சுதந்திர போராட்ட வீரரும் மகாயோகியுமான அரவிந்தர் வங்காளத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் சிறைச்சாலையில் அவர் இருந்த போது யோகக் கலையைக் தானாகவே கற்றுக்கொண்டார். சிறையிலிருந்து அவர் விடுதலை ஆனவுடன் அவரை எல்லோரும் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிச்செல்ல ஆலோசனை கூறினார்கள். ஆனால் சிறையில் இருந்த போது அவருக்கு உள்ளிருந்த ஒரு குரல் (சுவாமி விவேகானந்தரே தோன்றி அவருக்கு ஆலோசனை சொன்னதாகவும் கூறுகிறார்கள்) அவரை புதுச்சேரிக்கு செல்ல ஆணையிட்டது.
அதன்படியே அவர் புதுவைக்கு 4.4.1910 ஆம் ஆண்டு வந்தார். அவரை புதுவையில் கோமிட்டி வீதியில் உள்ள 63 ஆம் நம்பர் வீட்டிற்கு போக சொன்னது மீண்டும் உள்ளிருந்து வந்த குரல்.
அவ்வாறே அந்த வீதியில் உள்ள வீட்டிற்குச் சென்றார் அரவிந்தர். அந்த வீட்டின் நீண்ட திண்ணையில் அமர்ந்தார். அந்த வீடு சங்கர செட்டியாருக்கு சொந்தமானது. சமீபத்தில் அவர் வீட்டிற்கு வந்த யோகி ஒருவர் செட்டியார் உங்கள் வீட்டிற்கு ஒரு மகான் வருவார் அவர் பல அதிசயங்களை நிகழ்த்த இருக்கிறார் அவரை நாம் உத்திரயோகி என்று அழைக்கலாம் என கூறியிருந்தார். அது அவரின் நினைவிற்கு வந்தது. அரவிந்தர் ஹிந்தியில் பேசியதால் அப்பொழுது புதுவையில் தங்கியிருந்த பாரதியாரை உதவிக்கு அழைத்தார் சங்கர செட்டியார். பாரதியும் சங்கர செட்டியாரும் நண்பர்கள். பாரதி வந்து அரவிந்தரிடம் பேசி விவரம் அறிந்தார்.
செட்டியாரை பார்த்து நீங்கள் எதிர்பார்த்த உத்திரயோகி வந்துவிட்டார் என கூறியதும், செட்டியாருக்கு மிகவும் மகிழ்ச்சி தன் வீட்டில் வியாபாரத்திற்காக கட்டப்பட்டிருந்த பாதாள அறையில் அரவிந்தரை மூன்று நாட்கள் மறைத்து வைத்தார், காரணம் ஆங்கில ஒற்றர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.
உடனே சங்கர செட்டியார், பாரதியார், சீனுவாச ஐயங்கார் ஆகியோர் பிரான்ஸ் அரசாங்கத்திடம் பேசி அரவிந்தர் புதுவையில் தங்க அனுமதி பெற்றனர். எனவே பாதாள அறையிலிருந்து வெளிவந்து அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் ஆறு மாதங்கள் அரவிந்தர் தங்கியிருந்தாராம்.
ஆங்கில அரசாங்கத்திடமிருந்து அரவிந்தரை காத்த சங்கர செட்டியாரின் வீட்டை 1963 ஆம் ஆண்டு பெருமுக்கல் தசரதன் செட்டியார், ஆசிரமத்தில் இருந்த அன்னையின் ஆதரவோடு இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்.
காலத்திற்கு ஏற்ப சில மாறுதல்களை அவர் செய்திருக்கிறார். ஆனாலும் இன்றும் அரவிந்தர் தங்கியிருந்த அறையை அப்படியே வைத்திருக்கிறார்கள். தசரத செட்டியாரின் மகன் திரு. ஜவகர் பாபுவும் அவரின் துணைவியார் திருமதி. உஷா ஜவகர் பாபுவும் இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். இருவருமே அரவிந்தரின் பக்தர்களாக உள்ளனர்.
அரவிந்தர் புதுவைக்கு வந்த தினமான ஏப்ரல் மாதம் நான்காம் தேதியை அரவிந்தர் ஆசிரமம் மிகச்சிறப்பாக கொண்டாடிவருகிறது. அன்று மட்டும் அரவிந்தர் அடைக்கலமான இந்த 63 வைஸ்யாள் வீதியில் உள்ள இந்த வீட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இந்த அறையை தரிசித்து செல்வார்களாம். அதற்கு பெருந்தன்மையாக அனுமதித்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.
அது போல் அன்னையை இந்த வீட்டை வாங்க சிலர் தூண்டியபோது அன்னை மறுத்துவிட்டாராம். மகான் அரவிந்தருக்கு அடைக்கலம் அளித்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக நாம் எதையும் செய்யக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம்.
விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு மகாகவி பாரதியாருக்கும் நண்பராக திகழ்ந்தும், மகான் அரவிந்தருக்கு அடைக்கலம் தந்த சங்கர செட்டியாரின் வாரிசுகளை பற்றியும், இப்பொழுது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடியவில்லை.
இந்த தகவல்களை ஒருவேளை அந்த குடும்பத்தார் படிக்க நேர்ந்து தொடர்புகொண்டால் அவர்களைப்பற்றிய விவரங்களுடன் மீண்டும் உங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
திருமதி. உஷா ஜவகர் கூறுவதை கேளுங்கள்
பண்ருட்டி சொ.முத்துக்குமார்
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
பிரபல நாளிதழ் தினமணியில் நம் வைஸ்ய குலத்தின் தெய்வமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் சரித்திரத்தை “காக்க வந்த கன்யகா பரமேஸ்வரி” என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது.
மேலும் 700 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேகத்தை பற்றியும் பதிவிட்டுள்ளனர்.
சிவராத்திரியில் 12 சிவாலயங்களில் தரிசனம்! சென்னையில் இதுவரை அறியாத சிவ தலங்கள்!!
Agenda:
வரும் சிவராத்திரி அன்று (21/02/2020) இரவு 9 மணிக்கு குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு வழியாக 12 சிவாலயங்கள் தரிசனம் செய்துவிட்டு காலை 7 மணிக்கு ஆலய தரிசனம் முடித்து வீடு திரும்புதல்.
தலங்களின் பெயர்கள்:
1) வல்லம் வேதாந்தீஸ்வரர் ஆலயம்
2) திருவடிசூலம் திருவிடைச்சுரநாதர்
3) திருவடிசூலம் கருமாரியம்மன் ( 52 அடி உயர அம்மன் )
4) 108 திவ்ய தேச தரிசனம் ஓரே இடத்தில்
5) மகா பைரவர் ஆலயம்
6) முள்ளிப்பாக்கம் பரசுராமேசுவரர் ஆலயம்
7) சிறுகுன்றம் சிவாலயம்
8) நாகாபரணீஸ்வரர் ஆலயம்
9) கொண்டங்கி சிவாலயம்
10) செம்பாக்கம் வட திருவானைக்கா ஆலயம்
11) அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி ஆலயம்
12) காட்டூர் உத்திர வைத்தியநாதர் ஆலயம்
13) வென்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம்
14) காயார் ஆடவல்லீஸ்வரர் ஆலயம்
Fare: நபர் ஒருவருக்கு 750 ரூபாய் (காபி + ஸ்நாக்ஸ்)
700 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 05 மார்ச் 2020 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 நவம்பர் 2019 முதல் 20 பிப்ரவரி 2020 வரை அனைத்து ஊர்களில் உள்ள வைஸ்ய குல மக்கள் இணைந்து உலக ஷேமம் மேன்மையடைய, ஆர்ய வைஸ்ய குலம் மேலும் சிறப்படைய 108 கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயணம் ஜபித்து வருகின்றனர்.
மேலும் விபரங்களுக்கு:
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
நம் நாட்டில் எங்கும் காணப்படும் குப்பைமேனி செடியின் பலன்களை நம்மை விட வெளிநாட்டினர் நன்கு அறிந்து, அதிக அளவில் Import செய்து உபயோகித்து வருகின்றனர் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.
குப்பைமேனி செடியின் வேர் முதல் இலை வரை ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. குப்பைமேனி செடியினை பற்றியும் அதனை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த திருமதி. அபிராமி கோபிநாத் அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Know Your Food, Know Your Health என்ற பகுதியின் வாயிலாக கூறுவதை கேளுங்கள்.
Know Your Food, Know Your Health from ABIs Home Made!
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டில் நம் அன்னைக்காக கட்டப்பட்ட பொற்கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் மற்றும் வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டை என இருபெரு விழா விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு திருவிழா பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 3 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் பொற்கோவிலில் நடைபெற்ற நிகழ்வுகளை காணுங்கள்.
A Quick Tour to Penugonda Vasavi Temple:
Pavithra Godavari Aarathi வைபவம்:
Sahasra Galaarchana Gayana – Performed by 1000 Vysya womens:
7 கடல்கள், 102 ஆறுகளின் புனித நீரினால் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள 90 அடி உயரமான வாசவி அன்னையின் சிலைக்கு மஹா அபிஷேகத்தின் காணொளி:
கிரகத்தில் அதாவது இடத்தில் பிரவேசித்தல் கிரகப்பிரவேசம் என்கிறோம். அதேபோல் அக்னியில் பிரவேசித்தல் அக்னிப்பிரவேசம், எனினும் இவ்வாறு அக்னியில் பிரவேசித்தல் என்பது சாதாரண காரியமல்ல!! மாபெரும் அசாதாரண சக்திகளுக்கு அது சாத்தியம்!! எப்படி என்றால்? திரேதாயுகத்தில் அன்னை சீதை அதுபோல கலியுகத்தில் அக்னி பிரவேசம் செய்த ஓர் அற்புத சக்தி என்றால், அது நம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி மட்டுமே.
பிற கருத்துகள்
வாசவியின் இந்த அக்னி பிரவேசத்தை பற்றி பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரிய வைசியர்கள் விஷ்ணுவர்த்தனனை எதிர்க்க முடியாமல் அக்னிப்பிரவேசம் செய்ததாக சில கருத்துக்களும், ஆரிய வைசியர்களின் அகிம்சையை பிரதிபலிக்கவே இந்த அக்னிப்பிரவேச முடிவு என்றும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் உண்மை என்ன என்பதை ஆராய்வதே நம் நோக்கம் ஆகும்.
பார்வதியின் அவதாரம்
சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், வாசவியின் அவதாரம் என்பது முழுக்க முழுக்க சாப நிவர்த்திக்காக எடுக்கப்பட்ட உமையோரு பாகனின் மறுபாகமாகிய பராசக்தியின் ஓர் அவதாரப் படலம் ஆகும்.
அன்னை பார்வதி இந்த பூவுலகில் கன்னிகா பரமேஸ்வரியாக அவதாரம் செய்தது சாபத்தினால்!!
ஒரு கந்தர்வன் கீழைச் சாளுக்கிய மன்னனாக இந்த உலகில் பிறந்தது சாபத்தினால்,
கைலாயத்தில் சிவ சேவகம் செய்து வாழ்ந்த ஓர் இனக்குழு பூலோகத்தில் ஆரிய வைசியர்கள்களாக பிறப்பெடுத்தது ஒரு சாபத்தினால்!!
எப்போதும் சிவத்தை சுமந்து சிவ நெறியில் வாழும் நந்திதேவர் பெனுகொண்டாவில் விருபாக்ஷனாக பிறந்தது சாபத்தினால், இதில் பார்வதி தேவி அன்னையை பூவுலகில் பிறப்பெடுக்க வைத்தது சாபம் மட்டும் காரணம் அல்ல.
அது என்ன சாபங்கள்?? வாருங்கள் பார்ப்போம்.
சாபங்கள்
ஒருமுறை கைலாயத்தில் நந்திதேவர் சிவபெருமானை நடனமாடி மகிழ்வித்து வணங்கினார். ஆனால் பார்வதிதேவியை வணங்க மறந்து விட்டார்.
பார்வதி தேவி நந்தி தன்னை வேண்டுமென்றே வணங்காமல் புறக்கணித்ததாக எண்ணி அவரை பூமியில் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார்.
தான் விரும்பிச் செய்யாத தவறுக்கு தன்னை சபித்ததை எண்ணி வருத்தமும், கோபமும் அடைந்த நந்தி தேவர் பதிலுக்குப் பார்வதியை பூமியில் பெண்ணாகப் பிறந்து கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.
இப்படி நந்தி தேவரும், பார்வதி தேவியும் ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டு பெனுகொண்டா நகரை ஆண்டு வந்த குசுமஸ்ரேஷ்டி என்போருக்கும், குசுமாம்பிகை அம்மைக்கும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர்.
பெண் குழந்தைக்கு வாசவி எனவும், ஆண் குழந்தைக்கு விரூபாஷன் என்றும் பெயரிட்டு வளர்த்தனர்.
சித்திரகண்டன் என்னும் கந்தர்வன் ஒரு முனிவரின் சாபத்தால் பூமியில் விஷ்ணுவர்த்தன் என்ற மன்னனாகப் பிறந்தான்.
அது சரி ஆரிய வைசியர்கள் எதற்காக ஆந்திர நிலத்தில் அவதரித்தனர்? வாருங்கள் பார்ப்போம்.
பிராமணர்களின் சாபம்
இதற்கு சான்றாக புராண நிகழ்வு ஒன்றை பார்ப்போம்.
படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவன் அவையில் பிராமணர், சத்ரியர், வைசியர்கள் குடியிருந்தனர். பிரம்மதேவன் அவர்களைக்கண்டு தத்தம் கோத்தரங்களைப் பற்றித் தெரிவிக்குமாறு ஆணையிட்டார்.
பிராமணர்களின் சங்கத்தை சார்ந்த பிரதிநிதியாகக் துர்வாச முனிவர் எழுந்து கூறினார்.
பிரம்மதேவனே! எங்களில் 107 கோத்திரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சிறப்பாகக் கருதப்படுவது 18 மட்டுமேயாகும்.
சத்ரியர்கள் சங்கத்தைச் சார்ந்த தனஞ்செயன் என்னும் மன்னன் எழுந்து பகர்ந்தான்.
பகவானே! எங்களில் 7 கோத்திரங்கள் உள்ளன. அவை ஏழும் சிறப்புடையது.
வைசியர்களின் சங்கத்தைச் சேர்ந்த சமாதி எனும் வைசிய முனிவர் தெரிவித்தார்.
உங்களையெல்லாம் படைத்த உத்தமோத்மரே! எங்கள் வைசிய குலத்தில் 714 கோத்திரங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் வாழும் வைஸ்ய குல மக்களை பிரம்மன் அகமகிழ புகழ்ந்தான்.
பிராமணர்களின் கோத்திரங்களை ஆங்கீரச முனிவரும், சத்ரியர்களின் கோத்திரங்களை வசிஷ்ட முனியும், வைசியர்களின் கோத்திரங்களை அபரார்க்க மகாமுனியும் நிச்சயம் செய்து நடைமுறை படுத்தினார்கள்.
இம்மூன்று முனிவர்களும் பிரம்ம தேவனின் மானச புதல்வர்கள். பிரம்மதேவனின் விருப்பப்படி இம் மூவரும் மூன்று வர்ணத்தாருக்கும் ஜாதகம் எழுதி பெயர் சூட்டி கோத்திரங்கள் வகுத்தளித்து வழிகாட்டினார்கள்.
வைசியர்கள் பிரம்ம தேவனின் தொடையினின்று உண்டானார்கள் என்று புராண வரலாறும் பண்டைய நூல்களும் சாஸ்திரங்களும் இயம்புகின்றன.
பிரம்ம தேவனின் புகழ்ச்சியினால் மட்டிலா மகிழ்ச்சி கொண்ட வைசியர்களில் பலர் பிராமணர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக்கண்டு எள்ளி நகையாடி பரிகசித்தார்கள்.
சில வைஸ்யர்கள் மட்டும் மமதை கொள்ளாது நிலை தடுமாறாது மற்றார் மனம் புண்படாதவாறு அடக்கமாக இருந்தனர். இகழ்ச்சிக்கு ஆளான பிராமணர்கள் அமைதியாக இருப்பார்களா?
வேள்வித் தீ
சில ஆரிய வைசியர்களின் பரிகாசத்திற்கும், இழிவுக்கும் ஆளான பிராமணர்கள், எள்ளி நகையாடிய வைசியர்களைச் சபித்தார்கள். நீங்கள் பிரம்மாவின் புகழினால் அகந்தை கொண்டு எங்களை இழிவு படுத்தியதால் நீங்கள் 714 கோத்திரக்காரர்களும் பழிக்கும், பாவத்திற்கும் ஆளாகி, புலால் புசித்து வாழ்ந்து, புகழ் இழந்து அவமானப்பட்டு நிலவுலகம் சென்று வாழ்வீராக, தவிரவும் எங்களை இகழாத ஆரிய வைசியர்கள் ஒரு கன்னியின் பொருட்டு 102 கோத்திரக்காரர்கள் மட்டும் புனித வேள்வித் தீயில் தங்களை அர்பணித்துக் கொண்டு புகழேணியில் ஏறி ஆர்ய வைசியர் என பாராட்டப் பெறுவீராக! இந்த 612 கோத்திரங்களும் வேள்வித்தீயைக் கண்டு அஞ்சி உயிர் காக்க ஓடி பழிக்கப்படுவாராக, என சபித்தனர்.
இப்படி பிராமணர்களின் சாபத்திற்கு ஆளான வைசிய முனிவர்கள் பெனுகொண்டாவில் ஆரிய வைசியர்களாக ஏன் அவதரித்தனர்? அதாவது வாணியர், நாடார், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் என பல வணிக சமூகங்கள் இருக்கும்போது, ஆரிய வைசியர்களாக ஏன் பிறப்பெடுத்தனர்?? ஏனெனில் ஆரிய வைசியர்களுக்கும் யோகத்திற்கும் மிகப்பெரிய சம்பந்தம் உண்டு என்பதை நான் பலமுறை தெரிவித்து இருக்கின்றேன்.
வாசவி மற்றும் விருபாக்ஷன் கூட ஆய கலைகள் 64 யும் திறம்பட பயின்றார்கள். அவர்கள் தசமகா வித்யாவில் சிறந்து விளங்கினார்கள்.
வெறும் சாபங்கள் தான் கன்னிகா பரமேஸ்வரி அன்னை அக்னி பிரவேசம் செய்ய காரணமா?? அது தான் இல்லை, இதில் இன்னும் சில காரணிகள் உள்ளன..
இதில் சிவநிந்தனையும், சிவ பக்தியும் சூட்சும மறைபொருளாக இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சிவநிந்தனை
கிரேதா யுகத்தில் சிவபெருமானின் மனைவியான தட்சனின் மகளான தாட்சாயணி சிவனின் ஆணையையும் மீறி தட்சனின் யாகத்திற்கு சென்ற பாவம் போக, கிரேதா யுகத்தில் சதி தேவியாக அக்னி பிரவேசம் செய்தார்.
திரேதாயுகத்தில் வேதவதியாக சீதைக்கு பதிலாக அக்னி குண்டத்தில் இறங்கினாள்.
துவாபரயுகத்தில் யோகமாயையாக அக்னி ஏறினாள்.
கலியுகத்தில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி யாக அக்னி பிரவேசம் செய்தால்.
இவ்வாறு சிவனின் பேச்சையும் கேளாமல் சிவனின் மனைவி செய்த சிவநிந்தை எனும் பாவத்திற்காக நான்கு யுகங்களில் அக்னி பிரதேசங்களை அன்னை பார்வதி செய்தார்.
சிவ பக்தியின் மகத்துவம்
கதையை சற்று ஆராய்ந்தால் இன்னோரு உண்மை புலப்படும், கைலாயத்தில் சிவ வாகனமாக இருக்கும் நந்தியம்பெருமானே விருபாஷனாக பிறந்தும் வாசவியை காப்பாற்றாமல் அக்னிபிரவேசம் செய்யவிட்டது ஏனோ?
வெறும் கந்தர்வன் சித்திரகண்டனாக இருந்து புவியில் விஷ்ணு வர்த்தனாக பிறந்த அரசனை சிவ பெருமானுடைய வாகனமான நந்தியம் பெருமானாகிய விருபாஷன் வெல்ல முடியாதா? என்ன?
எல்லாவற்றிற்கும் மேலாக பார்வதி தேவியாகிய வாசவி விஷ்ணுவர்தனை கண் பார்வையிலேயே எறிக்க முடியாதா என்ன?
முடியும், முடியும், எல்லாமே முடியும். இவர்களை தடுத்தது எது? என பார்த்தால்…
சிவ பக்திக்கு மரியாதை
சித்திரகண்டனின் சிவ பக்தி. சித்திரகண்டன் சாதாரண மனிதனல்ல. சிவபெருமான் மேல் ஆத்மார்த்தமான பக்தி வைத்து சிவனையே உருகி உருகி பக்தி செய்தவன். கைலாயத்தில் அகோர தவம் புரிந்தவன். சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் சாதாரண மனிதனாக பிறந்திருக்கலாமே? முப்போகமும் அனுபவிக்கும் வேங்கி நாட்டை தலைநகராக கொண்டு ஆளும் கீழை சாளுக்கிய சக்ரவர்த்தியான விஷ்ணுவர்தனாக பிறக்க வேண்டிய அவசியம் என்ன…?
தெய்வபிறவிகளாகிய விருபாஷனும், வாசவியும் கூட விஷ்ணுவர்தனை ஒன்றும் செய்யவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன?
பராசக்தி அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்கிற நந்தியம்பெருமானின் சாபமும், விஷ்ணுவர்தனனுடைய சிவபக்தியும். ஆம் சிவபக்தியின் மகத்துவம் அப்பேர்பட்டது. எவன் ஒருவன் சிவத்தை முதன்மையாக கொண்டு வாழ்வை நெறியாக மாற்றிகொள்கிறானோ. அவனுக்கு அடுத்த பிறவி இல்லை, அவன் தலைமுறைளுக்கு எல்லாம் சிவம் துணை புரியும் எனும் அசைக்க முடியாத உண்மை!!.
நிகழ்கால சிந்தனை
ஆரிய வைசியர்கள் வீரம் காட்ட தயக்கம் கொண்டவர்களாக இருந்திருந்தால், 102 கோத்திர மக்கள் அனைவருமே அக்னியில் ஆகுதியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் 102 கோத்திரத்தில் கோத்திரத்திற்கு தம்பதியர் என 102 கோத்திர தம்பதியர் ஆகுதி ஆயினர்.
விஷ்ணு வர்தனனுடன் போர் புரிய தயங்கியிருந்தால், முதலில் வாசவியும், குசும பூபதி மற்றும் குசுமாம்பிகையுடன், விருபாஷனும் அக்னி பிரவேசம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் வாசவியை மணம் செய்விக்க மறுத்த வாசவியின் குடும்பத்தின் மேல் தான் மன்னனின் கோபம் செல்லும் சரிதானே, ஆனால் விருபாஷன் அக்னி பிரவேசம் செய்யாமல் தன் தந்தைக்கு பிறகு பெனுகொண்டாவின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
மேலும் விஷ்ணுவர்த்தனன் இறந்த பிறகு, அவன் மகன் இராஜ இராஜ நரேந்திரன் கோபம் கொண்டு பழிவாங்க விருபாஷன் மீது நடைவடிக்கை எடுக்காமலா?? இருந்திருப்பான். ஆனால் அனைத்தையும் கடந்து விருபாஷனிடம், காலில் விழுந்து இராஜ இராஜ நரேந்திரனே மன்னிப்பு கேட்கிறான் என்றால் விருபாஷனின் வீரமும், அஹிம்சை வழிமுறையும் மட்டுமே காரணம் என்றால் அது மிகையாகாது.
இதிலிருந்து வைசியர்கள் அஹிம்சையை விரும்பவர்களே அன்றி வீரம் வெளிகாட்ட தெரியாதவர்கள் அல்ல என்பதை தெளிவர புரிந்து கொள்ளலாம்.
VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
நடக்கவிருக்கும் 10 வது மற்றும் 12 வது பொது தேர்வில், வைஸ்ய குல மாணவ செல்வங்கள் வெற்றி பெற வேண்டி வைஸ்ய சங்கமம் WhatsApp குழுவின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி, திண்டுக்கல் சௌந்தரராஜபெருமாள் ஆலயத்தில் ஹயக்ரீவர் பூஜை நடத்த உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு:
ஹயக்ரீவர் பூஜையில், பொது தேர்வில் தோன்றவிருக்கும் மாணவர்களின் பெயரில் சங்கல்பம் செய்ய, மாணவரின் பெயர், வகுப்பு, நக்ஷத்திரம், கோத்திரம், முகவரி, கைபேசி எண் ஆகியவற்றினை ஹயக்ரீவர் பூஜை கமிட்டியின் உறுப்பினர் நத்தம் திரு. Lucky Ram அவர்களுடன் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் 9150245720 WhatsApp வாயிலாக பகிருங்கள்.
வைஸ்ய மாணவர்களுக்காக இப்பூஜையை நடத்தும் வைஸ்ய சங்கமம் WhatsApp குழுவில் உள்ள அனைவருக்கும், ஹயக்ரீவர் பூஜை கமிட்டி குழு தலைவர் திரு. அரவிந்தன் அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர் திரு. நந்தகுமார் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏
பொது தேர்வுக்கு தயாராகும் அனைத்து வைஸ்ய குல மாணவ, மாணவிகளுக்கும் VYSDOM குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள். All the Best 👍
VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் அதிகாலை எழுந்து மனதிற்கு விருப்பமான கோலத்தை போட்டு முடிப்பது மிகப்பெரிய சாதனைதான்.
இப்பொழுது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துவிட்டது. மார்கழி மாதத்திற்கு ஒரு Quick Rewind செய்து வைஸ்ய குலத்தை சேர்ந்த திருமதி. தீபா ராமகிருஷ்ணன் அவர்களின் மார்கழி ரங்கோலிகளை பார்த்தால் மிகவும் பிரமிப்பாகவும், பக்தியுடனும், கலை நயத்துடனும், மாடர்னாகவும், அழுத்தமான கருத்துக்களுடனும் வரைந்து அசத்தியுள்ளார்.
திருமதி. தீபா அவர்களின் மார்கழி மாத ரங்கோலியின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக.
VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
🔥போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்பட்டு, வீட்டில் தேங்கிப்போயிருக்கும் உபயோகமற்றவை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
தைப்பொங்கல்!
🌄தை மாதத்தின் முதல் நாளன்று, விவசாயத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்குக்கும் சூரிய பகவானிற்கும் நன்றி செலுத்தும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 9.00 மணி முதல் 10.30 வரை பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். அதிகாலை பொங்கல் வைக்க நினைப்போர் காலை 7.30க்குள் வைத்து முடித்துவிட வேண்டும்.
மாட்டுப் பொங்கல்!
🐮உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.