ கோத்திரம் – சூரிசிஷ்டகுல, சூரசிஸ்தகுல.

சந்திரபானு ஸ்ரேஷ்டி – பாவணி

30) ஜாப்ரேயஸ கோத்திரம் – சினிசெட்ல, சின்னிசெட்ல, சனசிஷ்டகுல.

சந்திரமௌலீஸ்வர ஸ்ரேஷ்டி – சந்திரகலா.

31) ஜெயவந்திஸ கோத்திரம் – பூதிலாஷிஷ்ட, புரோமசிஷ்டகுல, விருத்திகுல.

சிம்ஹாத்வஜ ஸ்ரேஷ்டி – சோமப்பிரபா.

32) தரணிஸ கோத்திரம் – திரிவிக்ரமசிஷ்டகுல.

ஜனார்த்தன ஸ்ரேஷ்டி – பாலாம்பாள்.

33) திதிரிஸ கோத்திரம் – பிரம்மரகுல, பிரமதகுல, பமதகுல, ப்ரவதகுல,

பிரம்ம ஸ்ரேஷ்டி – பூமாம்பாள்.

34) திரிஜதஸ கோத்திரம் – உசிரிகுல, உபரிகுல, உபரிசெட்ல.

சுந்தர ஸ்ரேஷ்டி – மஞ்சுளானி.

35) தைத்ரேயஸ கோத்திரம் – சிதுருபேல, சித்ரூபகுல, சதுர்பேல, சித்ரூப.

பாதஸ ஸ்ரேஷ்டி – சுதர்ஷினி.

36) தால்பியஸ கோத்திரம் – பதனசிஷ்ட, பத்தனமசிஷ்ட, படினகுல, பட்டிணகுல, பலககுல, பலகலகுல.

வல்லப ஸ்ரேஷ்டி – பல்லவபாணி.

37) துர்வாசஸ கோத்திரம் – திதனகுல, திதசகுல, தெந்தசுகுல, தெதநகுல.

குசல ஸ்ரேஷ்டி – சித்ரலேகா.

38) தேவராதஸ கோத்திரம் – ஹேரராஜ, ஹிரராசிகுல, ஹிரராதகுல.

கனமுக ஸ்ரேஷ்டி – மணிமாலா.

39) தேவல்கியஸ கோத்திரம் – உசிரகுல, உசிரிகுல, தேவிசெட்ல, தேசெட்ல, தேசிஷ்ட.

தந்த ஸ்ரேஷ்டி – பிரம்மராம்பாள்

40) நாரதஸ கோத்திரம் – பாலகுல, பாலககுல

ஸ்வர்ணரத ஸ்ரேஷ்டி – ஹேமரேகா.

41) நேத்ரபாதஸ கோத்திரம் – சந்தோகு, சந்தோகுகுல.

சிம்ஹாசின ஸ்ரேஷ்டி – சுபோதினி

42) பரஸ்பராயண்யஸ கோத்திரம் – துவிசிஷ்டகுல, பௌலஸ்ய குல, ஸ்ரீபும்சிகுல.

மூல ஸ்ரேஷ்டி – தனதா.

43) பல்லவஸ கோத்திரம் – கண்டகுல, கணபகுல, கண்டஸ்தூலகுல.

நந்தா ஸ்ரேஷ்டி – நீலாம்பாள்.

44) பவித்ரபாணிஸ கோத்திரம் – தயசிஷ்டகுல, தாசிஷ்டகுல, தேசெட்லகுல, தேசிஷ்டகுல, தைசிஷ்டகுல.

தந்த ஸ்ரேஷ்டி – தனலட்சுமி.

45) பராசரஸ கோத்திரம் – காமதேனுகுல, படகசிலகுல, பாஞ்சாலகுல, ப்ராணசீலகுல, பாபால, பாம்பாலகுல, ப்ராக்பாலகுல.

பாலவய்ய ஸ்ரேஷ்டி – பல்லவாம்பாள்.

46) பிங்கலஸ கோத்திரம் – அயனகுல.

யோக ஸ்ரேஷ்டி – போலாம்பாள்.

47) புண்டரீகஸ கோத்திரம் – அனுசிஷ்ட குல, க்ரானுகுல, தொண்டிகுல.

குமுத ஸ்ரேஷ்டி – கனகாங்கி.

48) பூதிமாஷஸ கோத்திரம் – துளசிகுல, துர்வாடிகுல, துளசிஷ்டகுல, துர்யாடகுல, தோடகுல, தோடிகுல.

பாலாக்ய ஸ்ரேஷ்டி – சந்திரமுகி..

49) புண்டரீகஸ கோத்திரம் – பும்சிமாம்ஸகுல, பும்சிமாஷகுல, ப்ரோசிஷ்டகுல, ப்ரோலி, ப்ரோலகுல.

புவன ஸ்ரேஷ்டி – புஷ்பாம்பாள்.

50) புலஸ்தியஸ கோத்திரம் – புனகசில, உத்தமகோசீல, பல்லவகோசீல, சூர்யகுல, பட்டுகோசீல, ஸ்ரீகோசில, நந்திகோசீல.

பாவன ஸ்ரேஷ்டி – ருக்மாவதி.

51) பிராசிணஸ கோத்திரம் – வனிசிஷ்டகுல, வெண்ணசிஷ்டகுல, வெலிசிஷ்டகுல.

வின்னஸ ஸ்ரேஷ்டி – சித்ராங்கி.

52) பிரபாதஸ கோத்திரம் – உத்வாஹ குல, பெண்ட்லி குல, ரவிசிஷ்டகுல.

ராமாக்ய ஸ்ரேஷ்டி – அபிராமி

53) பிருஹதச்வஸ கோத்திரம் – பேருசிஷ்ட, பேருசிஷ்டகுல, பைருசிஷ்டகுல.

பிணவாக்ய ஸ்ரேஷ்டி – ஷிம்பாத்ரி

54) போதாயனஸ கோத்திரம் – புத்திகுல, புதனகுல.

நாக ஸ்ரேஷ்டி – இபாயினி

55) பரத்வாஜஸ கோத்திரம் – பலிசெட்ல, பலிசிஷ்ட, பலசிஷ்ட

போக ஸ்ரேஷ்டி – பல்லவாம்பாள்

56) பார்க்கவஸ கோத்திரம் – பிருத்விசிஷ்ட, பிருத்விசிரேஷ்ட

ப்ருதுணம ஸ்ரேஷ்டி – ப்ருத்வி

57) மந்தபாலஸ கோத்திரம் – வினுகுல, வெண்ணகுல, வின்னகுல, வின்னஸ.

விஸ்வநாத ஸ்ரேஷ்டி – வின்னாம்பாள்.

58) மானவஸ கோத்திரம் – மன்யகுல, மானஸகுல, மானாச்சகுல, மானவஸகுல.

தஷிண ஸ்ரேஷ்டி – விசாஷனா.

59) மாரீசீஸ கோத்திரம் – தீஷமசிஷ்டஸ, தீஷமகுல, தீஷமசிஷ்டகுல, தீஷமஸ்ரேஷ்ட.

பாஸ்கர ஸ்ரேஷ்டி – பூமமணி

60) மார்கண்டேயஸ கோத்திரம் – மோதுகுல ,மோர்குல, மோருககுல, மோருஸ.

நாகத்வ ஸ்ரேஷ்டி – பிப்பலாம்பாள்.

61) முனிராஜஸ கோத்திரம் – பத்மசிஷ்டகுல, பத்மஸ்ரேஷ்ட.

சாரஸ ஸ்ரேஷ்டி – சரஸ்வதி

62) மைத்ரேயஸ கோத்திரம் – மத்திகுல, மதனகுல, மத்யஸ குல, மிதுனகுல, மைத்ரிகுல, மைத்ரகுல.

நாகஸ்ரேஷ்டி – நாகமணி

63) தௌம்யஸ (அ) மௌசலஸ கோத்திரம் – சந்தகுல, சந்தககுல, சங்காலகுல.

கௌர ஸ்ரேஷ்டி – கமலா.

64) மௌஞன்யஸ கோத்திரம் – மூஞ்சிகுல, மௌஞ்சிகுல.

குணபிஞ்சஸ ஸ்ரேஷ்டி – மஞ்சுவாணி

65) மௌத்கல்யஸ கோத்திரம் – நாபிள்ளகுல, முனிகுல, மூலகுல.

பாலவய்ய ஸ்ரேஷ்டி – பிரம்மராம்பாள்

66) யாசகஸ கோத்திரம் – வியாலகூலஸ, வெலிகொல்ல, வேலிகொல்ல.

விண்ணக ஸ்ரேஷ்டி – நவநிதாங்கி.

67) யக்ஞவல்கியஸ கோத்திரம் – அபிமஞ்சிகுல, அபிமன்யுகுல.

அமல ஸ்ரேஷ்டி – அபிநவாம்பாள்.

68) வடுகஸ கோத்திரம் – அனுமர்ஷணகுல.

வாமன ஸ்ரேஷ்டி – தாரகா

69) வரட்டுதந்தஸ (அ) வரதந்தஸ கோத்திரம் – மாசாந்தகுல.

அர்த்தநாரீசுவர ஸ்ரேஷ்டி – வாசந்திகா

70) வருணஸ கோத்திரம் – எலசிஷ்டகுல, வெலசிஷ்ட, வெலிசிஷ்டகுல, சிரிசெஷ்டகுல.

ஜெமுக்த ஸ்ரேஷ்டி – சுந்தரி.

71) வசிஸ்டஸ கோத்திரம் – வஸ்திரகுல, வஸ்திகுல.

வித்தால்ய ஸ்ரேஷ்டி – புஷ்பதமி

72) வாமதேவஸ கோத்திரம் – உபமன்யு குல, உபலகுல, உப்பாலகுல, உபநகுல, உபமகுல.

ப்ருத்வி ஸ்ரேஷ்டி – பீமாம்பாள்.

73) வாசுதேவஸ கோத்திரம் – பீமசிஷ்டகுல, பீமஸ்ரேஷ்டகுல.

மாதவ ஸ்ரேஷ்டி – விருத்தாம்பாள்.

74) வாயவ்யஸ கோத்திரம் – வ்ரகசிஷ்டகுல, ம்ரங்கமகுல, வ்ரகாலகுல, வ்ரங்கமகுல, வ்ரங்கமூலகுல.

தவினராஜ ஸ்ரேஷ்டி – ராஜலட்சுமி

75) வால்மீகஸ கோத்திரம் – சுகாலகுல, சுஸோள்ளகுல, சுசோள்ளகுல, சுசாலகுல.

சத்யானந்த ஸ்ரேஷ்டி – சத்தியவதி

76) விஸ்வக்சேனஸ கோத்திரம் – உபரிசிஷ்ட, உபரிசெட்ல, விபரிசெட்ல, விபரிசிஷ்ட.

வீரபத்ர ஸ்ரேஷ்டி – மேதாம்பாள்.

77) விஸ்வாமித்ரஸ கோத்திரம் – விக்ரமசிஷ்டகுல.

வித்யா ஸ்ரேஷ்டி – கங்காம்பாள்.

78) விஷ்ணுவ்ருதஸ கோத்திரம் – பிப்பலகுல, புப்பாலகுல.

கந்தர்வ ஸ்ரேஷ்டி – மணிசலங்கை.

79) வைரோஹித்யஸ கோத்திரம் – வசந்தகுல.

பத்மநாப ஸ்ரேஷ்டி – பத்மாவதி

80) வியாச்ஸ கோத்திரம் – தனந்தகுல, தனகுண்டகுல, தனகுகுல.

தர்மக்ய ஸ்ரேஷ்டி – தன்வதி.

81) சரபங்கஸ கோத்திரம் – க்ரமசிஷ்டகுல, க்ரமஸ்ரேஷ்டகுல.

ஜமதக்னி ஸ்ரேஷ்டி – அப்ஜமுகி.

82) சார்ஞரவஸ கோத்திரம் – குண்டககுல, கோண்டககுல.

ஜனார்த்தன ஸ்ரேஷ்டி – லீலாவதி.

83) சாண்டில்யஸ கோத்திரம் – துப்பாலகுல.

அம்ருத ஸ்ரேஷ்டி – தந்தவதி.

84) ஸ்ரீவத்சஸ கோத்திரம் – சிலகுல, ஸ்ரீலகுல, ஸ்ரீரங்ககுல.

ராகவய்ய ஸ்ரேஷ்டி – ராகமஞ்சரி.

85) ஸ்ரீதரஸ கோத்திரம் – ஸ்ரீசெட்ல, சிரிசெஷ்டகுல, ஸ்ரீசிஷ்ட.

சன்னித ஸ்ரேஷ்டி – உத்பலாஷி.

86) சுக்லஸ கோத்திரம் – ஸ்ரீசாலகுல, ஸ்ரீஸாள்ளகுல.

ராஜஸ்வர ஸ்ரேஷ்டி – ராஜமுகி.

87) சௌசேயஸ கோத்திரம் – இலமஞ்சிகுல, யலமஞ்சிகுல, ஹேலமஞ்சிகுல.

நிர்ஜனா ஸ்ரேஷ்டி – தவணி.

88) சௌணகஸ கோத்திரம் – கமலகுக, சௌணககுல, சநகாலகுல, த்ருகசிஷ்டகுல, தனதகுல.

சகல ஸ்ரேஷ்டி – சமகீல.

89) சத்யஸ கோத்திரம் – அந்திரகுல, சிந்தகுல, சித்தமசிஷ்ட, சிந்தால, சிந்த்ய குல, சித்ரசுப குல.

சித்ரசுப ஸ்ரேஷ்டி – சித்ரபாஷினி.

90) சனகஸ கோத்திரம் – சாணகுல, சனகுல.

மல்ல ஸ்ரேஷ்டி – பல்லவாம்பாள்.

91) சனத்குமாரஸ கோத்திரம் – டங்காரகுல, முத்துகுல, முதுகுல, தங்காரகுல.

பவித்ரபாணி ஸ்ரேஷ்டி – யோகினி.

92) சனந்தனஸ கோத்திரம் – சமசிஷ்டகுல, சாமிசெட்ல.

பாலபானு ஸ்ரேஷ்டி – பத்மகண்டி

93) சமவர்தகஸ கோத்திரம் – ரெண்டகுல, ரெண்டுகுல, ரோண்டகுல.

நாகவய்ய ஸ்ரேஷ்டி – கிருஷ்ணாம்பாள்.

94) சுகஞ்சனஸ கோத்திரம் – புச்சகுல, பொச்சகுல, பொத்சுகுல, புனிதகுல,

மார்கண்டேய ஸ்ரேஷ்டி – மேதாம்பாள்.

95) சுதீஷணஸ கோத்திரம் – தந்தகுல, தியந்தகுல, த்வந்தகுல, தெந்தகுல, தொந்தகுல, தேவிசெட்ல.

ஜமதக்னி ஸ்ரேஷ்டி – ஜகந்நாயகி.

96) சுந்தரஸ கோத்திரம் – இனகுல, இனகோல, வினுகுல.

விந்தய ஸ்ரேஷ்டி – ஹிந்துமுகி.

97) சொர்ணஸ கோத்திரம் – ப்ரோடயாசகுல, ப்ரோடயாஜகுல.

புன்யரசு ஸ்ரேஷ்டி – சுவள்ளசேனி.

98) சுப்ரமண்யஸ கோத்திரம் – சந்தனகுல, சநிக்தகுல.

மேகன ஸ்ரேஷ்டி – பத்மாஷி.

99) சௌபர்ணஸ கோத்திரம் – புதுருகுல, புதுருக்ஸகுல.

போக ஸ்ரேஷ்டி – தேவாம்பாள்.

100) சௌம்யஸ கோத்திரம் – ஹஸ்திகுல.

சிம்மமுக ஸ்ரேஷ்டி – சுபலாஷி.

101) சௌவர்ணஸ கோத்திரம் – சுசாலகுல, ஸகாள்ளகுல, ஸீசாலகுல, ஸீஸோள்ளகுல.

ஜலத ஸ்ரேஷ்டி – சந்திராம்பாள்.

102) ஹரிவல்கியஸ கோத்திரம் – கபடகுல, கொரடகுல, கோரண்டகுல.

குமார ஸ்ரேஷ்டி – தாரணி.

நம்முடைய கோத்திர தியாக தெய்வங்களை இன்றைய நாளில் வணங்கி அவர்களுடைய ஆசிகளை பெறுவோம்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

கோவை ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் உருவாக்கிய அதிநவீன டர்ஃப் மைதானம்

கோவை மாநகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் ஒன்று கூடி, தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் உயரமான டர்ஃப் மைதானத்தை உருவாக்கியுள்ளனர். கிரிக்கெட், கால்பந்து மற்றும் வெளிநாட்டில் பிரசத்தி பெற்ற பிக்ள்பால் போன்ற விளையாட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பல்துறை திறன் கொண்ட மைதானம், இரவு நேரங்களிலும் சிறந்த விளையாட்டு நிலைமைகளை உறுதிப்படுத்தும் அதிநவீன விளக்குகளைக் கொண்டுள்ளது.

“கோல்டன் ஸ்போர்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்” என்று பெயரிடப்பட்ட இந்த டர்ஃப் மைதானம், ஆர்யவைஸ்ய சமூக இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணிக்கு சான்றாகும். இந்த திட்டத்தை சாதனை நேரத்தில், வெறும் மூன்று மாதங்களில் நிறைவேற்றிய  திரு. ரூபேஷ், திரு. விமல் மற்றும் திரு. முரளி ஆகியோரின் தலைமைத்துவத்திற்கு பாராட்டுக்கள். வைஸ்ய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இளைஞர்களிடையே விளையாட்டு திறமைகளை வளர்ப்பதும், சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதும் இவர்களின் முக்கிய இலக்காகும்.

மேலும் பல வைஸ்ய இளைஞர்களை ஒன்றிணைத்து ஆர்யவைஸ்ய சமூகத்தின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு பயன்பெறும் பல வியத்தக திட்டங்கள் இவர்கள் வசம் உள்ளது.

இந்த சாதனையுடன் கூடுதலாக, வாசவி கிளப் மில்லினியல்ஸ் கோவை, வரும் ஜனவரி 26 ஆம் தேதி இந்த மைதானத்தில் மாவட்ட அளவிலான டர்ஃப் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை  வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

போகி காப்பும் மருத்துவ பயனும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (ஜனவரி 13 ஆம் தேதி), போகிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாக கருதப்படும் போகி நன்னாளில், நம் அனைவரின் வீட்டு வாசலில் காப்பை காட்டுவோம். இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலையும் பற்றி நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைஸ்ய சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, அன்பான அழைப்பு!

தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்!

நம் வைஸ்ய குல மக்களுக்காக 45வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் The Southern India Vysya Association சார்பில் நடைபெற இருக்கிறது.

நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி நிச்சியதார்தம், உபநயனம் மற்றும் மாங்கல்ய தாரணம் ஆகிய சடங்குகளுடன் இலவச திருமணத்தை செய்து​கொள்ள விரும்பும் வைஸ்ய மணமக்கள் விரைவாக முன்பதிவு செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு:

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஆர்ய வைஸ்யரை பற்றிய குறிப்பு | திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் பெருமாள் கோயிலில் உள்ள தூணில் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டை சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டு நிபுணர்களுமாகிய திருவண்ணாமலை பாலமுருகன் மற்றும் அரியூர் பழனிச்சாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தூணில் ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தையின் உருவமும் உள்ளது. அந்த உருவங்களின் மேல் துந்துபி வருடம், ஐப்பசி மாதம் கோமட்டி தாண்டவ செட்டி குமாரன் பெத்தப்பு செட்டி மண்டபம் கட்டியமை என கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் தாங்கள் சிறுபான்மையராக இருந்தாலும் கூட பொதுகாரியங்களுக்கு தானம் செய்வதை தங்கள் கடமையாக ஆர்ய வைஸ்யர்கள் கொண்டிருந்ததை அறியும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

மேலும் கடலாடியில் சிறப்பாக அமைந்துவரும் வாசவி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுமார் 10 கி. மீ. தொலைவில் இந்த மண்டபம் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

கடலாடி பிரபாகர் அண்ணாவை தொடர்பு கொண்டுள்ளேன். மேலும் விவரங்கள் விரைவில்.

மேலும், விழப்புரம் கைலாசநாதர் கோயிலில் 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் கோமிட்டி செட்டிகள் செய்த உற்சவத்தை பற்றிய குறிப்பு உள்ளது. இன்றும் அந்த உற்சவத்தை நம் சமூகத்தார் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம் – 2]

நாம் சென்ற பகுதியில் மஞ்சளினால் கௌரியை செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்களை ஹரிஷ்மிதா அவர்கள் விளக்கினார்.

Click here for a quick recap to part 1 video: https://www.vysdom.in/2024/09/05/மஞ்சளினால்-கௌரியை-செய்ய/

இந்த பதிவில் கௌரியின் கண், காது, உதடு, கண்ணம், மற்றும் முழுமையாக செய்வதற்கான வழிமுறைகளை ஹரிஷ்மிதா அவர்கள் கற்றுத்தர உள்ளார்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம் – 1]

நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார்.

[பாகம் – 1] கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்!

நம் அடுத்த பதிவில் கௌரியின் கண், காது, உதடு, கண்ணம், மற்றும் முழுமையாக செய்வதற்கான வழிமுறைகளை ஹரிஷ்மிதா அவர்கள் விளக்குவார்.

Krish’s Clay Creations நிறுவினர் ஹரிஷ்மிதா; ஆர்வமுள்ள பலருக்கு Gowri Making, Replica Dolls, Coffee Painting, Pencil Carving, Fluid Art முதலியவற்றை கற்றுக்கொடுக்கிறார்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group