Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: தினை அரிசி முருங்கை பிடிச்சலு (Foxtail millet murungai pidichallu)
Recipe by: Vaishnavi
Ingredients:
கடலை எண்ணை-4Tb sp, தினை அரிசி-1கப், சின்ன வெங்காயம்-10 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 விழுது, குண்டு வெல்லம்-1/4 Tsp, கடுகு-1/2 Tsp, சீரகம்-1/2Tsp, முருங்கை கீரை-2 கை பிடி, தேங்காய் துருவல்-4 Tb sp, உப்பு தேவையான அளவு. (Side dish -- மிரிகம்; பூண்டு-20 பல், வரமளகாய்-10, எலுமிச்சம் சாறு, நல்ல எண்ணை, உப்பு தேவையான அளவு)
Procedure:
தினை அரிசியை 4 முறை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊர வைக்கவும். ஊரிய தினை அரிசியை கெட்டியாக அறைத்து 2 கப் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் (கு.வெல்லம்- Optional), உப்பு சேர்த்து கலக்கவும். மண் சட்டியில் செய்க (அடிபிடிக்காமல் இருக்க) க.எண்ணை ஊற்றி கடுகு, சீரகம் பொரிந்ததும், முருங்கை கீரை போட்டு வதக்குக, சி.வெங்காயம் நருக்கியது போட்டு பென்னிறமாக வதக்குக, ப.மிளகாய் விழுது, தேங்காய் துருவல் சேர்க்கவும். அரைத்த மாவை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் பந்து போல் வரும், உடனே தட்டில் வைக்கவும். ஆரியதும், சிறு சிறு பிடிச்சலு போல் செய்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். சுவையான தினை அரிசி முருங்கை பிடிச்சலு தயார். (Side dish - மிரிகம்: பூண்டு, வர மிளகாய், உப்பு அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் ந.எண்ணை + கடுகு தாளித்து ஊற்றவும்.)
Total Votes: 1633

Total Views: 6014