VYSDOM.in – Digital Magazine for Aryavysyas பெருமையுடன் நடத்தும் Kitchen Champions – Online Cooking Contest இன் இறுதி சுற்றில் அல்லுடு விந்து போஜனம் எனும் தலைப்பில் Mrs. Vijayalakshmi Muniyappan அவர்கள் சமைத்த Delicious உணவுகள் உங்களின் பார்வைக்காக. ஆஹா ஏமி ருச்சி 😋
“அல்லுடு விந்து போஜனம் by Mrs. Vijayalakshmi Muniyappan – Snap Shots”
வருடா வருடம் வைஸ்ய வியாபாரிகளும், நிறுவனங்களும் சங்கமிக்கும் ஒரு மாபெரும் நிகழ்வே வைஸ்ய வ்யாபார்.
வாசவி கிளப்ஸ் (V502A) பெருமையுடன் நடத்தும் வைஸ்ய வ்யாபார் – வணிக கண்காட்சியின் வாயிலாக பல நூறு வைஸ்ய வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர் என்று கூறுகிறார் வைஸ்ய வ்யாபாரின் Project Chairman Vn. KCGF K.K. Thirinath Kumar அவர்கள்.
இந்த கொரோனா காலகட்டம், தொழில் முனைவோர்களுக்கு பல புதிய சவால்களையும், வாய்ப்புகளையும் தந்துள்ளது.
இந்த புதிய வாய்ப்புக்களை நம்மவர்களின் வசமாக்கிட வேண்டும் என்கிற நோக்கதோடு நடைபெற இருக்கிறது 2020ற்கான வைஸ்ய வ்யாபார் – இணைய வாயிலாக. இந்த மாபெரும் இணைய வணிக கண்காட்சியை வைஸ்ய குல மக்கள் அனைவரும் இணைந்து ஆதரிப்போம்.
மேலும் விஸ்டம் குடும்பத்தின் சார்பாக வாசவி கிளப்பின் International President Mr. Thiruveedi Venugopal அவர்களுக்கு, வாசவி கிளப் V502A கவர்னர் Mr. Ponnuru Venkata Subbiah அவர்களுக்கு, வைஸ்ய வ்யாபாரின் Project Chairman Vn. KCGF K.K. Thirinath Kumar அவர்களுக்கு மற்றும் அனைத்து வாசவி கிளப் நிர்வாகிகளுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
Let’s be Vocal for Vysyas’ Businesses.
OurVYSDOM is proud to support this initiative as a Digital and Media Partner. We believe this platform will enable our community entrepreneurs to huddle together and create new opportunities for a brighter future!
Invitation
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
இன்றைய கொரோனா காலத்தில் நாம் அனைவரும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உட்கொண்ட இஞ்சி எலுமிச்சை கஷாயம் செய்யும் வழிமுறையை நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த The Culinary Queen திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள் கற்றுத்தர இருக்கிறார்! வரும் முன் காப்போம்!!
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் வரலாற்றை எழுதியதால் ஆங்கிலேயர்களால் குப்தாஜி நடத்தி வந்த கிரந்த மாலா பத்திரிகை தடை செய்யப்பட்டதும் அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது என்றும் சென்ற பதிவில் பார்த்தோம். அது என்ன என்பதனை இப்பொழுது பார்ப்போம்.
கிரந்த மாலா தடை செய்யப்பட்டதும் வைஸ்யர்களுக்காகவே குப்த மாத பத்திரிகை என்று ஒரு மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். அது 16 வருடங்கள் வெகு சிறப்பாக வெளிவந்தது. அப்போது மிகப் பிரபலமாக இருந்த சுபாஷ் சந்திரபோஸ் நம் நாட்டை விட்டு தலைமறைவாகி சிங்கப்பூரில் இந்தியன் நேஷனல் ஆர்மியை ஆரம்பித்த நேரம். அவரை ஆதரிக்க பலரும் தயங்கிய நேரத்தில் தைரியமாக அவரை ஆதரித்தும் அவரின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதியும் ஆந்திர மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார் குப்தாஜி.
ஆந்திராவில் பிறகு காங்கிரஸ் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றார். பிறகு வைஸ்யர்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட ஹைதராபாத் விமோசன போராட்ட சமிதி என்று ஒன்றை ஆரம்பித்து வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார். அதனால் கைது செய்யப்பட்டு 39 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டார். மேலும் பல தியாகங்கள் செய்த 2000 சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து ஒரு அரிய புத்தகத்தை வெளியிட்டார்.
திடீரென அவருக்கு பொதுவுடமைக் கொள்கையின் மீது அவரின் கவனம் திரும்பியது. எனவே அந்தக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட கம்யூனிஸ்ட் பார்ட்டியில் 1946 ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தார். சுமார் 10 ஆண்டுகள் அந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். பல போராட்டங்களில் கலந்து கொண்டதால் இவர் பலமுறை கைது செய்யப்பட்டு ஐதராபாத், வாரங்கால், குல்பர்கா என பல மத்திய சிறைச்சாலைகளில் கைதியாக தன் வாழ்நாளில் பல வருடங்களைக் கழித்தார்.
இவர் நம் நாட்டில் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பல சங்கங்களை தோற்றுவிக்க காரணமாக இருந்தார். ஆந்திராவில் சிதறியிருந்த வைஸ்யர்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் அவர்களை கலந்துகொள்ள செய்தது இவரின் மிகப் பெரிய சாதனையாகும். அதுமட்டுமல்லாமல் வைஸ்ய இளைஞர்களை ஒன்று சேர்க்க 1939ல் அகில பாரதிய வைஸ்ய யுவஜன சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். பிறகு அகில இந்திய வைஸ்ய சமாஜ் ஒன்றையும் ஆரம்பித்தார். மேலும் ராஷ்ட்ரிய வைஸ்ய சமஸ்தால சமக்யா என்று ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்.
மேலும் வைஸ்யா ஹாஸ்டலின் கௌரவ சூப்பிரண்டன்டாக 20 வருடங்கள் சேவை புரிந்தார்.
அதுமட்டுமல்லாமல் பீகாரில் வசித்துவந்த வைஸ்யர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட வைத்தார். பீகார் அகில இந்திய வைஸ்ய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தலைவராகவும் திகழ்ந்தார். இப்படி பல பொது சேவைகளில் ஈடுபட்டும், அகில இந்திய அளவில் வைஸ்யர்களை ஒன்றுபடுத்தியும், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட போராட்ட வீரர்களை புகழ்ந்தும் தன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதியும் சேவை புரிந்த இவருக்கு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு புதிய எண்ணம் ஏற்பட்டது, அது ஒரு வித்யாசமான சிந்தனை, அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
பண்ருட்டி சொ.முத்துக்குமார்
To be continued…
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
தமிழ் மாதம் ஆனி – தொடங்கிவிட்டது, இம்மாதம் முழுவதும் நமது கோவை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஆலயத்தில் ஆனி மாத பாராயணம் நடைபெற இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்தாலும், நம் வாசவி அன்னையின் மூலமாக மனதால் ஒன்றிணையும் நேரம் இது. ஆம்! நம் கோவை SKPD குழுவினர், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆனி மாத பாராயணத்தை YouTube LIVE வாயிலாக ஒளிபரப்ப இருக்கின்றனர்.
எனினும் YouTube LIVE செய்வதற்கு குறைந்தது 1000 Subscriber ஒரு சேனலில் இருக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு உள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கினை கொண்டு வைஸ்யர்களாகிய நாம் அனைவரும் SKPD Coimbatore YouTube சேனலை மறவாமல் Subscribe செய்வோம்! மனதால் ஒன்றிணைவோம்!! – https://www.youtube.com/channel/UCtBXc2TdRPqFDEz4v0hHZpQ
தமிழகத்தில் உள்ள பல இல்லத்தரசிகளின் சமையல் கலையின் குருவாக திகழும் திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள், சன் டிவியில் உங்கள் மனசிற்கு பிடிச்சது மட்டும், ஜெயா டிவியில் அடுப்பங்கரை முதலிய நிகழ்ச்சியின் வாயிலாக ஆயிரக்கணக்கான ரெசிப்பிகளை கற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும், முப்பதிற்கும் மேற்பட்ட சமையல் குறித்த புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். சுவையான அப்புத்தகங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறுகிறது.
ஆர்ய வைஸ்ய குலத்தை சேர்ந்த திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள் – ஆர்ய வைஸ்ய உணவுகளை பற்றியும், ஆர்ய வைஸ்யர்களின் சமையல் திறனை பற்றியும், VYSDOM Kitchen Champions போட்டியில் பதிவான ரெசிபிகளை பற்றியும் கூறுவதை கேளுங்கள்! Get Inspired!!
கல்வகுண்டல சந்திரசேன குப்தா அவர்கள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் கல்வ குண்டல ராமண்ணா. தாயார் பெயர் லக்க்ஷ்ம்மா. இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றார்.
காந்திஜியின் வழிகாட்டுதலால் நம் நாட்டில் சுதந்திர போராட்டம் இளைஞர்களிடையே கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது நேரம் அது. எனவே இளைஞனான குப்தாவும் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் மாணவப் பருவத்தில் இருக்கும் பொழுதே ஒரு சிறந்த எழுத்தாளர். எனவே தூங்கிக் கிடக்கும் ஆந்திர மக்களை எழுப்ப பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதன் பெயர் கிரந்த மாலா அதன் விலை ஒரு அணா (அதாவது 6 பைசா) எனவே, அது அணா கிரந்த மாலா என்று அழைக்கப்பட்டது.
இதில் இளைஞர்களை எழுச்சிக்கொள்ள செய்வதற்காக பல சுதந்திர போராட்ட வீரர்களின் வீர வரலாற்றை அவர் எழுதினார். இவர் ஆங்கிலம், உருது மற்றும் தெலுங்கில் அற்புதமாக எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போரிட்ட சத்திரிய வம்சத்தில் பிறந்த அல்லூரி சீதா ராமராஜுவின் வரலாற்றை மற்ற மதத்தினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருது மொழியில் அவருடைய வரலாற்றை எழுதினார்.
அதனால் ஆங்கில அரசின் கோபத்துக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டதை தான் நாம் கட்டுரையின் முன் பகுதியில் கண்டோம்.
அல்லூரி சீதாராமராஜு அப்படி என்னதான் செய்தார் என்று பார்ப்போமா? ஆங்கிலேயர்கள் காடுகளின் வளத்தை சுரண்டினார்கள். அதற்கு தடையாக இருந்த மலைவாழ் மக்கள் காடுகளில் நுழைவதை தடுத்தார்கள். மெட்ராஸ் பாரஸ்ட் ஆக்ட் என்கிற சட்டத்தின்படி இனிமேல் காடுகளில் ஆங்கிலேயர்களின் அனுமதி இல்லாமல் மலைவாழ்மக்கள் வாழக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
அதை மீறுபவர்கள் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் போலீசாரால் விசாரணை இன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அநீதியை கண்ட அல்லூரி சீதாராமராஜு பொங்கி எழுந்தார். அந்த மக்களுக்காக புரட்சியில் ஈடுபட்டார். காட்டில் சென்று பிழைப்பை தேடுவது அவர்களின் பிறப்புரிமை என்று முழங்கினார். இவரை மான்யம் வீருடு (காடுகளின் நாயகன்) என்று அழைத்தனர்.
மலைவாழ் மக்களை விசாரணை இல்லாமல் கொன்று அட்டூழியம் செய்த பல ஆங்கில அதிகாரிகளை தேடிப்பிடித்து சுட்டுக்கொன்று பழிக்கு பழி வாங்கினார். அவரின் பெயரைக் கேட்டாலே ஆங்கில அதிகாரிகள் நடுங்கினர். அவரை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. பல முயற்சிகளுக்குப் பின் காட்டில் அவர் பிடிக்கப்பட்டார். பிறகு எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் ஒரு மரத்தில் அவரை கட்டி வைத்து போலீசார் கோழைத்தனமாக அவரைசுட்டுக் கொன்றனர். இந்த வீரச் செயலை செய்த அல்லூரி சீதா ராமராஜூக்கு விசாகப்பட்டினத்திலும், ஹைதராபாத்திலும் பிற்காலத்தில் சிலை வைக்கப்பட்டது. ஆந்திராவில் இவரைப்பற்றிய திரைப்படம் கூட வெளிவந்தது. மத்திய அரசாங்கம் இந்த வீரரின் உருவம் பொறித்த தபால்தலையைக் கூட பின்னர் வெளியிட்டது. இவ்வாறு பிற்காலத்தில் மக்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்தாலும், அக்காலத்திலேயே அல்லூரி சீதாராமராஜுவின் வீரத்தையும், தியாகத்தையும் முதலில் வெளிப்படுத்திய பெருமை நம் குப்தாஜி அவர்களையே சாரும்.
அல்லூரி சீதா ராமராஜூ
ராஜுவின் வரலாற்றை எழுதியதால் இவரின் அணா கிரந்த மாலா தடைசெய்யப்பட்டது. அதற்கு பிறகு அவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அது என்ன என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
பண்ருட்டி சொ.முத்துக்குமார்.
To be continued…
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
பொதுவாக நாம் எல்லோரும் நம் வீட்டு பெண் குழந்தைகள் நமது வீட்டில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பது போலவே புகுந்த வீட்டிலும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், சுய மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதுபோலவே மருமகளை எடுப்பவர்களும் மருமகள் அன்பாகவும், இனிமையாகவும், குடும்ப பாங்குடனும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
இந்த இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதில் இரு வீட்டாரின் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை பற்றி மனவளக்கலை என்ற பெரும் பொக்கிஷத்தைத் தந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியுடன் நீண்டகாலமாக நேரடியாக தொடர்பு கொண்டிருந்த நமது Prof. Dr. Rabindranath அவர்கள் நம்மிடையே ஆழ்ந்த கருத்துக்களை நமக்கு விதைக்க உள்ளார்.
Topic: Role of Character in Matrimony 10th May 2020, 11:00 AM onwards
அழைப்பிதழ்
நம்முடைய ஒவ்வொருத்தரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது நம்முடைய அன்பான கனிவான குணம் தான். நமக்குள் புதைந்து இருக்கும் இத்தகைய குணத்தை மணமும் குணமும் என்ற தலைப்பில் Prof. Dr. Rabindranath அவர்கள் நம்மை சந்தித்து பேச உள்ளார்.
இந்த நிகழ்வில் திரு. B.முத்துவெங்கட்ராம், Mahalakshmi Jewellery, President – Coimbatore Jewellery Manufacturing Association அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்க உள்ளார்.
கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான மூன்று எளிய வழிகள்: