Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: சத்தி குண்டபொங்கலம் (நீர் ஊற்றிய பழைய சாதத்தில் பணியாரம்)
Recipe by: SUBASHINI SATHIANARAYANAN
Ingredients:
1. பழைய சாதம் ஒரு கப். (ஒரு கப் = 250 gms) 2. பச்சரிசி ஒரு கப். 3. வெந்தயம் கால் டீ ஸ்பூன். 4. ஆறு பச்சை மிளகாய். 5. ஒரு அங்குலம் இஞ்சி. 6. சிறிதளவு பெருங்காயம். 7. உப்பு தேவையான அளவு. 8. கடுகு கால் டீஸ்பூன். 9. உளுத்தம்பருப்பு கால் டீஸ்பூன். 10. கடலைப்பருப்பு கால் டீஸ்பூன். 11. கறிவேப்பிலை. 12. இரண்டு பெரிய வெங்காயம். 13. கொத்தமல்லித்தழை. 14. அவல் ஒரு கைப்பிடி அளவு.
Procedure:
வெந்தயம், பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ‌ ஊறவைத்த அரிசி, நீர் ஊற்றிய பழைய சாதம், ஆறு பச்சை மிளகாய், ஒரு அங்குலம் இஞ்சி, சிறிதளவு பெருங்காயம் , உப்பு சேர்த்து, அனைத்தையும் நைசாக, கெட்டியாக அரைக்கவும். அதனை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். பணியாரம் ஊற்றுவதற்கு 15 நிமிடம் முன்னால் , அவல் ஒரு கைப்பிடி அளவு ஊறவைக்கவும். அதனையும் நைஸாக அரைத்துக்கொள்ளவும் . பிறகு அரைத்த அரிசி மாவில், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, தாளிக்கவும். பெரிய வெங்காயம் இரண்டு‌, அரிந்து சேர்க்கவும். அரைத்த அவல் விழுதை சேர்க்கவும். கொத்தமல்லித்தழை சேர்க்கவும். (மாகாளிக் கிழங்கு, தம்டங்காய் காய், சதுர அவரைக்காய் போன்றவை இருந்தால் அவற்றையும் பொடியாக அரிந்து சேர்க்கலாம் ) பின்னர் பணியாரம் ஊற்றவும். தேங்காய் சட்னி ,தக்காளி சட்னி ,வெங்காய சட்னி, இட்லி பொடி, ஆகியவற்றுடன் சாப்பிடலாம். பின்குறிப்பு :- *இந்த உணவு மிகவும் நார்ச்சத்துள்ளதால், இது மலச்சிக்கலையும் உடலில் மந்தத்தையும் நீக்குகிறது. இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கணிசமாக குறைகிறது. இந்த நேரத்தில் உடல் சோர்வு குறைகிறது. இவை ஒவ்வாமை தூண்டப்பட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது*
Total Votes: 1201

Total Views: 7127