Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: 4 in 1 KOLLU PINDI
Recipe by: Mrs. Samanthakanmani C
Ingredients:
இட்லி புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு, கொள்ளு - 1 ஆழாக்கு, தேவையான உப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய், பெருங்காயம், முருங்கையிலை. தாளிப்பதற்கு - கடுகு, உளுத்தம்பருப்பு.
Procedure:
இட்லி புழுங்கல் அரிசியை முதல் நாள் 2 மணி நேரம் ஊறவைக்கவும். கொள்ளை குறைந்தது 5 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். கொள்ளை கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். பிறகு இட்லி புழுங்கல் அரிசியை கொஞ்சம் குறுணையாக அரைத்து அதை அரைத்த கொள்ளுமாவுடன் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மறுநாள் இந்த மாவை இட்லி வைத்தால் கொள்ளு இட்லி ரெடி. மீதமான இட்லியை தூள் செய்து கொள்ளு இட்லித்தூள் செய்யலாம். இந்த மாவிலேய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் எல்லாம் சன்னமாக அரிந்து மாவில் கலந்து கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவுடன் சேர்த்து சுவையான குழிபணியாரம் செய்யலாம். சிறிது சீரகம், மிளகு, வரமிளகாய், பெருங்காயம் அரைத்து மாவில் கலந்து வைத்துக்கொண்டு அதில் அரிந்த பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, முருங்கையிலை எல்லாம் கலந்து கார அடை செய்யலாம். இவைகளுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி ஏதுவாக இருக்கும். கொள்ளை வைத்து குழம்பு, ரசம், துவையல், சுண்டல், கஞ்சி போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். கொள்ளின் பயன்கள் : இதை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்பு இறங்கி உடல் அதிக பலம் பெறும். " கொழுத்தவனுக்கு கொள்ளு " என்று பழங்கால பழமொழி உள்ளது. கொள்ளை அதிகப்படி உணவில் சேர்த்து பயன் பெறுங்கள். வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
Total Votes: 1422

Total Views: 7414