வாழ்வின் சிகரத்தைத் தொட வழிகாட்டும் “சிகரம் தொடுவோம்” திறன் மேம்பாட்டுப் பட்டறை!

    159

    ​சாதனைகள் புரியத் துடிக்கும் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு உந்துசக்தி தேவை. தன்னம்பிக்கை, சிறந்த திறன் மற்றும் தெளிவான இலக்கு இருந்தால், வாழ்வில் வெற்றி என்னும் சிகரத்தைத் தொடுவது நிச்சயம். அந்தப் பயணத்திற்கு வைஸ்ய சமூக மாணவர்களுக்கு வழிகாட்டி, மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சியே “சிகரம் தொடுவோம்” திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி!

    ​மூன்றாவது வருடமாக தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா இளைஞர் அணி பெருமையுடன் நடத்தும் “சிகரம் தொடுவோம்” – ​ஒரு நாள் பயிற்சியின் மூலம் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் வைஸ்ய மாணவர்கள் கற்றுக்கொள்ளப் போகும் முக்கியத் திறன்கள்:

    • பொதுப் பேச்சுத் திறன் (Public Speaking Skills): மேடைகளில் தயக்கமின்றி தங்கள் கருத்துகளைத் தெளிவாக முன்வைக்கும் ஆற்றல்.
    • ​பயம் நீக்கும் பயிற்சி (Break the Fear): இன்று பல மாணவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருப்பது பயம். அதை முற்றிலும் நீக்கி, தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும் பிரத்தியேகப் பயிற்சி அளிக்கப்படும்.
    • உற்பத்தித் திறன் (Productivity) மற்றும் நேர மேலாண்மை (Time Management): கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, இலக்குகளை விரைந்து அடையும் ரகசியங்கள்.
    • விளையாட்டு மற்றும் ஃபிட்னஸ் (Sports & Fitness): ஆரோக்கியமான உடல் மற்றும் மனதை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்.
    • ​கலாச்சாரம் மற்றும் பண்புக்கூறுகள்: நமது பாரம்பரியமான வைஸ்ய கலாச்சாரம், பண்பாடு, மற்றும் விழுமியங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பு.

    ​இந்தச் செயல்முறைகள் மூலம் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான விதையை விதைத்து, சமூகத்திற்குப் பொறுப்பான மனிதர்களாக வளர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று தமிழ்நாடு ஆரியவைசிய மகாசபா இளைஞர் அணியின் தலைவர் திரு. ரஞ்சித்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

    ​இந்த ஆண்டு, நான்கு சிறப்புமிக்க பயிற்றுநர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வருகிறார்கள்:

    1. ​ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள்: ஸ்ரீ வாசவி பீடத்தின் இரண்டாவது பீடாதிபதி. இவர் நமது வைஸ்ய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்கள் பற்றி சிறப்பான விளக்கங்களை அளிக்கவிருக்கிறார்.
    2. ​திரு. சந்தோஷ் சுப்பிரமணியம்: டிஸ்கவரி லேர்னிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO (Professional Educational Trainer).
    3. மாணவர் ரத்னா டாக்டர் K. கார்த்திக் வேலு: Professional Life Skill Trainer, CEO of One Life One Chance.
    4. திரு. V. பிரதீப்: SoBo Sports நிறுவனத்தின் உரிமையாளர். உடல் மற்றும் மன ஆரோக்கியம் (Physical and Mental Fitness) குறித்து விளக்கவிருக்கிறார்.

    ​இப்படிப்பட்ட சிறந்த ஆளுமைகளுடன் உரையாடி, அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு!

    சிகரம் தொடுவோம் குறித்து தமிழ்நாடு ஆரியவைசிய மகாசபா இளைஞர் அணியின் தலைவர் திரு. ரஞ்சித்குமார் அவர்கள் அளிக்கும் விளக்கத்தை காணுங்கள்:

    இந்த ஆண்டு இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது:

    • சேலம்: டிசம்பர் 28 ஆம் தேதி, வைசியா கல்லூரி (Vysya College, Salem).
    • சென்னை: ஜனவரி 4 ஆம் தேதி, SKPD பெண்கள் கல்லூரி (SKPD Women’s College, Chennai).

    ​இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம், இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
    https://tnevysya.com/Sigaram_Thoduvom.php

    ​மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:
    ​S. சிவகுரு – +91 85085 66900
    ​M. ஹேம்நாத் – +91 74186 31691

    VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

    Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

    Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group