நவபாஷாணம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். அந்த அபூர்வமான, மருத்துவ குணம் கொண்ட நவபாஷாண சிலை உலகப் புகழ்பெற்றது. அதுபோல நவபாஷாணத்தால் ஆன ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, திருவூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பகவத் கீதையை நமக்கு உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணரின் நவபாஷாண சிலையை வடபழனி சித்தரின் நேரடி சீடரும், சித்த வைத்தியருமான திரு. ரமேஷ் குமார் என்பவர் வடிவமைத்துள்ளார்.
‘நவம்’ என்றால் ஒன்பது, ‘பாஷாணம்’ என்றால் விஷம். ஒன்பது வகையான விஷங்களை சித்த முறைப்படி இணைத்து உருவாக்கப்பட்டதே நவபாஷாண சிலை. இந்த சிலைகளுக்கு அபூர்வமான மருத்துவ சக்திகள் உண்டு என்பது சித்தர்களின் கூற்று. பழனி முருகனின் அபிஷேக நீர் அருந்தியவர்களுக்குப் பல நோய்கள் குணமான கதைகள் ஏராளம். அதேபோல, இந்த கிருஷ்ணர் சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக நீரை அருந்தினால், தீராத நோய்களும் தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

மகா கும்பாபிஷேகம் ஒரு சரித்திர நிகழ்வு!
சென்னை மாநகர் ஆர்ய வைஸ்ய மகாசபாவிற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 4, 2025 வியாழக்கிழமை அன்று சென்னை மாநகர் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் அஜந்தா திரு K. K. திரிநாத்குமார் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனுடன், கேட்ட வரத்தை அளவில்லாமல் அளிக்கும் 10 பரிவார தேவதைகளும் அருள்பாலிக்கின்றனர். மேலும், மன அமைதி தேடும் பக்தர்களுக்காக, ஒரு தியான மண்டபமும் அமைக்கப்பட்டு வருகிறது.


ஆலயம் அமைவிடம்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் பாதையில், செவ்வாய்ப்பேட்டை ரோடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp


Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group